முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

த.வெ.க.வேட்பாளர்களை இனி தமிழகத்தின் காப்பாளர்களெனத் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் த.வெ.க. வேட்பாளர்கள். இல்லை தமிழகத்தின் காப்பாளர்கள் என, விஜய் அறிவிப்பு,   


   மூன்று முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் 23 பெண்களும் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார். அதில் பல்லவி, காமாட்சி, சத்யபாமா, தாஹிரா, சிந்தாமணி, சிந்து, கமலி, சுஜாதா, கலைச்செல்வி சத்யபாமா,கமலி,விஜயலக்ஷ்மி என பலர் 


த.வெ.க., சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய, அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலர் அருண்ராஜ் IRS தலைமையில், 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளைப் பெற்று, தேர்தல் அறிக்கையை தயார் செய்கிறது. அதேபோல், இணையதளம் வழியாகவும் கோரிக்கைகள் பெறப்படுகின்றன.


இந்த நிலையில்,ஏப்ரல் 8 ஆம் தேதி, த.வெ.க.,வின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த அறிக்கையில், இளைஞர்கள், பெண்களைக் கவரும் வகையில், 10 வாக்குறுதிகள், இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல், த.வெ.க.,வின் முழு தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி, இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற உள்ளதாகத் தகவல் 234 தமிழ்நாடு தொகுதிகளில் இரண்டில் போட்டியிடும், நடிகர் விஜய்,




விபரம் வருமாறு :- பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு:- சி. ஜோசப் விஜய்,தியாகராயநகர்:-
புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூர்:-வெங்கட்ரமணன், வில்லிவாக்கம்:- ஆதவ் அர்ஜூனா, கோபிசெட்டிபாளையம் :- கே.ஏ.செங்கோட்டையன், திருச்செங்கோடு:-டாக்டர்.கே.ஜி.அருண்ராஜ், திருப்பரங்குன்றம் :- சி.டி.ஆர்.நிர்மல்குமார்




குமாரபாளையம்:- விஜயலட்சுமி, திட்டக்குடி:- ராஜசேகர், சைதாப்பேட்டை:- அருள்பிரகாசம், வால்பாறை:- ஸ்ரீதரன், எழும்பூர்:- ராஜ்மோகன், லால்குடி:- கு.ப.கிருஷ்ணன், திருப்பூர் வடக்கு:- வி.சத்தியபாமா, ஆயிரம் விளக்கு:- ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர்:- வி.எஸ்.பாபு, ஆர்.கே.நகர்:-மரியவில்சன், கும்மிடிப்பூண்டி:- விஜயகுமார், பொன்னேரி:- எம்.எஸ்.ரவி, திருத்தணி:- சத்தியகுமார், திருவள்ளூர்:- டி.அருண்குமார், பூந்தமல்லி:- ஆர்.பிரகாசம், ஆவடி:- ரமேஷ்குமார், மதுரவாயல்:- பி.ரேவந்த் சரண், அம்பத்தூர்:- பாலமுருகன், மாதவரம்:- எம்எல் விஜய் பிரபு, திருவொற்றியூர்:- செந்தில்குமார், திருவிகநகர்:- எம்.ஆர்.பல்லவி, இராயபுரம்:- கே.வி.விஜய் தாமு,






துறைமுகம்:- சினோரா பி.எஸ்.அசோக், சேப்பாக்கம்:- டி.செல்வம், அண்ணாநகர்:- வி.கே.ராம்குமார், விருகம்பாக்கம்:- சபரிநாதன், வேளச்சேரி:- ஆர்.குமார், சோழிங்கநல்லூர்:- சரவணமூர்த்தி, ஆலந்தூர்:-எம்.ஹரிஸ், ஸ்ரீபெரும்பதூர்:- தென்னரசு, பல்லாவரம்:- ஜெ.காமாட்சி,
தாம்பரம்:- டி.சரத்குமார், செங்கல்பட்டு:- எஸ்.தியாகராஜன், திருப்போரூர்:- விஜயராஜ், செய்யூர்:- கே.மோகன்ராஜா, மதுராந்தகம்: எழில் கேத்ரின், உத்திரமேரூர்:- முனிரத்தினம், காஞ்சிபுரம்:- ஆர்.வி.ரஞ்சித் குமார், அரக்கோணம்:- வி.காந்திராஜ், சோளிங்கர்:- ஜி.கபில், காட்பாடி:- எம்.சுதாகர், இராணிப்பேட்டை:- தாஹிரா, ஆற்காடு:- விஜய்மோகன், வேலூர்:- வினோத்கண்ணன், அணைகட்டு:- வேல்முருகன், கே.வி.குப்பம்:- தென்றல்குமார்,




