முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் அரசியல் களத்தை உற்று நோக்கும் பாஜக அமைதி காப்பது களையுமா .

அழிவின் விளிம்பில் அதிமுக, தடம்மாறத் தயாராகும் மதிமுக, சிவகாசி சரவெடியாக கில்லி விஜயின் சர்கார் தனித்து ஆட்சியை நோக்கி நகர்கிறது


நாளைய சபாநாயகர் தீர்ப்புக்குப் பின் விசில் ஊதப்போகும் ராஜினாமா MLA க்களும், சுயேச்சையாக களம் காணப்போகும் அதிமுக தகுதி நீக்க எம்எல்ஏக்களும் என்ற நிலையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட முஸ்லீம் லீக் விசிகவின் திடீர் பயம் என்பது தவெக மெஜாரிட்டி பெற்றுவிட்டால் நமக்கு வழியில்லை எனக் கருதும் காரணமாக, குதிரை பேரம் எனக் சுயநலம் கருதியே குதிக்கின்றனர்,  CV. சண்முகம், அணி கொரடா டாக்டர் சி.விஜயபாஸ்கர் அணியாக பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள் பலர், மீண்டும் தங்களை இயக்கிய அரசியல் தலைமை பேச்சைக் கேட்டு, எடப்பாடி கே. பழனிசாமி இல்லம் தேடி வரத் தொடங்கினர்.



கடந்த வாரம் தான், தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக ஒரு சார்பு அணி எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்து மெஜாரிட்டியை அதிகரித்தனர், அதை தான் அவர்களை வழிநடத்தும் தலைமையும் விரும்பியது ஆனால் தவெக அவர்களை அமைசசரவையில் சேர்காமல் ஏதோ கொள்கை அரசியல் செய்வதாக ஆதவ் அர்ஜுனா திட்டப்படி சிறிய ஜாதிய மத வாதக் கட்சிக்கு முன்னுரிமை கொடுத்து அவசர அமைச்சர் அவை உறுவாக்கி, அதிக நபர் கொண்ட அதிமுகவை  ஏமாற்றக் காரணமாக ஆதவ் அர்ஜுனா நடத்திய ஜாதி மத அரசியல் மேலிடத்தில் பலரைக் கோபமடையச் செய்துள்ளது, 


இதற்கு எதிர்வினையாக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில்,  ஆதரித்த 25 எம்எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம், அவர்கள் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மூலம் அப்போதே, கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.

CV. சண்முகம் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள், பழனிசாமி தரப்பு கடிதம் பற்றி பெரிதாக அப்போது அலட்டிக் கொள்ள வில்லை. இந்த நிலையில் தான் நேற்று காலை பதறியடித்துக் கொண்டு சபாநாயகரையும் எடப்பாடி. கே. பழனிசாமியையும் தேடிக்கொண்டு அதிமுக எதிர் வாக்களிப்பு குழு ஓடியிருக்கிறது. ஆனால் அவர்களை வழி நடத்தும் மேலிடம் மூலம் ஏதோ நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.



"தகுதி நீக்கக்கோரும் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும்" என்று எடப்பாடி கே. பழனிசாமி தரப்புக்கு வேண்டுகோளும், "தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்று அரசு சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனுக்கு கடிதமும் கொடுத்துவிட்டு, எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி காத்துக் கொண்டிருப்பதும் இதன் நீட்சிதான். 

ஒருபக்கம், எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு பலம்பெற்று 30 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தற்போது போட்டியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார், சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் குறைந்து விட்டனர், வலுவிழந்தது போட்டி அணி." என்று கூறினாலும்  எதிர்காலத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் இவர்கள் ஆதரவு இனி கிடைக்காது.



முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வெற்றிபெற்ற பின் ராஜினாமா செய்த திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதி, அதிமுகவிலிருந்து தவெகவுக்கு  வந்த அதிமுக ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகள் உள்ளிட்ட ஐந்து தொகுதிகள், காலி என அறிவிக்கப்பட்டு விட்டது, எடப்பாடின் K.பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை  தற்போது உயர்ந்துள்ளது.

