முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழிப்போர் தியாகி எல்ஜி எனும் எல்.கணேசன் காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கண்ணந்தங்குடி அருகிலுள்ள கீழையூர்  தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கணேசன், (வயது 91), உடல் நலக்குறைவால் காலமானார்.


அவரது மறைவுக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த அறிக்கையில்: தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் மறைந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன். மொழிப்போர்க் களத்தில் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட தளகர்த்தர்களில் ஒருவர் எல்.கணேசன், சட்டசபை, பார்லிமென்ட் என முழங்கிய எல்.கணேசனை இனிக் காண முடியாது என்பதை எண்ணும் போதே வேதனை அளிக்கிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். எல்.கணேசன் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார் எனக் கூறியுள்ளார். 1965 ஆம் ஆண்டில் நடந்த  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971 ஆம் ஆண்டில் திமுகவின் மாநில மாணவரணிச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

1993 ஆம் ஆண்டில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வை. கோபால்சாமி என்ற வைகோ தலைமையில் உருவான போது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பணியாற்றினார். தற்போது தஞ்சாவூரில் காலமானார். மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் 2 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநிலங்களவை எம்.பி. என பதவிகளை வகித்துள்ளார் எல்.கணேசன் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவில் இணைந்து, தேர்தல் பணிக்குழுச் செயலாளராக செயல்பட்டார். அரசியல் வட்டாரங்களில்  “எல்.ஜி.” என்றே அறியப்பட்டார். வெற்றிலைப் பெட்டி சகிதம் இருக்கும் அவரை பலமுறை நாம் சந்தித்து பேசியுள்ளோம். அவர் பிரபல சமூகத்தில் பிறந்த போதிலும் சீர்திருத்தக் கொள்கை கொண்ட அரசியல் தலைவராவார்.கடந்த ஒரு வருடமாகவே எல்.ஜி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வெளியில் செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். சமீபத்தில் தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எல்.ஜி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.


அப்போது ஸ்டாலின் எல்.ஜியின் கைகளைப் பற்றிக்கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தி தைரியம் கொடுத்தாராம். என்னை முதன் முதலில் இளந்தலைவர் என அழைத்தவர் எல்.ஜி அண்ணன்தான். இதை நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றாராம் ஸ்டாலின்.தஞ்சாவூர் பாலாஜி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி கமலா தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இன்ஜீனியரான முதல் மகன் எல்.ஜி.அண்ணா திமுக-வில் தஞ்சை மத்திய மாவட்டப் பொருளாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் அல்லது ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட சீட்டுக் கேட்டு வருகிறார். மகள் எல்.ஜி.மாதவி, இருவரும் டாக்டர் 

கடந்த ஒரு வருடமாகவே எல்.ஜி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வெளியில் செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். சமீபத்தில் தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எல்.ஜி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

அப்போது ஸ்டாலின் எல்.ஜியின் கைகளைப் பற்றிக்கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தி தைரியம் கொடுத்தாராம். என்னை முதன் முதலில் இளந்தலைவர் என அழைத்தவர் எல்.ஜி அண்ணன்தான். இதை நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றாராம் ஸ்டாலின்.

திமுக-வில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகப் பதவி வகித்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவக்கல்லூரி சாலை, பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் மட்டுமின்றி பலரும் அவரது உடலுக்கு அணைத்து கட்சி நபர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எல்.ஜியின் மறைவு தஞ்சாவூர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்.ஜி குறித்து திமுக தரப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் 

''கண்ணந்தங்குடியில் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்தவர் எல்.கணேசன். சென்னையில் தங்கிப் படித்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார்.

மறைந்த எல்.கணேசன் ஏராளமான மாணவர்களை ஒருங்கிணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க செய்தார். திமுகவில் மாணவரணி செயலாளராக இருந்தார். இந்தி எதிர்ப்பை வலுவாகப் பின்பற்றி, தொடர் போராட்டத்தை முன்னெடுத்தது, மொழிப்போர் தியாகி என்ற பெயர் கிடைக்க காரணமானது.

அந்தச் சமயத்தில், அண்ணாவிடம் இந்தி எதிர்ப்பு குறித்து கேட்டபோது, 'என் கையில் எதுவும் இல்லை, எல்லாம் எல்.ஜியிடம் உள்ளது' என்றாராம். 1967 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எல்.கணேசன் போட்டியிடுகிறார். சென்னையிலேயே வலம் வந்த எல்.ஜியை மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சொந்த ஊரில் போட்டியிடச் சொல்லி அனுப்பினார்.