குடியாத்தம்:- கே.சிந்து, வாணியம்பாடி:- சையத்புர்ஹானுதீன், ஆம்பூர்:- இம்தியாஸ், ஜோலார்பேட்டை:- முனிசாமி, திருப்பத்தூர்:- திருப்பதி, ஊத்தங்கரை:-பி.குமரவேல், பர்கூர் :- முரளிதரண், கிருஷ்ணகிரி :- முகுந்த் ஆர்.பாண்டியன், வேப்பனஹள்ளி :-எஸ்.ஆர்.சம்பங்கி, ஓசூர் :- அம்ரீஸ், தளி:-  ஜி.சுரேஷ், பாலக்கோடு:- ஆர்.கோபி, பென்னாகரம்:- ஜி.கஜேந்திரன், தருமபுரி:- எம்.சிவன், பாப்பிரெட்டிபட்டி:- திலகவதி, அரூர்:- ராகேஷ், செங்கம்:- கே.பாரதிதாசன், விக்கிரவாண்டி:- ஏ.விஜய் வடிவேல், திருக்கோவிலூர்:- பரணிபாலாஜி, உளுந்தூர்பேட்டை:- சுதாகர், ரிஷிவந்தியம்:- அசோக்குமார், சங்கராபுரம்:- ஏ.ஜெகதீசன், கள்ளக்குறிச்சி:- அருள் விக்னேஷ், கெங்கவல்லி:- சுஜாதா, ஆத்தூர் (சேலம்):- செல்வபாரதி,
ஏற்காடு:- லட்சுமி,ஓமலூர்:-அதியமான், மேட்டூர்:-செல்வம், எடப்பாடி:- அருண்குமார், தாராபுரம்:-கௌரி சித்ரா, காங்கேயம்:- மணி, பெருந்துறை:-அருணாசலம், பவானி:-பாலகிருஷ்ணன், அந்தியூர்:- விஜய் வெங்கடேஷ், பவானிசாகர்:- வி.பி.தமிழ்செல்வி, உதகமண்டலம் :- ஆர்.இப்ராஹிம், கூடலூர்:-தீபக் சாய் கிஷோர், குன்னூர்:-தங்கராஜூ,


மேட்டுப்பாளையம்:-சுனில் ஆனந்த், அவிநாசி:- எஸ்.கமலி, திருப்பூர் தெற்கு:-எஸ்.பாலமுருகன், பல்லடம்:-  கே.ராம்குமார், சூலூர்:-  என்.எம்.சுகுமார், கவுண்டம்பாளையும்:- ஆர்.டி.கனிமொழி, கோயமுத்தூர் வடக்கு:- சம்பத்குமார், தொண்டாமுத்தூர்:-சதீஷ் ராஜூ, கோயமுத்தூர் தெற்கு:- வி.செந்தில்குமார், சிங்காநல்லூர்:- கிரிபிரசாத், கிணத்துகடவு:-கே.விக்னேஷ், பொள்ளாச்சி:- ஜி.ராமநாதன், உடுமலை பேட்டை:-ஜி.எஸ்.சங்கர், மடத்துகுளம்:- திருமலை, ஒட்டன்சத்திரம்:-பிரவீண்குமார், ஆத்தூர் (திண்டுக்கல்):-மோகன், நிலக்கோட்டை:-கலைச்செல்வி நத்தம்:- ஆர்.அய்யனார், திண்டுக்கல்:-ரமேஷ், வேடசந்தூர்:-நசீர் ராஜா, அரவக்குறிச்சி:-நாகஜோதி, கார்த்திகேயன், கரூர்:- மதியழகன், கிருஷ்ணராயபுரம்:- மதன் குளித்தலை:- பாலசுப்ரமணி,