 எம்.எல்.ஏ.க்கள் நத்தம் R.விஸ்வநாதன், கோ.ஹரி, A.அருண் மொழிதேவன்  ,K.ரவி மனோகரன் ஆகியோர் எடப்பாடி K. பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்னும் சந்திக்காத அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வரிசை 

மயிலம் C.Ve.சண்முகம்,  விராலிமலை Dr.சி.விஜயபாஸ்கர்  மட்டுமே தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியாக இருக்கும் மற்றொரு கட்சியில் இணைந்த சம்பவங்கள் இதற்கு முன்பு பலமுறை நடந்துள்ளன..


அதற்கான முக்கிய  உதாரணங்களாக:

2009- ஆம் ஆண்டில் ம.தி.மு.க எம்.எல்.ஏ கம்பம் தொகுதியில் ராஜினாமா 

மார்ச் மாதம்  2006 தேர்தலில் ம.தி.மு.க (அதிமுக கூட்டணியில்) சார்பாக கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என். ராமகிருஷ்ணன்..

அப்போது தி.மு.க அரசுக்கு சட்டசபையில் தனிப் பெரும்பான்மை சற்று குறைவாக இருந்தது. கட்சித் தலைமை தன் மீது சந்தேகம் கொள்வதாகக் கூறி ராமகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் உடனடியாக ஆளுங்கட்சியான தி.மு.க-வில் இணைந்தார்.

அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த இடைத்தேர்தலில் அதே கம்பம் தொகுதியில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.அடுத்து 


முன்னாள் மத்திய அமைச்சரான மு. கண்ணப்பன், 2006 சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது ம.தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் இருந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க தலைவராக இருந்த மு. கருணாநிதிக்கு ஆதரவாக மு. கண்ணப்பன் செயல்பட்டார். இதனால் ம.தி.மு.க தலைமைக்கும் அவருக்கும் விரிசல் 

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, தனது தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை 2009-ஆம் ஆண்டில் ராஜினாமா செய்தார்..ராஜினாமா செய்த உடனேயே அவர்  தி.மு.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்..

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு 2009 ஆம ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.என். கந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜினாமா (திருச்செந்தூர் தொகுதி)

தூத்துகுடி மாவட்டத்தில் அதிமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன், 2006 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் வென்று எம்.எல்.ஏ-வாக இருந்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சித் தாவல் சட்டப் சிக்கல்களைத் தவிர்க்க தனது எம்.எல்.ஏ பதவியைக் கடிதம் மூலம் சபாநாயகரிடம் ராஜினாமா செய்தார். உடனடியாக தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்..

டிசம்பர் மாதம் 2009- ஆம் ஆண்டில் நடைபெற்ற திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

அடுத்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் அதிமுகவுக்கும் விஜயகாந்த் க்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார்கள். அதில் 

கே. பாண்டியராஜன் (விருதுநகர்)சி. அருண் பாண்டியன் (பேராவூரணி)மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்)ஆர். சுந்தர்ராஜன் (மதுரை மத்திய தொகுதி)டி. சுரேஷ்குமார் (செங்கம்)கே. தமிழ் அழகன் (திட்டக்குடி)ஆர். சாந்தி (சேந்தமங்கலம்), எம். அருண் சுப்பிரமணியன் (திருத்தணி),

இவர்களுடன் பாமக-வைச் சேர்ந்த கலையரசன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் ராமசாமி ஆகிய இரு முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அதே நாளில் அதிமுகவில் இணைந்தனர்). இதே போலவே பாமகவின் தாராபுரம் சிவகாமி வின்சென்ட், அந்தியூர் கிருஷ்ணன், உள்ளிட்ட நபர்கள் அதிமுகவில் இணைந்த நிகழ்வு, அப்போது கட்சித்தாவல் குதிரை பேரம் என இப்போது கூறினால் அவர்கள் கோபப்படலாம் ஆனால் அது குதிரை பேரம் இல்லை எனில் இதுவும் குதிரை வியாயார பேரம் இல்லை.தேர்தல் முடிவுக்கு பின் மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட மகிழ்ச்சி பாஜகவுக்கு மட்டுமே,

