முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல நடிகர் அஜீதகுமார் தாயார் காலமானார் சிந்தி முறைப்படி இறுதிச்சடங்கு

தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின்   தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை

இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.  S.அனுப்குமார்,  S.அஜித்குமார், S.அனில்குமார்,

My deepest condolences to you and your family.She has raised great human beings!  இந்த நிலையில் சென்னை  வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு ,திருவான்மியூர்,   அஜீத்குமார் தாயார் வசித்து வந்த இல்லத்திலிருந்து  நடிகர் அஜித் குமாரின் தனி பங்களா வீடு சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியிலிருந்து    இறுதி ஊர்வலம் நடைபெறும்  என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்பு, அஜித் குமார், ஆந்திரப்பிரதேசம் செகந்திராபாத்திலா ஒரு சிந்தி தாய்க்கும் கேரளம் பாலக்காட்டு பி. எஸ்.மணி என்ற சுப்பிரமணிக்கும் இரண்டாவது மகனாவார் இவரது தாய் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரத்திற்கு முன் ஒரே நடாக இருந்த நிலையில் கராச்சியில் பிறந்தவர்




இந்திய விடுதலையின் போது அவர் குடும்பம் அகதியாக கொல்கத்தா நகருக்கு வந்தவர் ஆவார், அஜீத் குமார் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992  ஆம் ஆண்டில் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். 



சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடையவே நடிப்பில் தடை ஏற்பட்டது. பின்னர் சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் துவங்கினார்.





2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிகத் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். 2003 ஆம் ஆண்டில் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான என்னைத் தாலாட்ட வருவாளா திரைப்படமும், காவலராக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்தக் கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்து வந்தார், பின் விஸ்வாசம் படம் பெயர் பெற்றது,

சிந்தி  சமூகத்தின் இறுதிச் சடங்குகள் ஆழ்ந்த ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. மரணத்திற்கு முந்தைய நீராட்டுதல், தகனம் செய்தல், மற்றும் இறப்புக்குப் பிந்தைய சடங்குகள் என மூன்று  நிலைகளில் நடைபெறும்,இறுதி ஊர்வலம் மற்றும் தகனம்:செய்ய உடல் தயார் செய்தல்: உடலை பாலில் நீராட்டி, ஆண்கள் மற்றும் விதவைகள் அல்லாத பெண்களுக்கு வெள்ளை துணியும், சுமங்கலிப் பெண்களுக்கு சிவப்புத் துணியும் அணிவிக்கப்படும். உடலுக்கு மஞ்சள் அல்லது சந்தன பேஸ்ட் பூசப்படும்.  தகனக் குளியல் மேடையில் உடல் வைக்கப்பட்டதும்,





ஆன்மாவை விடுவிக்கும் விதமாக சடங்கு பானை உடைக்கப்படும். குடும்பத்தின் மூத்த ஆண் அதாவது மூத்த மகன் தகன நெருப்பை மூட்டுவார். அதன் பின்னர் அஸ்தி கரைத்தல் மற்றும் 'திஜோ' (Tijho):அஸ்தி சேகரிப்பு என்பது இறந்து மூன்றாம் நாளில் அஸ்தி சேகரிக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்படும்.திஜோ சடங்கு: இறந்த மூன்றாம் நாள், உறவினர்கள் கூடி நீராடி, குடும்பத்தினருக்கு புதிய ஆடைகளை வழங்கி ஆறுதல் கூறுவார்கள்.. 13-ஆம் நாள் சடங்குகளுடன் துக்கம் முடிவடையும்,


13-வது நாள் துக்க காலம் முடிவடைகிறது.அன்று உறவினர்களுக்கு இனிப்பு உட்பட முழுமையான சைவ உணவு பரிமாறப்படும்.பாகடி சடங்கு: இது குடும்பப் பொறுப்புகள் அடுத்த தலைவரிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் தலைப்பாகை கட்டும் சடங்காகும். இவை அணைத்தும்  அஜீத் குமார் சார்ந்த உறவினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகும், ஆகவே அவர்கள் வெளிநபர்களை தவிர்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிததுள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...