உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33 லிருந்து 37ஆக உயர்த்தி அவசரச்சட்டம் பிறப்பித்தார் பாரதக் குடியரசுத் தலைவர்
உச்சநீதிமன்றத்தில் 93,0000 வழக்குகள் தற்போது தேங்கிக்கிடக்கும் நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தி அவசர சட்டம் பிறப்பித்தார் குடியரசுத்தலைவர் கொலீஜியம் பரிந்துரை படி மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி அருண் பாலி ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
மூத்த வழக்கறிஞர் வி.மோகனா,பிஏ,பிஎல் வயது 59 (27/6/1966) கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் (இப்போது ஜிஎல்சி, கோயம்புத்தூர்) ஐந்தாண்டு சட்டப் படிப்பின் இந்தியாவின் முதல் தொகுதியாக 1988 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர் அவர் 23 ஏப்ரல், 2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் முழு நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திருமதி.வி.மோகனா உள்ளிட்ட 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கோலிஜியம் பரிந்துரை செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கவும், நீதித்துறை செயல்பாடுகளில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 22ஆம் தேதி மற்றும் இரு நாட்கள் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டங்களில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக உயர்த்துவதற்காக ஐந்து முக்கிய நபர்களின் பெயர்கள் முறைப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு , மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களுடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோரது பெயர்களும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த கொலிஜியம் பரிந்துரைகள் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ நியமன ஆணையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



கருத்துகள்