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் மாநில அரசியலில் புதிய பரபரப்பாகப் பேசப்பட்டாலும், நிதி ஆதாரம் மற்றும் கல்வித் திட்டங்கள், தொடர்பாக அவர் மேற்கொள்ளும் இந்த முக்கிய சந்திப்புகள், புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு குறிப்பாக தற்போதைய சூழலில் திமுக முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த டெல்லி பயணம் "பெரிய அளவிலான நிதி ஆதாரங்களுக்கு நாம் எப்போதும் மத்திய அரசைத்தான் நம்பி இருக்கிறோம்.. எனவே, மாநிலத்தில் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் முதலில் டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோரைச் சந்திப்பது வழக்கம்.

தவெக அரசு இது ஒரு முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.. அதன் பிறகு முதல்வர் சி. ஜோசப் விஜய் என்னென்ன கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்களிடம் கொடுக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். மத்திய அரசின் தரப்பிலிருந்தும் சில திட்டங்களை அவர் எந்த அளவுக்கு செய்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த டெல்லி பயணத்தின் அரசியல் ரீதியான பகுதியை எடுத்துக்கொண்டால், அவர் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை இப்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய இந்த அரசு 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவோடு தான் இயங்குகிறது

ராகுல் காந்தியுடன் சந்திப்பு உறவு ரீதியாக நடக்கவில்லை 

பிரதமருடனான மரியாதை நிமித்தம் சந்திப்பு மட்டுமே நடந்தது 

நிச்சயமாக காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆதரவோடு இந்த அரசு தொடர்வதை பாஜாகவோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ விரும்ப மாட்டார்கள். இப்போதைக்கு அவர்கள் விஜய் அரசை தொந்தரவும் செய்ய மாட்டார்கள்.. ஏன் தெரியுமா? அவர்களுக்கு இதன் மூலம் இன்னொரு லாபம் உண்டு

தனித்து விடப்பட்ட திமுக முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.. பாஜக எதிர்ப்பில் கடந்த இரண்டு மாநில மக்களவை தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவுவதற்குக் காரணமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது.. திமுக ஆட்சியை மட்டும் இழக்கவில்லை, தன் கூட்டணிக் கட்சிகளை முற்றிலுமாக இழந்து இன்று தனிமரமாக நின்று கொண்டிருக்கிறது. இது இன்றைக்கு பாஜகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒரு பிரதான எதிரியை இன்றைக்கு ஓரங்கட்டியாகிவிட்டது, இன்னொருவர் புதிதாக வந்திருக்கிறார் அவர் தான் சி. ஜோசப் விஜய் என்று தான் பாஜக நினைக்கிறது.

கொஞ்ச நாள் பொறுத்து கண்டிப்பாக தங்கள் அரசியல் நகர்வுகளை பாஜக ஆரம்பிப்பார்கள்.. அந்த 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களை கூட்டணியில் இருந்து கழற்ற சொல்வார்கள் அல்லது வேறு மாதிரி நெருக்கடிகள் கொடுப்பார்கள்.. ஆனால் அதெல்லாம் காலப்போக்கில் தான் நடக்கும்.. எப்படியும் 2 ஆண்டு குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது இந்த அரசுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது 

பிஎம்ஸ்ரீ கல்வித் திட்டம்

அதேபோல மத்திய அமைச்சர்களையும் பிரதமரையும் முதல்வர் சி.ஜோசப் விஜய் நேற்று  சந்திக்கும்போது அவர்கள் பிஎம் ஸ்ரீ (PM Shri) கல்வித் திட்டத்தைக் கோடிட்டுக் காட்டி.. மத்திய அரசு அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் சந்தித்துப் பேசும் பொழுது, இந்த பிஎம் ஸ்ரீ திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்துவார், இப்போது சந்திக்காத உள்துறை அமைச்சரும் வலியுறுத்துவார்.. துணைக் குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனும் வலியுறுத்துவார்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதி விவகாரங்கள் சம்பந்தமாகச் சந்திக்கும் போது அவரும் இதையே வலியுறுத்துவார்..

