இலங்கையில் டிட்வா புயல் தாக்குதல் 90 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்கின்றனர்.
கடும் பேரிடர்ச் சூழல் காரணமாக, கண்டி, பதுளை, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 90 உயரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அலுவலர்கள் கூறும் நிலை.
கண்டி மாவட்டத்தில் மட்டும் 50 பேர் உயிரிழப்பும் 67 பேர் காணாமல் போனதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்
இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி புயலானது. அதற்கு திட்வா எனப் பெயர்.
கடந்த சில நாட்களாகவே இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மிகுந்த சேதம் ஏற்படடள்ளது. இந்தக் கால கட்டத்தில் 219,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. காலை நிலவரப்படி இலங்கையில் கண்டி மற்றும் மதாலே மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 செ.மீக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது.
கம்மதுவா பகுதியில் 57.8 செ.மீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மஹாவெலி, தெதுரு ஒயா, மஹா ஒயா, காலா ஒயா, மெனிக் கங்கா, மல்வாது ஒயா ஆகிய உப ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக இலங்கையின் நீர்பாசனத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
எனவே, இந்த ஆறுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும், வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயலால் நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் அனுரகுமார திசாநாயக்க













கருத்துகள்