முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் வரலாற்றில் தலைவராக அண்ணாமலை பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதது

பாஜகவில் இருந்து விலகிய புதிய பரினமத்தில் உறுவான தலைவர் கே அண்ணாமலையின் புதிய இயக்கம்



ஒரே லிங்க் மட்டுமே அதில் எழுட்சியாக 17  லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளனர், இது கடந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளை விட அதிகம் தமிழ்நாடு பாஜக வின் தலைவர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியம் தான், ஒரே பரபரப்பு. திரும்பிப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியம் ஆன டெல்லி தேசியத் தலைமை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பார்வையும் மக்கள் தலைவராக உறுவான கே.அண்ணாமலை என்ற தனித் தலைவர் பக்கமே  இப்போது திருப்பியிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை, மூன்று தினம் முன் "வீ தி லீடர்ஸ்" (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி, வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடக்கும்



சட்டமன்றத் தேர்தல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் களமாட உள்ளார் பொதுத்தேர்தலில் தங்களது இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வந்ததுமே அரசியல் வட்டாரத்தில் லேசான சலசலப்புத் தான் ஏற்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக வெளியாகி வரும் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைமையை அப்படியே நிலைகுலையச் செய்திருப்பதாகவே தகவல் வருகிறது,

புதிய இயக்கம் கண்ட தலைவர் கே. அண்ணாமலை தனது புதிய இயக்கத்தில் பொதுமக்கள் இணைவதற்காக 'https://wetheleader.org/' என்ற வெப்சைட் முகவரி வெளியிட்டிருந்தார். இந்த வெப்சைட் தொடங்கப்பட்ட நிமிடத்திலிருந்தே, உறுப்பினர்களின் சேர்க்கை  ஜெட் வேகத்தில் உயரத்                         தொடங்கியது. கே.அண்ணாமலை கண்ட இயக்கம் அசத்தல் நடவடிக்கை 



ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 200 முதல் 300 பேர் வரை ஆன்லைனில் தங்களை இணைத்துக் கொண்டே வருகின்றனர். நேற்று காலை 11 மணி அளவில் 15 லட்சத்தைத் தாண்டிய இந்த உறுப்பினர் சேர்க்கை, மாலை 6 மணி நிலவரப்படி 16 லட்சத்து 3 ஆயிரத்து 500 என்ற பிரம்மாண்ட எல்லையைத் தொட்டு தற்போது 17 லடசம் நோக்கி நகர்ந்து சாதனை படைத்துள்ளது.

இந்த ஆன்லைன் சேர்க்கை வெற்றி அலை ஒருபுறமிருக்க, அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் "நேரடி உறுப்பினர் சேர்க்கையை" மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கவும்,  படுவேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பாஜகவுக்கு தலைவலி இங்குதான் தமிழ்நாடு பாஜகவிற்குப் பெரிய தலைவலியே ஆரம்பமாகியிருக்கிறது. இந்த புதிய இயக்கத்தில் இணைந்துள்ள 17 லட்சத்திற்கும் அதிகமானவர்களில், பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த தீவிரமான தொண்டர்களும், அடிப்படை நிர்வாகிகளும் தான் என்ற ஒரு கசப்பான உண்மை பாஜக கமலாலயத்தை அந்த முக்கிய நான்கு தலைவர்களை உலுக்கியெடுத்துள்ளது.



       (இது போலியான லிங்க் எனத் தகவல் )

கே.அண்ணாமலை கம்பீரமான தலைவராக பாஜகவில் இருந்த போது அவரோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள், இப்போது தாமரை சின்னத்தை அப்படியே கழட்டி வைத்துவிட்டு அண்ணாமலையின் பின்னால் சாரை சாரையாக படையெடுத்து வருகிறார்களாம். சாமானியத் தொண்டர்கள் மட்டுமன்றி, பாஜகவின் பல்வேறு மாவட்ட, மாநில முக்கிய நிர்வாகிகளும் கூட கே.அண்ணாமலையுடன் கைகோர்க்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் என பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் மாவட்டங்களிலிருந்து தான் மிக அதிகப்படியான தொண்டர்கள் புதிய இயக்கம் கண்ட தலைவர் கே.அண்ணாமலை பக்கம் சாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னை கமலாலயத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதோடு, தங்களது சொந்தக் கோட்டையிலேயே விழுந்துள்ள இந்த மிகப்பெரிய அடைக்க முடியாத ஓட்டையையும் பெரிய விரிசலையும் எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தவித்து வருகிறார்களாம். கே.அண்ணாமலையின் இந்த அதிரடித் தொடக்கம், வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழ்நாடு பாரம்பரிய கட்சிகளுக்கும், குறிப்பாக பாஜகவிற்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதுவே  மிகப்பெரிய வெற்றி

ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஒரு சில நாட்களிலேயே, எந்தவொரு பெரிய கட்டமைப்பும் இல்லாமல் 17 லட்சம் உறுப்பினரை ஒரு இணையதளம் மூலம் மட்டுமே திரட்டுவது என்பது கே.அண்ணாமலையின் தனிப்பட்ட ஈர்ப்பு சக்திக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்க முடிகிறது.



தமிழ்நாடு பாஜகவை வளர்த்ததில் முன்னால் பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு இருந்த பங்கை டெல்லி பாஜக தேசிய மேலிடம் புரிந்து கொள்ளாமல் மக்கள் செல்வாக்கு இல்லாத சிலரை மட்டுமே நம்பியதால் மிகச் சாதாரணமாக நினைத்திருந்தால், இந்தத் தொண்டர்கள் விலகல்,  அவர்களுக்கு கணிப்பு மீறிக் கிடைத்த ஒரு பெரிய பாடமாகும். களத்தில் எவ்வளவு தான் கட்சிக் கொள்கைகள் பேசினாலும், அடிமட்டத் தொண்டர்கள் "தலைவன்" என்ற ஒற்றை முகத்தை நம்பித்தான் பின்னால் வருகிறார்கள், என்பதற்கு இந்த அதிரடி அரசியல் திருப்பமே மிகச்சிறந்த உதாரணம் போலும்,  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல தலைவராக எடப்பாடி கே பழனிசாமி இல்லாத நிலையில் தான் அதன் 50 சதவீதம் வாக்கு வங்கி தலைவராக ச. ஜோசப் விஜய் உறுவாகி தவெகவை வெற்றி பெற வைத்து அவரை முதல்வராக்கியது, திமுக செய்த ஊழலும் மற்றொரு காரணம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற நிலையில் We The Leaders-

வாக்குறுதிகளால் அல்ல  உங்களைப் போன்ற மக்களின் சேவையால்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று நம்பும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுடன் நீங்களும் இணைந்துவிட்டீர்கள் என்றும்,களப்பணிகள் விரைவில் தொடங்கும். என்றும் அதுவரை, இயக்கத்தை வளர்ப்போம் என கே அண்ணாமலை விடுத்த அரைகூவல் இணையதள உறுப்பினர் சேர்க்கை https://www.wetheleader.org/ — இந்த இணைப்பைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களையும் பதிவு செய்ய வைத்துள்ள, சிங்கம் போல புறப்பட்டு வந்த கே.அண்ணாமலையை பாஜக இழந்தது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.  பிஜேபி தமிழ் நாட்டில் வளரவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கோ நஷ்டம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் வட இந்தியாவில் பிஜேபி நன்றாக வளர்ந்து விட்டது.



ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பிஜேபி தொண்டனுக்குத் தான் உண்மை வருத்தம்.

அந்த வருத்தத்தை நீக்கி நம்பிக்கை அளித்தவர் முன்னால் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை IPS.

எனக்கென்ன என கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களை கேள்வி கேட்க யாருமில்லை.

தமிழனும், தமிழ்நாடும் உள்துறை அமைச்சரான அமித்ஷா சமாளிக்கும் களம் அல்ல. இது ராஜ தந்திர முறை குஜராத் முறை அல்ல வியாபாரக் கூட்டணி அமைத்து எதிரிகளுடன் 

இங்கு ஆடும் சூது மட்டும் வெல்லாது. 