இதில் முதல்வர் சி. ஜோசப் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்று தான் தெரியவில்லை.. அவர் அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்வாரா என்று புரியவில்லை. ஏனென்றால் அந்த நல்ல திட்டம் இவருடன் கூட்டணி உள்ள சிலருக்கு பிடிக்காதவை ஏனென்றால் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்ற பிறகு வந்த சிவதாஸ் மீனா, அன்றைக்கு கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அனுமதியோடு தான், "தமிழகம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேரத் தயாராக இருக்கிறது" என்ற தொனியில் தெளிவாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அது பெரிய சர்ச்சையாக மாறிய உடனே திமுக அப்படியே மறுத்தது.

ஒருவேளை மு. க.ஸ்டாலினே 2வது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருந்தால், அவர் கண்டிப்பாக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்துப் போட்டிருப்பார். கேரளாவில் கூட அவர்கள் கிட்டத்தட்ட நெருங்கி வந்து கையெழுத்து போட்டுவிட்டார்கள். இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களும் இதில் போட்டு விட்டன. கேரளாவில் ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் எதிர்க்க அரசியல் தான் காரணம், தமிழ்நாடு மட்டும் தனித் தீவாக இயங்க முடியாது.. எனவே முதல்வர் சி. ஜோசப் விஜய் எல்லா விஷயத்திலும் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பார் என்று  தோன்றவில்லை.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சி. ஜோசப் விஜய் அரசு சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத்தான் தகவல்கள் வருகின்றன.. எனினும் உறுதியாகச் சொல்ல முடியாது.. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அரசியல் ரீதியாக முதல் டெல்லி பயணம் இது.. நிச்சயமாக அவர் மிகவும் பிராக்டிகலாக, நடைமுறைக்கு ஏற்றவாறு மத்திய அரசுடனான தனது அணுகுமுறையை வைத்திருப்பார் என்றே தெரிகிறது" 

தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்திருந்த நிலையில் பயணம் நிறைவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். காலை 10 மணிக்கு சோனியா காந்தி ராகுல் காந்தி உடன் முதல்வர் C.J.விஜய் சந்திப்பார் என சொல்லப்பட்டிருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது,

கேபினட் செயலாளர் Dr.T.V.சோமநாதன் ,IAS முதலமைச்சரை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தார். கடந்த கால நிகழ்வு இது முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வின் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை செய்து  கோயம்பத்தூர் 

லாட்டரி அதிபர் சந்தியாகு மார்டீனும் கைது செய்யப்பட்டார்.

கடந்த காலத் தேர்தல்களில் லாட்டரி சந்தியாகு மார்டின் குடும்பத்தினரிடம் இருந்து பாஜகவும் திமுக மற்றும் 

 பலருக்கும் தேர்தல் நிதியை வாங்கிக் கொடுத்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் பட்டயக் கணக்காளர் ஒருவர் 

இவரே அகில இந்திய அளவில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வருபவர்.

2016 ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை பணம் படைத்த அனைத்து ஜாதிகளிலும் உள்ள அதிமுக ஆதரவு  குழுதான் ஆக்கிரமித்து அழித்து வருகிறது.

இப்போது அதிமுகவிற்கு உறுதியான தலைமை இல்லை என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில்  பிறந்து 

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிறிஸ்தவ உடையார் சமூகத்தை சேர்ந்த லீமா ரோஸ் மார்ட்டின் மூலமாக இன்று அதிமுக இரண்டு அணிகளிலும் மாறி மாறி செய்யப்படுகிறார்.

இப்போது அதிமுகவில்  நடந்து முடிந்த பிரிவு மோதல் கூட நாடகம் எனக் கருத வேண்டியதுள்ளது.