மணப்பாறை:- கதிரவன், ஸ்ரீ ரங்கம்:-ரமேஷ், திருச்சிராப்பள்ளி மேற்கு:- இ




ராமமூர்த்தி, திருவெறும்பூர்:- நவல்பட்டு விஜி, மண்ணச்சநல்லூர்:- சரவணன், முசிறி:-விக்னேஷ், துறையூர்:- இரவிசங்கர், அரியலூர்:- சிவகுமார், பெரம்பலூர்:-சிவக்குமார், குன்னம்:- ரேவதி, ஜெயங்கொண்டம்:- கவிதா ஜி.ராஜேந்திரன், விருத்தாசலம்:-விஜய், நெய்வேலி:- ஆனந்த், பண்ருட்டி:- எம்.மணிகண்டன், கடலூர்:-ராஜ்குமார், குறிஞ்சிப்பாடி:- ராஜ்குமார், புவனகிரி:- மகாலிங்கம், சிதம்பரம்:-என்.பாரி, காட்டுமன்னார்கோவில்:-சீனிவாசன், சீர்காழி:-கோபிநாத், மயிலாடுதுறை:-சி.எஸ்.ஹரூண் ரஷீத், பூம்புகார்:- விஜயாலயன், உள்ளிட்ட 234 தொகுதி வேட்பாளர்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாண்டிச்சேரி யூனியன் பிரதேச 30 வேட்பானர்களையும் முறையாக அனுமதி கிடைக்காத நிலையில் 500 கட்சி நபர்கள் கலந்து கொண்ட நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் உள்ள ஹாலில் அறிமுகம் செய்து பேசினார் அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் சிறப்புத் தேர்தல் வாக்குறுதிகள்,




 போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு தமிழ்நாட்டைப் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்குடன் போதைப் பொருட்கள் உள்வரவுகளைத் தடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க கடுமையான சட்டம் மற்றும் பிரத்யேக அணுகுமுறைகள் கையாளப்படும். பொது விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்படும்.

கல்வி உத்தரவாதம் தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு மாணவ, மாணவியரும் நிதி பற்றாக்குறையால் உயர் கல்வி பெறாமல் போக்ககூடாது. எனவே, 12 ஆம் வகுப்புக்குப் பிறகு ஆராய்ச்சிக் கல்வி வரை படிக்க ரூபாய் .20 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு  தமிழ்நாடு ஆட்சேர்ப்பு - அரசு வேலை என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு என்பதால், அந்த நடைமுறைகளில் உள்ள குறைகளை களைய மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்பு அட்டவணை டிஎன்பிஎஸ்சி மூலம் உருவாக்கப்படும். டிஆர்பி, டிஎன்இபி ஆட்சேர்ப்புகளை 365 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் வேலைவாய்ப்பு தாமதச் சூழல் நிதி உதவி படித்த இளைஞர்களுக்கு 29 வயதுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லை என்றால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 4000 ரூபாய், டிப்ளோ முடித்தவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் இளைஞர் நல நிதி வழங்கப்படும்.



வெற்றி தொழில் பயிற்சி உத்தரவாதம் ஆண்டுதோறும் 5 லட்சம் தொழில் பயிற்சிகள் வழங்க அரசு மற்றும் தனியார் சிறுகுறு நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய், ஐடிஐ டிப்ளோமா 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உள்ளூர் ஆட்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் தொழில் முனைவோரை உருவாக்க 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி நமது ஊரில் நமது தமிழ்நாட்டைச் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு கொடுக்க,  தமிழ்நாடு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் திட்டத்தின் கீழ் 75 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அந்த தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி 2.5 விழுகாடு மானியம், 5 விழுக்காடு மின் கட்டணம் மானியம் கொடுக்கப்படும்.

இளைஞர்கள் பங்களிப்பு பஞ்சாயத்து, நகராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் முதல்வர் சேவை மக்கள் நண்பர் என்ற 5 லட்சம் பதவிகள் உருவாக்கி, மக்களுக்கான சேவைகள் அவரவர் வசிப்பிடங்களிலேயே  வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் உள்ள இளைஞர்கள் பங்காளருக்கு 18000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு வளர்ச்சித் திட்டங்கள், நேரடியாக பாதிக்கும் இளைஞர்களை கருத்துகளை முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரம் கொண்டவகள் நேரடியாக தெரிவிக்கும் தளமாக இருக்கும்.



