தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்றும் சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பொதுவில் முன்வைக்கப்பட்டுள்ளன
என கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது இந்த நிலையில்.18 செப்டம்பர் 2021 முதல் 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீதம் மசோதாக்களுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
(இந்த மசோதாக்களில் 95 சதவீதம் மசோதாக்கள் மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன).13 சதவீதம் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன -
என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல்





கருத்துகள்