அப்படியானல் அதை இயக்கம் யார் என்பது பலருக்குத தெரியும்,

இந்த அரசியல் சூட்சுமம் எல்லாம் அதிமுகவில் இருக்கும் தொண்டர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை எனும் போது அரசியல் முதிர்ச்சி இல்லாத சினிமா ரசிகர்கள் திடீர் அரசியல் வாதிகள் அறிய முடியாது, டெல்லியில் சோனியா, மற்றும் ராகுல் உடனான சந்திப்பு ரத்து எனத் தகவல் சோனியா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்கான நேரம் முதல்வர் தரப்பு சார்பாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுவே அரசியல்,

முதல்வர் சி. ஜோசப் விஜய் அவசரமாகச் சென்னை கிளம்ப வேண்டிய சூழல் உள்ளதால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஉள்துறை அமைச்சர் .அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை 

தமிழ்நாடு அரசியல் இது வரை இல்லாத  வகையில் வித்தியாசமாகவும் புதிராகவும், புதிதாக  இருக்கிறது. நேற்று வந்த தவெக அடித்து ஆடுகிறது. அதிமுக அலறிக்கொண்டு இருக்கிறது

திமுக திகிலுடன் யார்டா..இவங்க நமக்கே பாடம் எடுக்கிறார்கள் என்று விக்கித்து நிற்கிறது. ஆனால் பிஜேபி பக்கத்துல சத்தமே இல்லை 

தமிழ்நாட்டில் பருப்பு வேகாதுண்ணு மேற்கு வங்காளத்துலேயே செட்டில் ஆகிட்டாங்களான்னு பிஜேபி காரர்களே ஆதங்கத்துடன் பேசுகிறார்கள்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அரசியல் என்பது ஒரு கிரவுண்டில் இறங்கி நம்மால் 

வெற்றி பெற முடியாது என்று நினைக்கும் பொழுது அந்த கிரவுண்டில் இறங்கி எனர்ஜியை வேஸ்ட் செய்ய மாட்டார்.

மாறாக அந்த கிரவுண்டில் ஆட்டத்தை  திசை திருப்ப வேறு வேறு ஆட்களை இறக்கி விடுவார். சிக்கிம் மாநிலத்தில் பவன்குமார் சாம்லிங் 1994 ஆம் ஆண்டில் இருந்து

2019 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்து இந்தியாவையே சிக்கிம் நோக்கி  திரும்பி வைத்தவர்.சிக்கிம் ஜனநாயக முன்னணி 1993  ஆம் ஆண்டில்    கட்சி ஆரம்பித்து 1994 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்து தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராகயிருந்தவர்.

பிஜேபி 2017 ஆம் ஆண்டில் பாஜகவை கூட்டணியில்  சேர்த்து ஒரு 4-5 சீட் கொடுங்கள் நாங்களும் சிக்கிமில் உங்களால் ஜெயிச்சு கால் ஊன்றிக் கொள்வோம் எனக் கூறவே. பவன்குமார் சாம்லிங் டெல்லியில் வேண்டும் என்றால் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

சிக்கிமில் உங்களை நுழைய வைத்தோம் என்றால் எங்க கதையை நீங்கள் முடித்து விடுவீர்கள் என்று பிஜேபியை கூறி விட்டார்.

இது நடந்த சில மாதங்களில் சிக்கிம்     ஜனநாயக முன்னணியில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சி ஆரம்பித்திருந்த

பிரேம் சிங் தமாங்கை பிஜேபி தம்பி வாங்க உங்களுக்கு நாங்க வாழ்வு அளிக்கிறோம் என்று அழைப்பு விடுத்தது.

2019 சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருந்த பவன்குமார் சாம்லிங் மெஜாரிட்டியை இழந்தார். சிக்கிமில் ஹங் அசெம்பிளி உருவானது. பிஜேபி உதவியுடன் பிரேம் சிங் தமாங் முதல்வரானார்.

