தேமுதிகவின் தற்போதய பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ்
மனைவி பூர்ணஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் தான் சந்தோஷ் சர்மா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது .சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் HCP ஆட்கொணர்வு Habeas Corpus மனுவை தாக்கல் செய்திருந்த வழக்கை
விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சந்தோஷ் ஷர்மா மீது சென்னை காவல்துறை முன்னாள் ஆணையரும் தற்போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருணால்
முன்னர் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவருக்கு கடுமையான முறையில் விமர்சனம் செய்து கண்டித்தது .
சென்னை கொளத்தூர் பகுதி இராமதாஸ் நகரில் தேமுதிக தற்போதய பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தம்பி எல்.கே.சுதீஷ் எம்.பி, மனைவி பூர்ணஜோதிக்குச் சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தில் 234 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி, அதில் 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா நடத்தும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் சார்பாக செய்த
ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை, போலிக் கையெழுத்திட்டு, 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகப் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் ஷர்மா அப்போது ஜாமீனில் விடுதலையான நிலையில், ஒப்பந்தம் மூலம் வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக, பழைய வழக்கை மறைத்து புதிய புகாரில் ஒரே குற்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் 2025 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் அதே குற்ற வழக்கில் வேறு எப்ஐஆர் மூலம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக அப்போது இருந்த அருண் ஐபிஎஸ் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உத்தரவிட்டார் இதை எதிர்த்து சந்தோஷ் ஷர்மாவின் மகள் வர்ஷா சர்மா தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், தனது மகள் வர்ஷா ஷர்மாவின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மகளைக் கவனித்துக் கொள்ள தனது கணவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்க வேண்டும் என சந்தோஷ் ஷர்மாவின் மனைவி கல்பனா ஷர்மா இடைக்காலக் கோரிக்கை மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த மாநகர் காவல்துறை ஆணையரக இருந்த அருண் ஐபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் படி, நேரில் ஆஜரான ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண், தனது 28 ஆண்டுகால காவல்துறை பணியில் எந்தச் சூழ்நிலையிலும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை. யாருக்கு எதிராகவும் அதிகாரத்தை தவறாகவே பயன்படுத்தியது இல்லை. தன்னால் பதிக்கப்பட்டவர்கள் தனக்கு எதிரக பொய்யை பரப்புகின்றனர் என நீதிமன்றத்தில் பிரமாணம் மூலம் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? இல்லையா? என்பதை முடிவு செய்யவே நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாகக் கூறி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சந்தோஷ் ஷர்மா மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த நடவடிக்கை வர்ஷா சர்மா என்பவர் சென்னை தொழிலதிபர் சந்தோஷ் ஷர்மாவின் மகள் ஆவார். தேமுதிக பொருளாளர் எல். கே. சுதீஷின் மனைவிக்குச் சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டியதில் ரூபாய் 43 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி, கட்டுமான நிறுவன உரிமையாளரான சந்தோஷ் ஷர்மா என்பவரை சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. தன் தந்தை மீதான இந்த குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை எதிர்த்து வர்ஷா ஷர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus Petition) தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. தேமுதிக பிரமுகரின் நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் ஒப்பந்தத்தில் போலி கையெழுத்திட்டு, பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சந்தோஷ் சர்மா மீது 2025-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல் துறையின் அப்போதைய ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார், ஒரே குற்றச்சாட்டுக்காகப் பிணையில் வெளிவந்த நபரை, மீண்டும் அதே காரணத்தைக் காட்டி 2 ஆண்டுகள் தாமதமாகக் குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதமானது என வர்ஷா ஷர்மா நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மூலம் வாதிட்டார்.
நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை பிறப்பித்த, தற்போதைய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான அருண் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது நீதிமன்றம் ஊழியர் சம்மன் வழங்கச் சென்ற போது 2 மணி நேரம் காத்திருக்க வைத்ததற்காகத் துறை ஊழியர்களுக்கும், காவல்துறை தரப்புக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, சந்தோஷ் சர்மா மீதான குண்டர் சட்டத்தை 16 பக்கத் தீர்ப்பு மூலம் ரத்து செய்துஅருண் IPS பொய்யான பல குண்டாஸ் வழக்குகளைப் போட்டிருக்கிறார்
500 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி சம்பாதித்திருக்கிறார். அவர் திமுக ஆதரவாளர். அராஜகமான ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமித்திருக்கிறார்கள்.
அஸ்ஸாமுக்கு மாற்றப்பட வேண்டியவரை யாரோ நிர்பந்தித்து இப்படி செய்துவிட்டார்கள். இதையெல்லாம் பல யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம் குறை கூறும் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் குண்டாஸ் விவகாரத்தில், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படும் சுதீஷின் சொத்தையே பெயர் மாற்றி மோசடி செய்து விற்க முயல்கிறார்கள் என்றால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டியது தவறல்ல. சென்னை சௌகார்பேட்டை முதல் புரசைவாக்கம் வரை மர்வாடிகளைத் தவிர யாரும் வாழமுடியாது ன்ற நிலை வந்துவிட்டது, குமுதம் அதிபர் பழனியப்ப செட்டியார் சொத்தை ஒரு ராஜஸ்தான் மார்வாடி அசோக்குமார் ஆக்கிரமிப்பு செய்து அதை அபகரித்த கதை நாம் நன்கு அறிவோம்
குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்றால், அவர்கள் எளிதாக ஜாமினில் வெளியே வந்துவிடுவார்கள்.