படைப்பாளிகள் தொழில் முனைவோர் திட்டம் - இத்திட்டத்தின் கீழ் 500 படைப்பாளி பள்ளிகள் நிறுவப்படும்,  வரலாறு, பாரம்பரிய அம்சங்களை உலக அரங்கில் கொண்டு செல்ல, தொழில் முனைவோர் திட்டம் டிஜிட்டல் கூட்டாண்மைதிட்டம் முன்னெடுக்கப்படும். மேலும், இத்திட்டத்துக்கு தொடக்க மூலதனம் அரசு கொடுக்கும் எனவும் விரைவில் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தவெக சார்பாக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.ஜனநாயகத்தின் நான்காம் தூணாக சமூக அக்கறையுடன் நம்முன் ஒரு கேள்வி?யாரால் நல்லாட்சி தரமுடியும், நேர்மையை நிலைநாட்ட முடியும் ! இதற்கு முன்  ஆட்சி   செய்த இரண்டு பெரிய ஊழல் கட்சிகளா? இல்லை,  கொள்கை மூலம் ஆர் எஸ் எஸ் அடித்தளமாக தமிழ்நாடடில் மூன்று கோஷ்டிகளாகவும் புதிய சினடிகேட் அமைத்து செயல்படும் பாஜகவை அதிமுகவும், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை பாஜகவும் தற்போது ஏமாற்றி ஒருவர் முதுகில் மறறவர்கள் சவாரி செய்ய முயல்வதா? இல்லை மூன்று தலைமுறை ஒரே குடும்பம் பல லட்சம் கோடிகள் சுருட்டி வாழும் கட்சியா?அடுத்த ஜந்தாண்டு காலம் உலகம் முழுவதும் தமிழன் பெயரைக் கூறி  ஏமாற்றி வசூல் செய்து திண்ணும் சில நபர்களின் கைக்கூலியாக காலம்சென்ற நடிகர் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த ஒரு நடிகர்,  மர்மமாகக் கொலையான சுப முத்துக்குமார் துவங்கி நடத்திய ஒரு கடசியைக் கைப்பற்றி வைத்துள்ள காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் டாக்டர் கா.காளிமுத்துவின் இரண்டாவது மனைவி மனோகரி டீச்சருக்கு மருமகன் இளையாங்குடி அரணையூர் சீமான் எனும் சைமன் செபஸ்தியானா? இங்கு நல்லாட்சி தருவார்? யோசிக்க வேண்டிய நேரமிது , ''இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் சொல்லுங்க…சார்’’ மனச்சாட்சியோடு 




இந்தக் கேள்வி நம்மை நோக்கி எழுப்பப்படும் போது  கேட்பவர் நம் மீது வைத்துள்ள பெருமதிப்பினால் கேட்டாலும் இது நமக்கு உடன்பாடில்லை!

'யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்?' எனச் சுயமாக முடிவு எடுக்க முடியாத ஒரு படித்த கேள்வியாளரின் அறியாமை மீது தான் நமக்குக் கோபம் வருகிறது.

ஒருவர், 'தான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்' என்ற முடிவை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், இது போன்ற  அறியாமைக் கேள்வி தேர்தலின் போது மட்டுமே அந்த நபர்  நாட்டு நலன் குறித்து அக்கறைப்படுபவராக இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியாகும்.

ஒரு நல்ல கட்சி எது?  என்பது குறித்தும், ஒரு நல்ல தலைவர் யார்? என்பது குறித்தும், நல்ல வேட்பாளர் யார் என்பது குறித்தும் எந்தவிதத் தேடலோ, அக்கறையோ இல்லாமல் நாட்டில் நம்மைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் மீது எந்தப் பார்வையும் இல்லாமல், தேர்தல் நேரத்தில் மட்டுமே ஒருவர் அக்கறைப் பட்டால் அவர் கண்டிப்பாக ஐந்து வருடங்கள் ஏமாற்றப்படுவார்.



மக்களின் இந்த அறியாமை மீது தான் அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களுக்காக கருத்துருவாக்கம் செய்பவர்களும் எளிதில் சவாரி செய்கிறார்கள்.  பணத்தை மட்டுமே வைத்து வெற்றி பெற முயலும் பலரும்.

அதே சமயம் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தக் கட்சி கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற வேகம் கொஞ்சம் அரசியல் அக்கறை கொண்ட மக்களிடையே மட்டுமே எழும். அது தான் 1972 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் மூலம் 1977 வரை திமுக ஆட்சியை மாற்றிய சர்க்காரியா கமிஷன் ஊழல், திமுகவை நிரந்தரமாக எம்ஜிஆர் மரணம் வரை ஆட்சிக்கு வரவிடாமல் வீழ்த்தியது.

1996 ஆம் ஆணடு தேர்தலில் செல்வி ஜெ.ஜெயலலிதாவம் உடனிருந்து ஆட்சி நடத்திய அவர் உடனபிறவா சகோதரி வி.கே.சசிகலாவும் சேர்ந்த அணைத்து அமைச்சர்களும் அடித்த கொள்ளைகளும் ஊழல்களும் தான் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மக்களிடையே அப்போது வலுப்பெற்றது.  காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைபோல நடிகர் ரஜினிகாந்த் குரல் அமைந்தது.