இது தியாகம் வீரம் நிறைந்த மண் என்பது அவர்களுக்கு பறியவில்லை என ஒவ்வொரு தொண்டனின் கருத்தாக உள்ளது,மேற்கு வங்காளத்துல பல ஹிந்துக்களை வெட்டிக் கொன்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னால் முதல்வர் மம்தா பானர்ஜியை தன்னுடைய இல்லத்தில் தனது அண்ணனுக்கு நடந்த சதாபிஷேகத்திற்கு கூட்டிக்கொண்டு வந்த திமுக ஆதரவு தலைவரான பாஜகவின் இல. கணேசன் ஒரு சித்தாந்தவாதியாம்,  காரணம் அவர் பழைய ஆர்எஸ்எஸ் 




ஆனால்  அதே அமைப்பு கட்சி அடித்தளம் வளர்த்த கே அண்ணாமலை இவர்கள் பார்வையில் கெட்டவர்,, திமுகக்கு ஆதரவு தந்து கடைசி வரை வாழ்ந்த இல. கணேசன் எல்லாம் நல்லவர்,  நாம போனதும் திமுக மேல எந்த வழக்கும் போடவிடாம பார்த்துக்க இல்லாத ஓரு பதவியை  தேர்தலையே சந்திக்காத ஒரு பெண் அமைச்சர் மூலமாக போட்டு, அவர் ஆதரவாளராக பிராமின் சித்தாந்தம் கொண்ட KT ராகவனை உள்ளே கொண்டு வந்தது இல. கணேசன் ஆவார்,  போராளி

எச்.ராஜாவை விட டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல்  செய்தா ஆளுநர் பதவி பெற்றர் எவர் இங்கு சித்தாந்தவாதி 

ஓரு அந்தனரை மாநிலத் தலைவராகப் போடக்கூடாது எனப்போராடி ஜெயிச்சவர் முன்னால் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

கொள்கை மட்டுமே பேசிய தலைவர் எச். ராஜாவை எப்போதோ பெரிய பதவிக்குக் கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றம் மட்டுமே இங்கு எஞ்சிய நிலை, 

அன்றே அதிமுக+ திமுக  மற்றும் திக மற்ற புதியவர்களை ஓடவிட்ருப்பார், ஊழல் நடவடிக்கை எடுக்க வைத்திருப்பார். சீமான் ஒரு பெரிய தலைவர் இல்லை, அப்போதய காலத்தில் சமூக ஊடகங்களும் பெரிதாக இல்லை,

ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நபர் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஆன போது அவருடைய உதவியாளர் அலன் சம்பத் மாற்று கட்சிக்காரங்களுக்கு இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியத் துறையில் மாற்றுக் கட்சிக்கார்களுக்கு  வேலை வாங்கிக் குடுத்தாரே, அப்போது எத்தனை பேர் பாஜகவில் உண்மையாக அழுதனர் என்பது யாருக்கேனும் தெரியுமா?



கேட்டால் ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்பார்கள் ,, எல்லாரும் பக்காவா செட்டில் ஆன நிலைமை இன்னும் தொண்டன் மட்டுமே பாஜகவில் கொடிப் புடிக்கிறான், அதுவும் இப்போது கே.அண்ணாமலை பக்கத்தில் வேறு போயாச்சா,

சங்கம், இந்த நாடு, இந்த புண்ணிய பூமி,, ஹிந்து மதம் ஜனாதன தர்மம் இதுக்காக இன்னும் உழைக்கிறான், உங்களுக்காக இல்லை 

இந்த திராவிட பாஜக பேசுறது சித்தாந்தம்னா என்னனு பலருக்கு தெரியவில்லை,

ஸ்ரீரங்கத்துல ராகவன் என்ற தேசியவாதி பெரியார் சிலையை உடைச்சு உள்ள போய் தனி சிறைல 2 வருஷம் கிட்டத்தட்ட மன நலம் பாதிச்சு போய்ட்டாரு பிஜேபி ஒன்னும் செய்யவில்லை,, அன்று அவருக்கு உதவியது எச்.ராஜா மற்றும் சில ஆர் எஸ் எஸ் சங்கக்காரர்கள் மட்டுமே .

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு என்னவானது,, திருச்சிராப்பள்ளி ஸ்ரீதர் என்பவரை குத்தி போட்டாங்களே,, அந்த வழக்கு என்னாச்சு,, திருப்புவனம் இராமலிங்கம் கொலை வழக்கு, மற்றும் சசிகுமார் வழக்கில் சம்மந்தப்பட்ட ஆள் கூட இல. கணேசன் நட்பு பாராட்டி இருந்தார் அல்லவா, அந்த வழக்கு என்னவானது 

58 பேரு இறந்து போன கோயம்பத்தூர் குடும்பங்களுக்கு என்ன செய்தது கட்சி

இவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுப் போனது ஹிந்து அமைப்பு அர்ஜுன் சம்பத் தான், ஆனால் அவர் சிலவற்றை வெளியில் சொல்லமாட்டார் 