அதிலும், சந்தோஷ் ஷர்மா போன்ற பணபலமுள்ளவர்கள் வலுவான வழக்கறிஞர்களை வைத்து எளிதாக வெளியே வந்து மீண்டும் மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.
ஆனால் இதில் இரண்டு வழக்கு பதிவாகாமல் இருந்திருந்தால் இப்போது இது விமர்சனத்திற்கு உள்ளாகாது, தனியார் யூடியூப்பர்
சவுக்கு ஆச்சிமுத்து சங்கர் கூறியது போல, “இரண்டு அபார்ட்மெண்ட்கள் கேட்டதால் குண்டாஸ் போட்டார்கள்” என்பதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்து, 500 கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சொல்கிறீர்கள். அந்த 500 கோடி எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் கூறவும்,
அதற்கான தகவலை அமலாக்கத் துறைக்கு கொடுக்கலாம். PMLA படி நடவடிக்கை எடுக்கலாம். ஆதாரமின்றி பெரிய குற்றச்சாட்டுகளை திமுக ஆதரவு ஆள் என்று பெரும்பாலான IAS, IPS அதிகாரிகள் எந்த ஆட்சி வந்தாலும் அதற்கேற்ப பணியாற்றுவார்கள். அரசியல்வாதிகள் அவர்களை இடமாற்றம் செய்வதும், பதவி வழங்குவதும் அவர்களது கையில் இருப்பதால், ஒரு அளவுக்கு அவர்கள் தாக்கம் செலுத்துவது இயல்பு.
அருண் ஐபிஎஸ் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு ஆட்சிக் காலங்களிலும் அவர்கள் சார்ந்த அணுகுமுறையில்தான் செயல்பட்டிருக்கிறார்.
நமக்குத் தெரிந்த பல துறை சார்ந்த நேர்மையானவர்; வேகமாக செயல்படுவார்.”
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி; காவல் துறை நிர்வாகம் தொடர்பான கல்வியும் பெற்றவர்.
ஆட்சி மாறினாலும், அருண் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் மக்களுக்கு தேவை.
இப்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதவி சிலர் கூறுவது போல இலலாமல் அந்தப் பொறுப்பிலும் அவரால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்பட முடியும்.
அதிகாரிகள், ஆட்சி மாறும்போது அந்தக் கட்சிக்கும் இந்தக் கட்சிக்கும் சம்பந்தமில்லாதவர்கள் போலவே தங்களது பணியைத் தொடர்வார்கள்.
ஒரு கரைவேட்டியை கழற்றி மற்றொரு கரைவேட்டியை அணிவது போல அரசியல் மாறலாம்; ஆனால் அதிகாரிகளின் நிர்வாகப் பொறுப்பு தொடர்கிறது.
நாளையே திமுகவைச் சேர்ந்த பெரிய தலைவர்கள் மீதும் சொத்துக்களை குவித்த ஊழல் லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்ய வேண்டிய சூழல் அமலாக்கத்துறை மூலம் வந்ததை, அருண் ஐபிஎஸ் தயக்கமின்றி செயல்படக்கூடிய தைரியமான அதிகாரி என்றே கூறலாம்.
ஆகவே, “அராஜகமான ஒருவரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பிவிட்டார்கள்” என்று யாரும் வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நேரத்தில் அவருக்கு இத்தகைய பொறுப்பை வழங்கிய முடிவு மிகவும் புத்திசாலித்தனமானதும், சமயோசிதமானதாகும்
வெளிப்படையாகச் சொன்னால், தமிழ்நாட்டில் ஊழலைக் குறைத்து, நல்ல நிர்வாகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அருண் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.
சவுக்கு சங்கர் சொல்வதையெல்லாம் முழுமையாக நம்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு காலத்தில் அண்ணாமலை பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டார் என்றும் அவரை கடுமையாக விமர்சித்தார்.
“ஆதாரத்தோடு பேசுகிறேன்” என்று கூறினாலும், சில நேரங்களில் ஒரு பகுதி தகவலை வைத்துக்கொண்டு மிகைப்படுத்தப்பட்ட முடிவுகள் கூறப்படுகின்றன.
உதாரணமாக, 500 கோடி ரூபாய் திருட்டு நடந்தது என்று சொன்னால், அந்தப் பணம் எங்கே உள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும் ஆனால் அதை குற்றம் சுமத்தும் நபரே நிரூபிக்க வேண்டும்.



























கருத்துகள்