1996 ஆம் ஆணடில் கிடைத்த மக்கள் நம்பிக்கையை அடுத்த ஐந்தாண்டுகளில் திமுகவும் தவறு செய்து இழந்தது. 'மீண்டும் செல்வி ஜெ.ஜெயலலிதாவே தேவலை' என்ற மனநிலைக்கு 2001-ஆம் ஆண்டில்  மக்கள் வந்தனர்.

2001-ஆம் ஆண்டில்  கிடைத்த மக்கள் நம்பிக்கையை அடுத்த ஐந்தே ஆண்டில் செல்வி ஜெ.ஜெயலலிதாவும் ஆணவம் மற்றும் அதிகாரம் மூலம் ஊழல் செய்து சிதைத்துக் கொண்டார்! 

2006-ஆம் ஆண்டில் திமுக பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு வெற்றியைப் பெற்று மற்ற கட்சிகள் ஆதரவுடன் நடத்திய ஆட்சி மீண்டும் மக்கள் கோபத்தை பெற்றது.







2011-ஆம் ஆண்டில் செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது என்பது அன்றைய தேமுதிகவின் நடிகர் விஜயகாந்த் கூட்டணியால் தான்.

ஆக, 2006-ஆம் ஆண்டில் திமுகவும், 2011-ஆம் ஆண்டில் அதிமுகவும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் பலம் குறைந்தவர்களாவே இருந்தனர்.

மாற்று அரசியலாக ஒரு பகுதி மக்களால் பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் ஏமாற்ற அரசியலாகிவிட்டது.

2011 ஆம் ஆண்டு துவங்கி 2016 ஆம் ஆண்டு வரையிலான காலகட்ட செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சியே. கட்டற்ற ஊழலும், இயற்கை வள அழிப்பும் நடந்த ஆட்சி மட்டுமல்ல, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசிய ஆட்சி. அதில் விலையான பலர் தற்போது அரசியல் அதிகார வாழ்வை இழந்தவர்கள்,  அடிமைத்தனத்தை ஆட்சி நிர்வாகத்திலும், சமூகத் தளத்திலும் அழுத்தமாக விதைத்த ஆட்சி.



1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்ட ஊழல்களுக்கான தீர்ப்பு 2001க்குள் விரைந்து நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டிருந்தால் அதிமுகவின் விஸ்வரூப ஊழல் அரசியல் தொடர்ந்திருக்காது. அதே போல 2001  ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெ.ஜெயலலிதா முந்தைய திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்கு பதிந்து தண்டித்திருந்தால் திமுகவின் அரசியலும் முடிந்திருக்கும். ஆனால் செல்வி ஜெ.ஜெயலலிதாவோ பேர அரசியல் செய்து ஆதாயமடைந்தார். 

அதற்குப் பிறகு அதே பாணி அரசியலைத் தான் அடுத்து வந்த திமுகவும் செய்தது.

தற்போதைய ஐந்தாண்டு கால ஆட்சியிலும் முதல்வர் மு. க.ஸ்டாலின் அப்படியே செல்வி ஜெ.ஜெயலலிதா பாணி அரசியலையே செய்து அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆதாயம் பெற்று எந்த ஒரு ஊழல்வாதியையும் தண்டிக்கவில்லை என்ற குற்ளச்சாட்டும் உள்ளது.

கடந்த ஐந்தாண்டு கால மத்திய, மாநில  அரசியல் போக்குகள் பற்றி  ஆயிரத்துக்கு மேற்பட்ட தகவல் உண்டு அதை அறிந்தவர்கள் நம்மிடம் யாருக்கு ஓட்டுப் போடுவது என ஒருபோதும் கேட்கமாட்டார்கள். நிச்சயம் அவர்களால் சுயமாக ஒரு முடிவுக்கு வர முடியும்.

''யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்?''

என்ற கேள்வி எழும் போதெல்லாம் இங்குள்ள பெரும்பாலான பெரிய மனிதர்கள் மக்களுக்கு சொல்வது;

''இருப்பதிலேயே குறைந்த தீமை உள்ள நபரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்  தான் நாம் இருக்கிறோம். ஆகவே, இவருக்கு போடுங்கள், அவருக்கு போடுங்கள்..'' எனத் தேர்தலுக்கு தேர்தல் ஒருவரை அடையாளப்படுத்துகிறார்கள்.