பிஜேபி நினைத்து இருந்தால் பவன் குமார் சாம்லிங்கை  முதல்வராக்கி இருக்க முடியும்.ஆனால் விரும்ப வில்லை.

இதில் சிறப்பு என்னவென்றால் பிரேம் சிங் தமாங் ஒரு வழக்கில் தண்டனை 

பெற்றிருந்ததால் முதல்வராக முடி யாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் முதல்வராக்கப்பட்டார்

பிரேம் சிங் தமாங் முதல்வரான உடன்  பவன்குமார் சாம்லிங்கின் கட்சியில் இருந்த 15 எம்எல்ஏக்களில் 2 பேர் பிரேம் சிங் தமாங்கை ஆதரித்து அவருடைய ஆட்சிக்கு மெஜாரிட்டை யை  உறுதி் செய்தார்கள்.அடுத்த சில தினங்களில்

பவன் குமார் சாம்லிங்கின் கட்சியில் இருந்து 12 எம்எல்ஏக்கள் பிஜேபியில் இணைந்தார்கள்.

25 வருடங்களாக தொடர்ந்து சிக்கிமை ஆண்ட சூப்பர் முதல்வர் பவன்குமார் சாம்லிங் சிக்கிம் சட்டமன்றத்தில் ஒற்றை எம்எல்ஏவாக தனி ஆளாக நின்ற பொழுது பலர் கண்ணில் இருந்து நீர் வந்தது அது ஆனந்தக் கண்ணீர்.அடுத்து 2024 ஆம் ஆண்டு சிக்கிம் தேர்தலில் பவன் குமார் சாம்லிங்கும் தோற்று போனார்.

சிக்கிமை 25 வருடங்களாக ஆண்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி இப்பொழுது சிக்கிமில் துடைத்து வீசப்பட்டதற்கு காரணம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தான். பவன் குமார் சாம்லிங்கிடம் அமைச்சர் அமித்ஷா கேட்டது 4 முதல் 5 சீட்கள் தான்.ஆனால் பவன் குமார் சாம்லிங்  கொடுக்க விரும்ப வில்லை. அதனால் இப்பொழுது அவர் சிக்கிம் அரசியலிலே இல்லாமல் காலம் உருவாக்கி வைத்து விட்டது.  இப்பொழுது சிக்கிம் பவன்குமார் சாம்லிங்கும் தமிழ்நாடு  எடப்பாடி கே.பழனிச்சாமியும் ஒரே லிஸ்டில் தான் இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு லோக்சபா

தேர்தலில் பிஜேபி கூட்டணியை முறித்து விட்டுச் சென்ற எடப்பாடி கே.பழனிசாமியை காலம் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி கூட்டணிக்கு கொண்டு சென்றது்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி என்று அடிக்கடி கூறினார் பதிலுக்கு எடப்பாடி நோ நோ.நோ

அதிமுக தனித்துத் தான் ஆட்சி அமைக்கும் எனறார் அமித்ஷா பார்த்தார்.. சரி உங்கள் விருப்பம் என்று தொகுதி பங்கீடு பிரச்சார

வியூகங்கள் எதிலும் ஆர்வம் காட்டாமல் இங்கு 12 கட்சி கூட்டணி அமைந்தது ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு இல்லை தோல்வி அடையக் காரணம் உள்குத்து அரசியல், 60 சீட் வரை ஜெயிக்க வேண்டிய தவெக 108 வென்றது காரணம் உள்ளடி அரசியல் வேலைதான்.

உள்துறை அமைச்சர்அமித்ஷா மேற்கு வங்காளத் தேர்தலில் மழு அளவில் ஈடுபட ஆரம்பித்தார்.

விளைவு ..தமிழ்நாடு தேர்தலில் அதிமுக என்டிஏ கூட்டணி 3 வது இடத்திற்குச் சென்றது. அமித்ஷா தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சி என்ற போது அதெல்லாம் முடியாது  என்று எகத்தாளத்துடன் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பரம்பரை எதிரி எனக் கருதிய திமுகவுடன் கூட கூட்டணி ஆட்சியைப் பற்றி பேச காலம் அவரைக் கொண்டு சென்றது.

