முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெக்காவிலிருந்து மதீனா சென்ற இந்திய ஹஜ் பயணிகள் 45 பேர் பேரூந்து தீ விபத்தில் பலி

சௌதி அரேபியா மெக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹஜ் உமாரா யாத்ரீகர்கள்




பயணித்த பேருந்து, மதீனாவில் இருந்து 25 கிலோ மீட்டர். தொலைவில் டேங்கர் லாரியுடன் மோதிய  கோர விபத்தானது நவம்பர் 17, 2025 அதிகாலை ஒன்று முப்பது மணிக்கு தீப்பிடித்ததில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 45 இந்திய ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர். முப்ரிஹாட் அருகே இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.

பேருந்தில் மொத்தம் 46 பேர் பயணித்ததாகவும், மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்ததால், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தும் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்களாவர்.





விபத்து குறித்து ஹைதராபாத் காவல்துறை ஆணையர் வி.சி. சஜ்ஜனார் பேசுகையில்,  "நவம்பர் 9ஆம் தேதி ஹைதராபாத்திலிருந்து சௌதி அரேபியாவுக்கு 54 பேர் ஹஜ் பயணப்பட்டனர். இவர்களில் 8 பேர் தனியாகப் பயணிக்க முடிவெடுத்ததால் தப்பினர். மீதமுள்ள 46 பேர் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பேருந்தில் புறப்பட்டனர். அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர்," என்றார்.


விபத்தில் சிக்கியவர்கள் ஹைதராபாத்தின் மல்லேபள்ளி, ஆசிப்நகர் மற்றும் ஃபாலக்னுமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.  பிரதமர் மற்றும் முதல்வர்  வேதனை








இந்தத் துயரச் சம்பவம் குறித்து நாட்டுத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் தெரிவித்தனர் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "இந்த விபத்து குறித்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். ரியாதில் உள்ள எங்கள் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. சவுதி அரேபிய உயர் அதிகாரிகளுடன் நமது வெளியுறவு அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்," என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.




தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்து, விபத்து குறித்த முழு விவரங்களையும் உடனடியாகக் கண்டறிந்து, தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டார். மத்திய வெளியுறவுத் துறை மற்றும் சௌதி அரேபியத் தூதரக அதிகாரிகளுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "மதீனாவில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நான் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.







விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் அளிக்கவும், உதவவும் உடனடியாக இரண்டு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன:

தெலங்கானா தலைமைச் செயலகம் (ஹைதராபாத்):

உதவி எண்கள்: +91 79979 59754 மற்றும் +91 99129 19545

தெலங்கானா பவன் (டெல்லி):

உதவி எண்கள்: +91 98719 99044, +91 99583 22143, மற்றும் +91 96437 23157

இந்தியத் தூதரகம் (ஜெட்டா):

ரியாதில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் முழு ஆதரவை வழங்குகின்றன. ஜெட்டாவில் 8002440003 என்ற கட்டணமில்லா உதவி எண்ணுடன் 24x7 கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.    

ஹைதராபாத்திலிருந்து சென்றவர்களில் 20 பேர் பெண்கள், 11 பேர் குழந்தைகள்.

ஒரு விபத்தில் உயிர் பிழைத்தால் அது கடவுளின் அருளால் தப்பியதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இது போன்ற சம்பவங்களில் 'கடவுளை' கேட்க,  சார்ந்தோர் இருப்பதே இல்லை. 45 நபர்கள் பேருந்தில் பயணித்தவர்களின் முழுமையான பட்டியல்

பலியானவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் மல்லேப்பள்ளி பஜார் காட் பகுதியைச் சேர்ந்த 16 பேர் உள்ளனர். பஜார் காட்டில் இறந்தவர்கள் ரஹிமுன்னிசா, ரஹ்மத் பி, ஷெஹ்னாஸ் பேகம், கௌசியா பேகம், காதர் முகமது, முகமது மௌலானா, சோயிப் முகமது, சோஹைல் முகமது, மஸ்தான் முகமது, பர்வீன் முகமது, ஜாகியா முகமது, ஷௌகத் முகமது, முகமது, ஜாகத் முகமது, ஃபர்ஹெமன் முகமது, ஃபார்ஹெமன் முகமது,    முகமது அலி. என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

45 நபர்கள் பட்டியல்:

1.இர்பான் அகமது – ஆண்

2.ஹுமேரா நஸ்னீன் – பெண்

3.சபிஹா சுல்தானா – பெண்

4.அகமது ஹம்தான் – ஆண்

5.அகமது இசான் – ஆண்

6.ஷேக் நசீருதீன் – ஆண்

7.பாத்திமா உமைசா – பெண்

8.மரியம் பாத்திமா – பெண்

9.ஷேக் ஜான் உதீன் – ஆண்

10.பாத்திமா மெஹ்ரிஷ் –பெண்

11.ஷாசான் அகமது முகமது – ஆண்

12.ரிடா தசீன் – பெண்

13.ஷேக் உசைருதீன் – ஆண்

14.அக்தர் பேகம் –பெண்

15.அனீஸ் பாத்திமா – பெண்

16 அமீனா பேகம் – பெண்

17.சாரா பேகம் – பெண்

18.கான் சலீம் – ஆண்

19.ஷபானா பேகம் – ஆண்

20.சையத் ஹுசைஃபா ஜாஃபர் – ஆண்

21.ரிஸ்வானா பேகம் – பெண்

22.ஷேக் சலாவுதீன் – ஆண்

23.ஃபரானா சுல்தானா – பெண்

24.தஸ்மியா தஹ்ரீன் – பெண்

25.சுல்தானா சனா – பெண்

26.முகமது அப்துல் காதீர் –ஆண்

27.கௌசியா பேகம் – பெண்

28.பேகம் ஷெனாஸ் – பெண்



29 முகமது அலி – ஆண்

30.ரஹ்மத்தேப் – ஆண்

31.ரஹீம் உன்னிசா – பெண்

32.உர் ரஹ்மான் முகமது சோயப் – ஆண்

33.ராயீஸ் பேகம் – பெண்

34.பேகம் ஷாஜஹான் – பெண்

35.அல் அமுதி சாரா மஹ்மூத் –பெண்

36.முகமது மஞ்சூர் –ஆண்

37.ஜாஹீன் பேகம் –பெண்

38.ஃபர்ஹீன் பேகம் – பெண்

39.பேகம் ஷௌகத் – பெண்

40.பேகம் ஜக்கியா – பெண்

41. பர்வீன் பேகம் – பெண்

42. முகமது மஸ்தான் –ஆண் 

43.முகமது சோஹைல் – ஆண்

44.முகமது மௌலானா –ஆண்

45.அப்துல் கனி அகமது சஹீர் ஷிரஹட்டி –ஆண்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...