சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையூடாக அமைந்துள்ள இராமச்சந்திரா தெருவிலுஉள்ள மங்கள வில்லா எனும்
அடுக்குமாடிக் குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும் கிரிதர் வீட்டின் பூஜை அறையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தவுடன் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அனல்காற்றுடன் கரும்புகை சூழ்ந்ததனால் 3-வது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், பதற்றத்துடன் மொட்டை மாடிக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்ததும் தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 7 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். மொட்டை மாடியிலிருந்த 6 பேர் 'ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தின் போது 3-வது தளத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் டாக்டர் வரதராஜன் (வயது 72) மற்றும் அவரது மனைவி மலர் ஆகியோர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் இரும்புக் கேட்டை உடைத்து மீட்டனர்.
மூச்சுத்திணறலால் அவதிப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.8 வாகனங்களில் 60 க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது தளத்திலிருந்த மக்களை மீட்க முடியாததால், கிண்டியில் இருந்து ஸ்கைலிப்ட் வரவழைக்கப்பட்டு, மொட்டை மாடியில் இருந்தவர்களை மீட்டனர். 3வது மாடியில் தவித்த வயதானவர்கள் இருவரை, ஜன்னல்களை வெல்டிங் மூலம் உடைத்து பத்திரமாக மீட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.






கருத்துகள்