ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தாகக்கல் செய்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே. ஆர் பெரியகருப்பனை விடுதலை செய்த நீதிமன்றம்
தமிழ்நடு ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கே. ஆர் பெரியகருப்பன் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இருந்தார். அவரது பதவிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2012 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன், அவரது தாயார் கருப்பாயி, மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மாவட்ட முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக் குவிப்பு வழக்கு
ரூபாய்.1.2 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை முநன்மை மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி முன்னிலையில் நடந்தது. விசாரணை நடந்து வந்த காலத்தில் அவரது தயார் கருப்பாயி உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் நேற்று விசாரணைக்கு வந்திருந்தனர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். உடன் மூத்த வழக்கறிஞர் எம். மோகனசுந்தரம் உள்ளிட்ட பலரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.

கருத்துகள்