கோபிச்செட்டிப்பாளையத்தில், நேற்று செய்தியாளர் சந்திப்பில் முன்னால் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய தகவல் ,:
"முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இருந்த போதும், மறைவுக்குப் பின்பும் மூன்று முறையும் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். தகுதி உள்ளவர் என்றால், இந்த சிலுவம்பாளையம் பழனிச்சாமியை ஏன் முதல்வராக்கவில்லை? அந்தளவுக்கு நம்பிக்கையானவர் இந்தப் பழனிச்சாமி.
அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டுமென குரல் எழுப்பிய என்னை, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் இந்த பழனிச்சாமி.
என்னையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கும் இந்த பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா நீக்கினார். கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா என்னையும் நீக்கினார்.
அ.தி.மு.க.,வில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஜெ.ஜெயலலிதா. இப்போது அந்த நிலை இல்லை. இது கட்சியை பலவீனப்படுத்தும்.
என்னை டில்லிக்கு அழைத்ததும் பாரதிய ஜனதா கட்சி தான். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கச் சொன்னதும், பாரதிய ஜனதா கட்சி தான். நானும் அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவும், ஆட்சியைப் பிடிக்கவும் உதவ வேண்டுமென, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
ஆனால், முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த, நீலகிரி மாவட்ட ம் கோடநாடு எஸ்டேட் இல்லத்தில் நடந்த கொலையில், சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. இதற்கான காரணத்தை, சிலுவம்பாளையம் பழனிச்சாமியிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
கொச்சைப்படுத்தியவர் என்னை அமைச்சராக்கியதாக இந்தப் பழனிச்சாமி கூறுகிறார். ஆனால், என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வரானவர் இந்த பழனிச்சாமி. தன்னை முதல்வராக்கிய வி. கே. சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர்.
'கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், 45 ஆண்டுகள் சிற்றரசர் போல வாழ்ந்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என, என் மீது இந்த பழனிச்சாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
'ஆனால், 'எடப்பாடியில் இல்லாத அளவுக்கு, கோபிசெட்டிபாளையத்தில் சாலைகள் சிறப்பாக அமைத்துள்ளீர்கள்' என, அவரே என்னைப் பாராட்டியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கட்சிக்காக உழைத்தவர்களை மறந்து விட்டு, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பணக்காரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர் தான் இந்த பழனிச்சாமி.
நாமக்கல் பிரச்சாரத்தில் பேசிய பழனிசாமி, 'கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது' என்றார். ஆனால், த.வெ.க., பொதுக்குழுவில் விஜய் என்ன பேசினார் என்பதை, அனைவரும் அறிவோம்.
ஒற்றுமை உணர்வுடன் வலிமையாக இருந்தால், நம்மை தேடி மற்றவர் வருவர். ஒருவர் முன்னேற வேண்டுமானால், தன்னுடைய காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. அப்படி செய்தால், இந்த நிலைதான் ஏற்படும்.
சிலுவம்பாளையம் பழனிச்சாமியின் மகன், மருமகன், மைத்துனர் ஆகியோர் தான் கட்சியை நடத்துகின்றனர். அவரது அக்கா மகன் தான் எல்லாம். கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்களிடம் மண்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது."
எனத் தெரிவித்தார். இந்த நிலையில் முன்னாள் எம்.பி., உட்பட 14 பேர் நீக்கம்
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியம் தம்பி சுப்பிரமணியன், கோபி குறிஞ்சிநாதன், செந்தில் என்கிற கோடீஸ்வரன், அருள் ராமச்சந்திரா, கந்தவேல்முருகன், முத்துசாமி, ரமேஷ், அந்தியூர் மோகன்குமார், நாராயணன், கோட்டுபுள்ளாம்பாளையம் மௌதீஸ்வரன், சத்தியமங்கலம் செல்வம், தமிழ்ச்செல்வி, காமேஷ் ஆகியோர், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் யாரும், இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. என- பழனிச்சாமி பொதுச்செயலர், அ.தி.மு.க., என அறிவித்துள்ளார். ஆனால் பழனிச்சாமி அவருக்கு தற்போது நெருங்கி வரும் ஆபத்து அறிந்தாலும் வெகுவாக சமாளித்து பேசுகிறார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கோப்புகள் அந்த பங்களாவுலே இருக்கும்னு நினைச்சித் தான் கொடநாடு கொள்ளை மற்றும் 7 கொலைகள் நடந்திருப்பதாக பேசப்படும் நிலையில்... ஆனால் அதெல்லாம் அதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன் கஸ்டடியிலே போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்தது..அதை டாக்டர் வெங்கடேஷ். மற்றும் TTV தினகரன் ன்ன செய்தனர் என நேற்று முன்தினம் பொடி வைத்து ப் பேசிய போதே அவருக்குப் புரிஞ்சிக்க வேணடாமா..
இப்போது கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணைக்கு அனுப்பனும்னு கே. ஏ.செங்கோட்டையன் கொடி புடிச்சிட்டாரு. துவக்கம் நன்றாகவே இருக்கு.
ஆக. பழனிச்சாமி பைல் எல்லாத்தையும் கொடநாடு பங்களாவிலிருந்து ரெக்கவரி செய்து வைச்சிருக்கேன்னு மாஜிக்களை பழனிச்சாமி மிரட்டிக்கொண்டு இருந்ததால் தான் பலருக்கு அவரிடமிருந்து வெளியே வரப்பயம் காரணம் துவக்க நிலையில் வைக்கப்படும் செக் மேட்
அந்தக் கோப்புகள் எல்லாம் இனிமேல் சிபிஐ வசப்படும் சாமுவேல் மாத்யூ செய்தி உண்மை வெளிவரும்.




















கருத்துகள்