முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இயக்குனர் இமயம் காலமானார், அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இயக்குனர் இமயம் காலமானர் 


 தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் பிறந்து தமிழ் நேசராக வாழ்ந்த மனிதர்,  "என் இனிய தமிழ் மக்களே" என்ற வரிகள் நினைவு படுத்தும் இயக்குனர், பணம் படைத்த நபர்கள் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற நிலையை மாற்றியவர் 

அரங்கத்திற்குள் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடித்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத பாடல்களைத் தந்தவர்.ஸ்ரீ தேவி, ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ரோஜா உள்ளிட்ட கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படமாக்கிய பாரதிராஜா மருத்துமனை தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் தராத நிலையில் தற்போது

ஏதோ ஒரு காரணம் அவரது முதல்மரியாதை துவக்கக் காட்சிகள் போல நடக்கிறது

கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராகத் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் இணையருக்கு பிறந்தவரின் இயற்பெயர் சின்னச்சாமி பாரதிராஜாவானார். சந்திரலீலாவை மணந்த வருக்கு மனோஜ் மற்றும் ஜனனி என்ற இரண்டு பிள்ளைகளில் கடந்த ஆண்டு மனோஜ் காவமானார் 





மனோஜ் தாஜ்மஹால் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் நடிகை நந்தனாவை மணந்தார். ஜனனி மலேசிய ராஜ்குமார் தம்பி ராஜாவை மணந்தார். பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் மண்ணுக்குள் வைரம், வண்டிச்சோலை சின்ராசு , வானவில் மற்றும் குரு பார்வை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கத்துக்குட்டி  திரைப்படத்தில் அறிமுகமானார். இலக்கியத் தமிழை தூக்கிச் சுமந்த கலைச் சிகரங்களை இளைப்பாறச் செய்து..






நாட்டு நடைமுறை சொல்லாடல்களையும், கோவணம் கட்டிய வெள்ளந்தி மனிதர்களின் அன்றாட வாழ்வியல் உரையாடல்களையும் 70 MM வெள்ளித்திரையில் விரித்துக் காட்ட வைத்த தமிழன்


உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்     


 
ஒரு பிரபல கலைஞன் கடந்துவந்த பாதை:- செய்தித்தாள்கள் கிராமத்தை எட்டிப்பார்க்காத, தொலைக்காட்சிகள் வராத வானொலிப் பெட்டியில் சினிமா பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பான காலம் நாடகம். தெருக்கூத்துக்கள் தாண்டி சினிமா என்ற கனவு  பல கலைஞர்களுக்கு மனதில் ஆட்சி செய்த காலம். சொந்தமாக இசைக்கருவிகள் கூட இல்லாதவாங்க முடியாத பொருளாதார இடர்பாடுகள் மத்தியில் வாழ்ந்த நாட்களில், இரும்புக் கம்பியிலும் திண்டுக்கல் பூட்டிலும் இசையை உருவாக்கிக் கொண்டிருந்த அடித்தள மக்கள் சமூகம் சார்ந்த இசை வடிவப் பிரச்சாரம் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ணைப்புரம் பாவலர் வரதராஜன் தம்பி ராசையா என்ற பிற்கால இசைமேதை இளையராஜாவை   ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சின்னசாமி, பழைய மதுரை மாவட்டம் தேனி அல்லிநகரத்தில்  வாழ்ந்த காலம் 

நாடகக் குழுக்களுடன் அலைந்தபோது மனதில் பற்றிய சினிமா ஆசையின் தீப்பொறியே பின்னாளில் “பாரதிராஜா” என்ற பெயரில் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் போக்கையே மாற்றியது. பாடகர்கள் 
டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா ஆகியோரின் இசை நிகழ்ச்சியை பார்த்தபோதுதான், புகழும் பணமும் பெறுவதற்கான பாதை சினிமாதான் என்ற எண்ணம் சின்னசாமியின் மனதில் வலுப்பெற்றது.