எந்த பிஜேபி அதிமுகவை அழிக்க நினைக்கிறது என்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கத்திக் கதறினார்களோ.  அந்த பிஜேபி அமைதியாக இருக்க நேற்று வந்த இன்னொரு கட்சியான தவெக அதிமுகவை அழித்து கொண்டு இருக்கிறது. என பேசவைத்தார் அமித்ஷா 

எந்த பிஜேபி திமுக கூட்டணியை உடைக்க சதி செய்கிறது என்று திமுக ஆதரவாளர்கள் கத்தினார்களோ அந்த

பிஜேபி அமைதியாக இருக்க திமுக கூட்டணியை நேற்று வந்த தவெக உடைத் து விட்டது.

ஆக தமிழ்நாட்டில் அதிமுக அழிய வேண்டும்.திமுக கூட்டணி உடைய வேண்

டும் என்று பிஜேபி விரும்பியதை இன்று இன்னொரு கட்சி செய்து கொண்டிருக்கிறது.இதை பிஜேபி வேடிக்கை மட்டுமே பார்த்து

கொண்டிருக்கிறது.

ஒரு களத்தில் இறங்கி நம்மால் வெற்றி பெற முடியாது என்று தெரியும் பொழுது அந்த கிரவுண்டைச் சார்ந்த ஒருவரை களம் இறக்கி ஆட்டத்தை திசை

திரும்புவது தான் ஒரு புத்திசாலித்தனமான கேப்டனின் வியூகமாக இருக்கும், அதை திருப்பத்தூர் தொகுதியில் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் வேட்பாளர் அழகாகச் செய்து முடித்தார். தவெக வெற்றி அறிவிக்கப்பட்டது, 

அதைத்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் செய்திருக்கிறார் என்றே கருதலாம் .தமிழ்நாடு ஆளுநர் நினைத்திருந்தால் தனிப்பெரும் கட்சியான

தவெகவை ஆரம்பத்திலேயே ஆட்சி     அமைக்க அழைத்து இருக்க முடியும்.ஆனால் ஆளுநர் அப்படி செய்து இருந்தால் திமுக கூட்டணி உடைந்திருக்காது.அதிமுகவும் சிதைந்திருக்காது. உள்துறை அமைச்சர் 

அமித்ஷா விரும்பிய படி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி திமுக கூட்டணி உடைதல் அதிமுக அழிதல் அனைத்தும் நடைபெற்று விட்டது  இதனால் பிஜேபிக்கு என்னப்பா லாபம்? என்று நீங்கள் கேட்கலாம். அதுவே எதிர் கால அரசியல்.இனி முதல்வர் ராஜினாமா செய்த ஒரு தொகுதி மற்றும் அதிமுக இரண்டு பிரிவில் ஒரு பக்கம் ராஜினாமா செய்தவர்கள் தவெக மூலம் இடைத்தேர்தலைச் சந்திக்க உள்ளது. மற்றும் தகுதி நீக்கம்நடந்தால் அவர்கள் ஒருபக்கம் தேர்தலைச் சந்திக்க வேண்டும் இதில் சபாநாயகர் முடிவே இறுதியானது ஆகும்.இந்திய அரசியல் சாசனத்தின் 10 வது அட்டணை கூறுவது:    Voluntarily Given up as per 10 th Schedule of Indian Constitution:

Inferred Conduct: A member can be deemed to have voluntarily given up their party membership through their actions, such as publicly criticizing the party, joining a rival party’s rally, or campaigning against the party's official candidates.  அதிமுக தலைமையை எதிர்த்து அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடிப் பேசி தலைமைக்கு எதிராக வெளிப்படையாக பொது வெளியில் போர்க்கொடி எழுப்பிய போதே தகுதி நீக்கம் விதி செயலுக்கு வந்து விடுகிறது. தீர்ப்பு இப்போது சபாநாயகர் வசமே. இதுவரை எந்த நடவடிக்கையும் வரவில்லை இனி வரலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...