முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்ற உத்தரவு வெண்ணைமலை 63-வருட ஆக்கிரமிப்புக் கோவில் நிலம் 560 ஏக்கர் மீட்கத் தீர்வு.

வெண்ணைமலை 63-வருட ஆக்கிரமிப்புக் கோவில் நிலம் 560 ஏக்கர் மீட்கத் தீர்வு. கரூர், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சீல் வைத்ததால் கரூரில் அரசியல் வாதிகள் போராட்டம் காரணமாக சிறிது பதற்றம் நிலவியது


கரூர் மாவட்டம் சின்ன வடுகபட்டி வெண்ணைமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சீல் வைக்க முயற்சித்ததையடுத்து, வீடுகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கரூர் நாடாளுமனற மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக, காங்கிரஸ், பாமக நிர்வாகிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.







கரூர் சின்ன வடுகபட்டியில் வசிப்பவர்கள், 1962 ஆம் ஆண்டு முதல், கோவில் இடத்தை ஊழல் செய்த வருவாய்த்துறை பணியாளர்கள் மூலம் அரசு நிலமெனப் பட்டா பெற்ற நிலையில்  வாங்கப்பட்ட, 560 ஏக்கர் கோவில் நிலத்தில், நிலத்திற்கான பட்டாவும் பெற்றுள்ளனர்.


அதற்கு எந்த விதமான டைட்டில் ஆவணம் அவர்களிடம் இல்லை

இந்த நிலையில், திருத்தொண்டர் அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கோவில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல வழக்குஅ தொடர்ந்தார்.




நிலத்தை மீட்டெடுக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. நிலத்தை மீட்காவிட்டால் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு குடியிருப்பாளர்களுக்கு ஐந்தாம் எண் நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்ற உத்தரவுப்படி இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி ஆக்கிரமிப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் வீடுகளுக்கு சீல் வைக்கத் தொடங்கினர்.




நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று, சின்னவடுகப்பட்டியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ்  பாமக ஆகியவை செய்திருந்தனர்.

அவர்களின் ஆதரவு மற்றும் பலம் காரணமாக

நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று, எதிர்ப்புப் ஆக்கிரமிப்பு பகுதி வாசிகள் வெண்ணைமலை கோவில் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து,  பகுதி நபர்களுடன் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சீல் வைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.





இதற்கிடையில், வியாழக்கிழமை,  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமன்- ஏகாந்தன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியை மீண்டும் தொடங்கினர், மேலும் குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, பாமக மாவட்டச் செயலர்கள் பிரேம்நாத், புகழூர் செல்வம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் அவர்கள் கலந்து கொள்ள அரசியல் காரணங்கள் உண்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்



அங்கு உயர்
நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுவதாக அவர்கள் விளக்கமளித்த போதிலும், போராட்டம் தொடர்ந்தது.

அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பீஹார் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தற்காலிகத் தொழிலாளர்கள் வாடகைக்குத் தங்கியிருந்த சில வீடுகளுக்கும் அலுவலர்கள் சீல் வைத்தனர். அவர்களது உடைமைகளையும்  அகற்றினர். வெண்ணைமலை பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேல், இரண்டு தலைமுறைகளாக கோவில் நிலத்தை ஆக்கிமித்து வசித்து வரும் மக்கள்



கரூர் வெண்ணைமலை முருகன் ஆகிய பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அருகேயுள்ள 550 ஏக்கர் நிலங்களில் ஏறத்தாழ 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆக்கிமித்து வசித்து வரும் நிலையில், அதை அந்த மக்கள் தவறு என உணரவில்லை அவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்றுகூறி வீடுகளை விட்டு அம்மக்களை நீதிமன்றம் உத்தரவு காரணமாக அரசு வெளியேற்றுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் கோபம் அடைந்துள்ளனர்.





அதற்கு சில அரசியல் பகுதி தலைவர்கள் உடந்தை கோவில்கள் நிறைந்த கரூர் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் ஜமீன் உரிமை வழங்கப்பட்டுக் கோவில் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டது. ஜமீன் உரிமை பெற்றிருக்கும் தேவஸ்தானத்திற்குக் குறிப்பிட்ட நிலங்களின் மேல் வரிவசூல் செய்யும் உரிமையானது 1802 முதல் சட்டப்படி வழங்கப்பட்டிருந்தது. அங்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பு திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவணேஸ்வரர் ஆலயம் சார்ந்த நந்தவனமும் தப்பவில்லை ஆக்கிரமிப்பு நபர்கள் பிடியிலிருந்து  குடியிருக்கும் உரிமையானது அனுபவத்திலிருந்த விவசாயிகளுக்கு உறுதி செய்யப்பட்ட நிலம் குத்தகை தேவஸ்தானத்திலிருந்து ஒவ்வொரு வருவாய் வருடத்திற்கும் வரி வசூல் ஜெனத் மற்றும் போஸ்குஷ் முளைப்படி வசூல் செய்யப்படுவதோடு, குத்தகை விவசாயிகளுக்குப் பட்டா வழங்கப்பட மாட்டாது பத்திரப்பதிவும் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்நிலையில் நாடு சுதந்திரம் அடைந்து தனிநபர் கூடுதல் நிலங்களை நிலசா சீர்திருத்தச் சட்டங்கள், ஜமீன் இனாம் ஒழிப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு குடி உரிமை பெற்றிருந்த குத்தகை விவசாயிகளுக்கு கம்யூனிஸ முறை நில உரிமைக்கு ஆலய நிலங்களை தவிர்த்து வழிவகைச் செய்யப்பட்டது. ஆனால் தேவஸ்தான நிர்வாகிகள் சிலர் நில சீர்திருத்தச் சட்டங்களின் பலன்கள் ஆலயத்தைச் சென்றடைய விடாமல் தடுத்து விட்டனர். அதன் காரணமாக அப்பகுதிகளில் ஆக்கிமிப்பு  மக்கள் சட்டப்படி பட்டா பெற லஞ்சம் கொடுத்து தவறாக உரிமை பெற்றிருந்த காரணமாகவே இன்றுவரை சிலர் உள்நோக்கத்துடன் ஆக்கிரமிப்பைத் தொடர்கின்றனர்