’இருப்பதிலேயே  தீமை குறைவு’ என்பது தேர்தல் நேரத்து நியாயமாக அல்லது சமாதானமாகவே.. தொடர்வதற்கு யார் காரணம்? 





''ஏன் சரியான தலைவர்கள் நமக்கு கிடைப்பதில்லை..?''

சரியான தலைவர்களை தேடும் தேடலே பெரும்பாலான மக்களிடம் இல்லை. மக்களுக்காக  எளியோருக்காக  போராடுவோரை ஆதரிக்கும் பண்பும் நம்மிடையே இல்லை. அதனால், நல்ல போராளிகள் மக்கள் ஆதரவின்றி ஓய்ந்து ஓரமாக கரை சேர்ந்துவிடுகின்றனர்.

மக்கள் எவ்விதமோ..அதற்கு தக்கவே தலைவர்களும் அவர்களுக்கு அமைவார்கள்!

மக்கள் வறுமையில் வாடிய காலத்தில் கூட கர்ம வீரர் கு.காமராஜர் எந்த இலவசங்களைச் சொல்லியும் ஆட்சிக்கு வரவில்லை. அவர்  நீரணைகளையும், தொழிற்சாலைகளையும், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளையும் உறுவாக்கினார். மதிய உணவுத் திட்டத்தை கூட மிகவும் ஏழை மாணவர்களுக்கு தான் அமல்படுத்தினார். 

இன்றைக்கு ஒரு நடிகைக்கு ஆதரவாக கார் ரேஸ் நடத்தி பலகோடி செலவு செய்தவர்கள், ஒரு பக்கம், தங்கள் தலைவி இல்லமான கோடநாட்டிலேயே கொலை கொள்ளை செய்தவர்களைக் கண்டு கொள்ளாதவர்கள் உள்ளிட்ட நபர்கள் கடசி ஒரு பக்கம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவித்தே தேர்தலை எதிர் கொள்கிறார்கள் என்றால், மக்களின் யோக்கியதை இவ்வளவு தான் என்று அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

எனக்கு வேலை கொடு,  நியாயமான சம்பளம் கொடு. இலவசம் வேண்டாம்.

எனக்கு கல்வி கொடு, கல்விக்குப் பணம் தராதே. நல்ல பள்ளிகளை, கல்லூரிகளை உருவாக்கு.

ஏழை,எளியோர் அனைவருக்கும் கட்டணமில்லாத தரமான மருத்துவத்தை உத்திரவாதப்படுத்து.

'பணத்திற்கு ஓட்டு என்றால், அது நேர்மைக்கு வேட்டாகும்… என்ற தெளிவில்லாதவர்களிடம் பேசிப் பயனில்லை. மக்கள் பணம் பெறும் ஊழல் வாதிகளாக இருக்கும் வரை நல்ல அரசியல் தலைமை அமையாது என்ற நிலை இந்தத் தேர்தலில் மாறட்டும்.பொதுநீதி யாதெனில் :-தவெக தலைவர் நடிகர் விஜய் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு பொதுவெளிகளில் தோன்றும் போது  தொண்டர்களும், இளைஞர் கூட்டமும் அவரைச்  சூழ்ந்தால் அந்தப் பெருங்கூட்டத்தை தற்குறிகள் என்று நா கூசாமல் இழிவு படுத்திக் கொண்டிருக்கிறது  ஒரு கும்பல்!

சரி அவர்களெல்லாம் தற்குறிகளாகவே இருக்கட்டும்; 

அப்படியென்றால், நேற்று தலைமைச் செயலகத்துக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வந்தபோது அவரைச் சூழ்ந்து கொண்டு ஒரு அடி கூட நகர விடாமல் செய்த அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொள்ளும் அலுவலர்களும் அதிகாரிகளும், செய்தியாளர்களும் யார்?

தொண்டர்கள் தற்குறி என்றால் இவர்கள் யார்? இது தான் வாக்கு வங்கி, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற கவர்ச்சி மிக்க தலைவர்கள் இடத்தை அதிமுக எடப்பாடி கே பழனிசாமியோ, அல்லது திமுக மு.க.ஸ்டாலினோ எட்டவில்லை என்பதே அந்த வெற்றிட எதிர்பார்ப்புகள் தான் எந்த லாபமும் இல்லாமல் கூடும் மக்கள். அதைத்தான் தேர்தல் முடிவு உணரத்தும்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...