வடக்கு போல இங்க எந்த ஹிந்து இயக்கதுக்கும் சட்டசபைக்கு பாராளுமன்றத்துக்கு என தொகுதி ஒதுக்கி தேர்தலில் சீட் கொடுத்ததாக செய்தி இல்லை யார் ஒருவர் ஹிந்து மதத்தை தப்பாகப் பேசினாலும் சண்டை போட்டு வழக்கைச் சந்திக்கிறது ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, அவர்களை எல்லாம் அவர்கள் குடும்பம் சார்பாக நேர்ந்து விட்டாங்களா 

எத்தனை பாஜக நபர்கள் பசி பட்டினியில் கட்சி வேலை பார்த்துட்டு தன் புள்ளைங்களுக்கு படிப்புக்கு காசு கட்டமுடியாமல் உள்ளளான் அவனுக்கு என்ன செய்தது கட்சி?

எல்லாவற்றையும் தாங்கிக்கிட்டு தமக்கு ஓரு நேரம் வரும்னு இருந்த தொண்டர்கள் மத்திஇல் சரியான நேரத்தில் வந்தவர் தான் தலைவர் கே.அண்ணாமலை ,, அவரை அசிங்கப்படுத்தி மாற்று கட்சியிலி ருந்து வரவருக்கு எல்லாம் பதவியை தூக்கிக் குடுத்துட்டு இப்போது பேசி பலன் இல்லை 

திருப்பரங்குன்றத்தில் ஏன் ராம. ரவிக்குமாருக்கோ, உயிர்நீத்தவன் குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு ஏன் பாஜக சீட் கொடுக்கவில்லை? 

விருதுநகரில் நடிகை ராதிகாவுக்கு எல்லாம் சீட் குடுத்து உடனிருந்த தேமுதிகவை எதிர்க்க அவர் செய்த தியாகம் என்ன, அவர் கட்சிக்கு என் சீட் கொடுத்திங்க?





இவ்வளவு பெரிய ஓட்டையை அடைக்க முடியாமல் வைத்துக்கொண்டு கே. அண்ணாமலை மீது குறை சொல்லிக்கொண்டு பேசறீங்க ளே என தொண்டர்கள் கேட்பதை கவனிக்காமல் விட்டால் தமிழ்நாடு பாஜக கரைந்து போவதைக் கண்கூடகவே காணலாம்.


மாநில நிர்வாகியான பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் நபார்ட் வங்கியில் தமிழ்நாட்டில் தலைவர் எத்தனை பாஜக தொண்டனுக்கு வியாபார உதவிக்கு கடன் வழங்கியிருக்கிறார்?

இவங்கள எல்லாம் MLA, MP, என எல்லாவற்றிற்கும் ஆதரவு என்றால் உண்மை தலைவர் அண்ணாமலை இருக்க வேண்டிய இடத்தை தொணடர்கள் முடிவு செய்து விட்டார்கள்,  தலைவர் தொண்டர்கள் என்பது அடிமை சாசனம் அல்ல அன்புப் பாலம் 

ஆனால் ஒரே கேள்வி இன்னும் ஓடுகிறது ஓரு வருஷமா உலகத்துல உள்ள அத்தனை விஷயமும் தெரிஞ்ச நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எப்படி கே.அண்ணாமலைய விட்டார் 

தமிழ்நாட்டில பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜை மாற்றியவர் தலைவர்  கே அண்ணாமலையை 

அவரும் ஏன் கைவிட்டார், உங்களுக்காக வந்தவரை தெருவில விட்டீர்கள் அல்லவா,, நாங்கள் கோட்டையில் வைப்போம் பாருங்கள் என தொண்டர்கள் தற்போது லடசக்கணக்கில் இணைகிறார்கள், கே.அண்ணாமலக்கு தேர்தலில் சீட் வழங்காததால் தான் இவர்கள் கடந்த தேர்தலில் வேலை சரியாகச் செய்யாமல்  பல இடங்களில் 

விசில் ஊத வைத்த கதை கூறினால் இன்னும் பெரிது.  இதைத்தான் ஒரு பாஜக சார்ந்த சங்கப் பிரதிநிதி மற்றும் படித்தவர்கள் ஆதரிக்கும் அரசியல் பிரபல இதழ் கருத்தாகக் கூறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...