அப்போது, மதுக்கூர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் செல்வந்தரான தண்டாயுதபாணி போட்டியிட்டார். எளியவரான எல்.ஜி அவரை எதிர்த்து போட்டியிட்டார். எல்.ஜியிடம் தேர்தல் செலவிற்குப் பணம் இல்லை.

இதையறிந்த கருணாநிதி, மதுக்கூரில் காகிதப்பூ நாடகம் போட்டு அதில் வசூல் ஆன ரூபாய்.4,000 பணத்தை எல்.ஜி கையில் கொடுத்து பிரசாரம் செய்ததுடன், ஜெயிச்சுட்டு வாய்யானு சொல்லிட்டு போனாராம். எல்.ஜியும், எம்.ஜி.ஆர், மாதவனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எல்.ஜியின் வளர்ச்சியில் கருணாநிதி தனி கவனம் செலுத்தினார்.

1987 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைகிறது. எல்.ஜி அமைச்சர் ஆவார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆளுநரைச் சந்தித்து அமைச்சரவைப் பட்டியலை கொடுக்கச் சென்றபோது, 'நீ சட்டத்துறை அமைச்சர்யா'னு சொல்லிவிட்டுப் போனாராம் கருணாநிதி. ஆனால் சில காரணங்களால் அமைச்சர்கள் பட்டியலில் எல்.ஜி பெயர் இடம் பெறவில்லை.

உடனே, காரில் ஊருக்குக் கிளம்பி விட்டார் எல்.ஜி. கார் திண்டிவனத்தைக் கடந்து சென்ற போது காவல்துறை ஆய்வாளர் காரை மறைத்து, முதல்வர் உங்களைத் திரும்பி வரச் சொன்னார் என்றுள்ளனர்.

பதைபதைத்து நேரில் சென்ற எல்.ஜியிடம், 'உன்னை முதலமைச்சரின் பேரவை செயலாளராக்கியுள்ளேன்' என்றாராம். தன் மனம் வருந்தக் கூடாது என்பதை உணர்ந்து கருணாநிதி செய்த செயலை எண்ணி கைகளைப் பற்றிக் கொண்டாராம் எல்.ஜி.

கட்சி பொதுக்குழுக்களில் முரசொலி மாறன் சில கருத்துக்களை முன்வைப்பார். முரசொலி மாறன், கருணாநிதியின் எண்ணத்தைப் பேசக்கூடியவர் என்பதால் எதிர் கருத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். ஆனால் எல்.ஜி, முரசொலி மாறன் பேசியதில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படையாக எடுத்து வைப்பாராம்.

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கருணாநிதியுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக வைகோவுடன் சென்று மதிமுகவில் இருந்தார். எதிர் அணியில் இருந்தாலும் கருணாநிதி, எல்.ஜி மீது தனிப்பட்ட முறையில் பாசம் காட்டினார்.

பின்னர் மீண்டும் கலைஞர் கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டவருக்கு உரிய அங்கீகாரம் தந்தார் கருணாநிதி. கல்வி ஆற்றல், பேச்சாற்றல் மிக்க எல்ஜியின் பேச்சை கருணாநிதியே பலமுறை ரசித்து பாராட்டியிருக்கிறார்.மொழிப்போர் நடத்திய எல்.கணேசனுக்கு இதய அஞ்சலி செலுத்தும் பலரில் 

1986 ஆம் ஆண்டு நிகழ்வு இது மாதத்தில் ஐந்தாறு நாட்கள் தஞ்சாவூர் அசோகா விடுதியில் தங்குவது நமது பத்திரிகை நண்பர் ஒருவரது வழக்கம். அங்கே எல்.ஜி க்கு  நிரந்தரமாகவே ஒரு அறை இருந்தது.  வெற்றிலைப் பெட்டி சகிதம் காட்சியளிப்பார். கட்சிக் காரர்களும் ,அப்போது நகர திமுக செயலாளராக இருந்த பூபதியும்  ( அஞ்சுகம் பூபதி அவர் மகள் எனக் கருதுகிறேன் ) அவரைச் சந்திக்க வழமையாக வருவதுண்டு.

 அப்போது அந்த விடுதியில் ஒரு அய்யர் மேலாளராக இருந்துள்ளார். அவரைப் பொறுத்த வரை பூபதியும் எல்.ஜி யும்  'அப்போது அவருக்கு தீய சக்திகள் ஆனால் அரசியல் என்பது சிலரை மட்டுமே வளப்படுத்தி பலரை கீழே தள்ளி விடும் அதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உள்ளிட்ட பலர் உண்டு ஆனால் எல்ஜி இல்லாமல் தஞ்சாவூர் அரசியல் கடந்த 40 ஆண்டுகள் நடக்கவில்லை என்பதே உண்மை.'.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...