நீதிமன்றத்தில் ஆலய நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், அவ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று முடிவு செய்த நீதிமன்றம் குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு நபர்களை வெளியேற்ற வீடுகளுக்கு முத்திரை வைக்கும் பணியை அதிவேகமாகச் செய்கின்ற  நிலை.வெண்ணைமலை முருகன் எனும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்  கரூர் புறநகரில் உள்ள வெண்ணைமலை கிராமத்தில் கோவில் அர்ப்பணிக்கப்பட்டது. தென்னிந்தியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவில் கரூர் - புகளூர் சாலையில் அமைந்தது. புராணம் கூறுவது :- காமதேனு  பிரம்மாவின் கடமைகளை ஏற்று வெண்ணைமலையை உருவாக்கியதாக வரலாறு அமைந்துள்ளது.சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலை கருவூரில் மன்னர் கரிகாலன் அமைத்தார் எனச் சொல்லப்படுகிறது. கோவிலில் ஓர் உயர்ந்த கட்டமைப்பு, மூன்றடுக்கு நுழைவு வாயில் கோபுரம், கருவறைக்கு வழிவகுக்கும் படி உள்ளன. கோவில் காலை 6:30 முதல் 12:00 மணி வரையிலும் மாலை 5 - 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவிலில் நான்கு தினசரி பூசைகளும் பல ஆண்டுகளாக விழாக்களும் நடத்தப்படுகின்றன. பங்குனி உத்திரத் திருவிழா, தை பூசத் திருவிழா, திருக்கார்த்திகைத் திருவிழா  கொண்டாடப்படுகிறது. சுதந்திரமடைந்த பின் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை வாரியத்தால் பராமரித்து நிர்வகிக்கப்படுகிறது.





புராணத்தின் படி, பிரம்மா, படைப்புத் தொழில் கடவுள்  மிகவும் கர்வம் கொண்டிருந்தார். சிவன் அவருக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். பிரம்மாவால் ஒரு கட்டத்தில் அதிக சுமையால் தனது தொழிலைத் தொடர முடியவில்லை. தன் தவறை உணர்ந்து சிவனிடம் நிவாரணம் கோரி வேண்டினார். முருகனை வேண்டி தவம் செய்ய சிவன் அவரை வஞ்சிமலைக்கு அனுப்பினார். தெய்வீக பசுவான காமதேனு பூமியில் உயிரினங்களை உருவாக்க பிரம்மாவின் பாத்திரத்தை ஏற்றது. பசு வெண்ணெய் ( தமிழில் வெண்ணை என்றும் அதன் பாலுடன் புனிதமான தொட்டி என்றும் அழைக்கப்படும் ) மலையை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. அந்த மலையில் பகவான் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். திடீரென அவர் முருகனின் தரிசனம் பெற்று கரூர் மன்னருக்குத் தகவல் தெரிவித்தார். மன்னர் உடனே முருகனுக்கு கோவில் கட்டி, சமுக யந்திரத்தை வைத்து, காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சிலைகளை நிறுவினார் என்பதே     யோகி பகவான்  மலையில் தியானத்திலிருக்கும்போது, அவருக்கு பாலசுப்பிரமணியர் காட்சிதந்து, தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாக அனைவரும் அறியச் செய்யுமாறு கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த பகவான், இது குறித்து கருவூர் மன்னரிடம் கூறினார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து, முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் அமைத்தார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் யந்திரம் அமைத்தார் இறைவன் படைக்கும் தொழிலை தேவலோக பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசியில்லாமல் வாழ்வதற்காக வெண்ணெயை மலையென குவித்தது. அருகிலேயே தேனுதீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது காமதேனு. இதனால் தான் இன்றும் வெண்ணெய் மலை பாறை, கடும் வெயிலிலும் குளுமையுடன் திகழ்கிறது. இவ்விடத்தில் நின்றாலே துன்பங்கள் தொலைந்து பந்தபாசத்தை ஒழிப்பதற்குரிய ஞானம் பிறக்கிறது. இம்மலையில் முருகப்பெருமான் பால சுப்பிரமணியராக எழுந்தருளினார்.        இதில் பொதுநீதி யாதெனில் :- கோவில் வழிபாடு எதிர்ப்பு நிலை கொண்ட பலரும் கோலில் நிலத்தை ஆக்கிமித்து குடியிருக்க யார் வழங்கிய உயிமை முதலில் இந்த ஆககிரமிப்பாளர்களுக்கு தவறாக ஊழல் செய்து பட்டா வழங்கிய ஊழல் அலுவலர் தான் முதல் குறறவாளி அவரது சொத்துக்களை லோக்பால் சடடப்படி பறிமுதல் செய்ய வேண்டும், அரசியல் காரணங்களுக்காக போராடும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் அமைச்சர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அறிந்து மைதி காக்க வேணடும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...