கலப்பை மக்கள் இயக்க கட்சி அடமானம் கரன்சி வருமானம்
நடிகரும், தவெக தலைவருமான நடிகர் விஜய் உள்ளிட்ட பலருக்கு 20 ஆண்டுகளாக பி ஆர் ஒ வாகப் பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். பி.டி.செல்வகுமார் ஒரு திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலராக பல தனியார் சினிமா கம்பெனிகளில் பணியாற்றியவர்.
ராஜகிருஷ்ணபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்த்தவர்.சமூகத்தை சீரழிக்கும் பல சினிமா சார்பாக மஞ்சள் பத்திரிகைகளை வடபழனி கமலா தியேட்டர் எதிரில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் நடத்தி விற்பனை செய்தவர், தனது வாழ்க்கையை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைந்தார் , பின்னர் பி. டி.செல்வகுமாரை தனது மகன் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலராக நியமித்தார் . செல்வகுமார் 2003 ஆம் ஆண்டில் தயாரிப்பிலும் இறங்கினார், டி.பி. கஜேந்திரனின் குடும்ப நாடகமான பண்டா பரமசிவம் (2003) க்கு நிதியளித்தார்.
பி. டி.செல்வகுமார் ஜனவரி 2012 ஆம் ஆண்டு முதல் பல நடிகர் நடிகைகளின் பி ஆர் ஓ வாகப் பணியாற்றத் தொடங்கினார், அப்போது விவேக் நகுல் , சிவா , சந்தானம் மற்றும் பிரேம்ஜி அமரன், பிரியாமணியும் நடிகர்களுடன் இணைந்ததாக படம் எடுக்க முயன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் 2012 ல், பிரேம்ஜியுடன் வினய் ராய், அரவிந்த் ஆகாஷ் மற்றும் சத்யன் ஆகியோர் இடம் பெற்ற புதிய நடிகர்களுடன் படம் மீண்டும் வெளிவந்தது, அதே நேரத்தில் ராய் லட்சுமி படத்தின் முக்கிய நடிகையாக நடித்தார். செல்வகுமாரின் ஒன்பதுல குரு (2013) படப்பிடிப்பு அக்டோபர் 2012 ல் தொடங்கி 2013 தொடக்கத்தில் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியிடப்பட்டது. Rediff.com 5 இல் 2 ஐ வழங்கியது, "முழு படமும் கதைக்களத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் பார்வையாளர்களை சிரிக்க வைக்க ஒன்றாக இணைக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பு போன்றது".
2014 ஆம் ஆண்டில், சிம்பு தேவன் இயக்கிய புலி (2015) திரைப்படத்தில் விஜய் முன்னணி வேடத்தில் நடிக்கும் பணியைத் தொடங்கினார். இந்தப் படம் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. புலியின் தோல்வி பி. டி செல்வகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது, இருப்பினும் அவர் எந்த சூழ்நிலையிலும் படத்தை வெளியிட ஆசைப்பட்டார். அவரது அடுத்த படமான போக்கிரி ராஜா (2016) கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது அவர் திமுகவில் இணைந்த பின்னர் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் :-
விஜய் ஒரு நடிகராக சிறப்பாக பணியாற்றியதால் அவருடன் பயணித்தேன். தவெகவில் விஜய்யின் தந்தையவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தியாகம் செய்தவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை.விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டேன்; விஜயின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை. திமுகவின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்தேன்; நான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்துவிட்டேன்.
நிலவு ஒருநாள் அமாவாசையாகும்... நட்சத்திரம் 15 நாட்களுக்குள் இல்லாமல் போகும்.. அதுபோல அவரும் ஒரு நாள். எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றார். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்.மக்களையும், ரசிகர்களையும் விஜய் சரியாக வழிநடத்த வேண்டும். மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்வாரா என தெரியவில்லை. ஆனால் எனக்கு மக்கள் பணி செய்யவேண்டும். என் உயிர் உள்ளவரை மக்களுக்கு சேவை செய்வேன். விஜய்யை பார்க்க கூட்டம் வரும், ஆனால் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று கனவில் கூட நினைக்க கூடாது. எனக் கூறினார். திமுகவில் இணைந்த அவரது கலப்பை மக்கள் இயக்கத்தினர் விவரம்:-
கன்னியாகுமரி வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் தோப்பூர் வி.அனிதா, மாவட்ட பொருளாளர் விஸ்வை கே.சந்திரன், கலப்பை மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் விஜயன், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாநில இளைஞர் அணிச் யெலாளர் ஜே.ரவிமுருகன், மாநிலப் பொறுப்பாளர் நாகர்கோவில் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணித் த்லைவர் ஜி.சுபின்ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வி.செல்வன்.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏசுதாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெகன், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர் ஜி.செந்தில், மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் கௌதம், சமூக சேவகர் சொர்ணப்பன், திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். இவர்கள் விஜய் இயக்கத்திலிருந்து கடந்த பல ஆண்டுக்கு முன்பே விலகியவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் நடத்தும் லெட்டர் பேடு அரசியல் கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்த் அன்கோ குரூப்க்கு ஜாதிய ரீதியாக வேலை செய்தவர்கள், மேலம் தமிழ்நாடு அரசு சார்பில் மார்ச் மாதம் 5 இம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக அழைக்கப்பட்டுள்ள 45 கட்சிகளின் பட்டியல் வெளியானதில் கலப்பை மக்கள் இயக்கம் இருந்தது, ஆக தற்போது விஜய் இயக்கத்துக்கும் இந்த கலப்பை கட்சிககும் சம்பந்தமில்லை என்பது தெரிகிறது, தேர்தல் நேரத்தில் இதுபோல உள்ள லெடடர் பேடு கட்சிகள் பலவும் பல அமைப்புகளில் இணைவது வாடிக்கை அதுவே மக்களுக்கு வேடிக்கை.









கருத்துகள்