முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி புதிய இயக்கம் அண்ணாமலையின் தனி வழி

ஒரே நாடு .ஒரே தேர்தல் நோக்கி புதிய இயக்கம்  அண்ணாமலையின்  தனி வழி.


இன்று மதியம் 12 மணிக்கு , சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். என  பாஜகவிலிருந்து முறையாக விலகிய கே.அண்ணாமலை

https://www.instagram.com/annamalai_kuppusamy

https://www.facebook.com/share/18bJfU31t4/

https://youtube.com/@annamalai.k

https://x.com/annamalai_k ஆகிய லிங்க் மூலம் சமூக வலைத்தளங்களில் பேசினார் அதில் "எனக்கு முதல் வாய்ப்பு தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து லக்னோவில் படித்ததற்கும், பின்னர் டெல்லியில் இருப்பதற்கும், ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகள் டிரெயினிங், அதன் பிறகு கர்நாடகாவில் 8 லிருந்து 9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் சுற்றினேன். அதனால் தான் நான் எப்போதும் சொல்வேன் – “நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், அதே நேரத்தில் பாரம்பரியத் தமிழன்” என்ற அடையாளத்தோடு எல்லோரிடமும் பேசுவேன்.


இன்றைய தமிழ்நாட்டு அரசியலில், ஒரு பெருமை மிகுந்த தமிழனாக இருக்க வேண்டுமென்றால் இந்தியன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சில கட்சிகள் சொல்கின்றன. ஆனால் நான் எப்போதும் சொல்வது என்னவென்றால்  நான் இந்தியன் என்கிற அடையாளத்தோடு, ஒரு பெருமை மிகுந்த தமிழனாகவே எல்லா இடங்களிலும் இருக்கிறேன். இந்த இயக்கத்திலும் அப்படித்தான் இருப்பேன். என்றார் இந்த நிலையில் பாஜகவில் இருந்து முன்னாள் மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை விலகிய பின் இன்று தொடங்கியுள்ள We The Leaders இயக்கத்தில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்தை கடந்து தற்போது வரை ஏழு லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று சமூக வலைதளம் வாயிலாக மேலும் பேசியவர், “நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள், குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளில், “அண்ணாமலை, நீங்கள் தமிழனா, இந்தியனா?” என்று கேட்பார்கள். இது எனக்கு பெரிய கான்ஃப்ளிக்ட்டை ஏற்படுத்தக்கூடிய விஷயம். “Are you a Tamilian or are you an Indian?”தமிழ்நாட்டில் என் அப்பாவோ, அம்மாவோ… என் அம்மா தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே வந்ததே இல்லை. தமிழ்நாட்டில் தான் எப்போதும் இருந்திருக்கிறார்கள். என் பாரம்பரியம் முழுவதும் விவசாயக் குடும்பம். அப்பா சின்ன வயதில் ஒரு முறை மட்டும் தமிழ்நாட்டுக்கு வெளியே சென்று வந்திருக்கிறார். மற்றபடி ஆண்டாண்டு காலமாக அங்கேயே விவசாயம் செய்து வரும் குடும்பம்.நாம் ஆரம்பிக்கும் இந்த இயக்கத்தில் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சினையையும் முன்னிறுத்தி, சமரசமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாம் எல்லோரும் கொண்டு செல்ல வேண்டும்.




பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிறகு பல பிரச்சினைகளில் எல்லா தலைவர்களும் பெரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டின் அடையாளத்தோடு தனியாகப் போக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போக வேண்டும் என்பதற்காக அன்றைக்கு தேசியத் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்கள் நிறைய பேரோடு பேசி அனுமதி அளித்தார்.அதேபோல் லோக்சபா தேர்தலிலும் தனியாகப் போக வேண்டும். தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தமிழர் அடையாளத்தோடு களத்தில் நின்றால் தான் தமிழர் நலனை முன்னிறுத்தும் கட்சியாகவும், இந்திய அடையாளத்தோடும் இருக்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை. கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம். அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் போது Nvidia, Micron, Samsung, Intel, Google, Facebook போன்ற நிறுவனங்களில் Vice President பதவியில் இந்தியன் என்ற அடையாளத்தோடு ஒரு தமிழர்கள் இருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் திரும்பி வந்து தமிழ்நாட்டு அரசியலில் பங்களிக்க வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு அவர்கள் எல்லோரையும் பயன்படுத்த வேண்டும்.

வாழ்த்துக்கள் கூறும் தெ.இ.பாபி தலைவர் 

இதில் “நான் பெரியவன், நீ பெரியவன்” என்ற போட்டி இல்லாமல், ஒரு வளர்ந்த பாரதத்துக்குள் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு நமது அரசியல் மொழியை உள்ளிட்ட அனைத்தையும் மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் கட்சி தேவை தான். மாற்றுக்கருத்து இல்லை. காரணம், டூத்பேஸ்ட் வாங்கும் அளவுக்கு கூட மக்கள் தரத்தைப் பார்த்து வாங்குகிறார்கள். அரசியலிலும் அதே தரத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.நாம் கல்ட் பாலிடிக்ஸிலிருந்து வெளியே வர வேண்டும். காமன் மேன் பாலிடிக்ஸை முன்னெடுக்க வேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், போஸ்டர் அரசியல் ஆகியவற்றை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.

ஒரு முதலமைச்சர் மட்டும் மாறினால் போதாது. 35 அமைச்சர்கள், 234 எம்எல்ஏக்கள், 39 எம்பிக்கள், 30,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளென அனைத்து மட்டங்களிலும் நேர்மையான, திறமையான, சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும்.

இது ஒரு குடும்பத்திற்கு மட்டுமானது அல்ல. அதேசமயம எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். “No chairs is permanent for anybody” – இது அனைவருக்கும் பொருந்தும். புதியவர்கள், புதிய ஐடியாக்கள் தொடர்ந்து வர வேண்டும்.

ஏற்கெனவே 2020-ல் தொடங்கிய “We The Leaders” இயக்கத்தை இப்போது முழுமையாகச் செயல்படுத்துகிறோம். கோயம்புத்தூரில் ஏபிஜே அப்துல் கலாம் சென்டர் ஃபார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் என்ற பயிற்சி மையத்தைத் தொடங்குகிறோம். அங்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களே உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவார்கள்.

நாம் யாருக்கும் போட்டி இல்லை. யாருடனும் வன்மம் இல்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மரியாதையோடு பார்க்கிறேன். நமது கொள்கையை மக்கள் முன் வைப்போம். மக்கள் தரத்தைப் பார்த்து தேர்வு செய்வார்கள். நாகரிகமான அரசியல், பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு, நேர்மறை, பொறுமை  இவையே நமது பாதை. 42 ஆண்டுகள் வளைந்து நெளிந்து இன்று இந்த இடத்தில் உள்ளேன்.

நிச்சயமாக நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புரட்சியை மாற்றத்தை உருவாக்குவோம். இந்திய நாட்டிற்குள் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது தான் நமது குறிக்கோள் வேறு எதுவும் இல்லை. அதற்காக வாழ்வை அர்பணிப்போம் ” என்றார்". அவர் பேசி முடித்த நிலையில் பலரும் இணைப்பு மூலம் இணைந்து வருகின்றனர். இன்று இரவு அது பத்து லட்சத்தைத் தாண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...