“மெட்ராஸ் மெட்ராஸ்…” என்று மந்திரம் போல உச்சரித்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்த தாய், அவன் மனநிலை பாதிக்கப்படுமோ என பயந்து, கடன் வாங்கிய 300 ரூபாயை கையில் கொடுத்து ஒரு லாரியில் ஏற்றி சென்னை அனுப்பினார்.
கோடம்பாக்கம் தெருக்களில் அலைந்த நாட்களில், பசியை அடக்க உறவினர் வீட்டில் கிடைத்த காலை உணவின் ஒரு பகுதியை ஒளித்து வைத்து பாக்கெட்டில் எடுத்துச் சென்ற காலமும் அவருக்கு இருந்தது.
இளமையில் தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் மதுரை ரயில் நிலையத்தில் தங்கியிருந்த போது, பசியை போக்க அவர் கண்டுபிடித்த வழியும் வித்தியாசமானதே. சரக்கு வண்டிகளில் இருந்த அரிசி மூட்டைகளை சிறிது கிழித்து, கால்சட்டைப் பைகளில் அரிசி நிரப்பிக் கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சாப்பிடுவார். அந்தக் கஷ்ட வாழ்க்கை பின்னாளிலும் அவருக்கு மன உறுதியை அளித்தது.
சென்னைக்கு வந்த பிறகு, இளையராஜாவின் தெருக் கச்சேரி ஒரங்க நாடகக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் கன்னடமும் தமிழ் படமும் இயக்கிய இயக்குநர் புட்டண்ணாவின் உதவியாளராகச் சேர்ந்ததே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது
ஆனால் “சின்னசாமி” என்ற பெயர் சினிமாவுக்கு பொருத்தமாக இருக்காதென புட்டண்ணா கூறியதால், தனது தங்கை பாரதி, தம்பி ஜெயராஜ் பெயர்களை இணைத்து “பாரதிராஜா” என உருவாக்கினார். 


புட்டண்ணா பெங்களூருக்குச் சென்ற பின், எம். கிருஷ்ணன் நாயர் மற்றும் கே.எஸ். சேதுமாதவன் ஆகியோரின் உதவியாளராகப் பணியாற்றினார்.

அடையார் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த “தாகம்” திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம், திரைப்பட உருவாக்கத்தின் அனைத்து அம்சங்களையும் கற்றுத் தந்து, தனி இயக்குநராக உருவாகும் தன்னம்பிக்கையை அளித்தது.
தயாரிப்பாளர் எஸ். ஏ.ராஜ்கண்ணுவிடம் மூன்று கதைகளைச் சொன்னபோது, “மயில்” கதை அவருக்குப் பிடித்தது. “யார் இயக்கப் போகிறார்கள் ?” என்ற கேள்விக்கு எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பலரின் பெயர்களை பாரதிராஜா கூறினாலும், எஸ். ஏ.ராஜ்கண்ணு திருப்தியடையவில்லை.
ஒரு மாலை நேரத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்த பாரதிராஜாவின் சட்டைப் பையில் ஐந்து ரூபாய் நோட்டை வைத்து, “இந்தப் படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும்” என்று கூறியதே அவரது இயக்குநர் வாழ்க்கையின் 16 வயதினிலே படம் தொடக்கமாக அமைந்தது.
இளையராஜா மற்றும் அவரது சகோதரர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு, பாரதிராஜாவின் தாய்க்கும் கவலை அதிகரித்தது
குறைந்த வருமானம் கொண்ட சினிமா உதவி இயக்குநருக்கு பெண் கொடுக்கப் பலரும் தயங்கினர். ஒரு கட்டத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமும் கலைந்தது. பின்னர் உறவினரான சந்திரலீலா வாழ்க்கைத் துணையானார்.
“மயில்” திரைப்படம் தாமதமாகிக் கொண்டிருந்த காலத்தில், சிறிய வாடகை வீட்டில் பாரதிராஜாவின் குழந்தை பிறந்தது. அப்போது தயாரிப்பாளர் எஸ். ஏ.ராஜ்கண்ணு வந்து குழந்தையின் தொட்டிலில் 100 ரூபாய் நோட்டுக் கட்டை வைத்து, படப்பிடிப்பை உடனே தொடங்குமாறு கூறிய சம்பவம் மறக்க முடியாதது.
அடுத்த நாள் ஒளிப்பதிவாளர் நிவாஸுடன் இடங்களைத் தேடி சென்ற பாரதிராஜா, பின்னர் தமிழ் சினிமாவின் திசையையே மாற்றிய வரலாற்றைப் படைத்தார். 
“மயில்” என்ற கதை, “16 வயதினிலே” என்ற திரைப்படமாக உருவானது.


சிறுவயது நண்பரான இளையராஜா இசையமைத்த அந்தப் படத்தில் இடம்பெற்ற “செந்தூரப்பூவே” பாடலுக்காக பாடகி எஸ். ஜானகி தேசிய விருதும் பெற்றார்.
1977-ஆம் ஆண்டு வெறும் ஐந்து லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. நட்சத்திரங்களின் புகழை மையமாகக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, இயக்குநரின் கலை மற்றும் பார்வையை மையமாகக் கொண்ட புதிய பாதைக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா.




அதனால்தான் இன்று வரை தமிழ் சினிமாவின் வரலாறு “பாரதிராஜாவுக்கு முன்” மற்றும் “பாரதிராஜாவுக்கு பின்” எனப் பேசப்படுகிறது.
கிராமங்களிலிருந்து எண்ணற்ற இளைஞர்களுக்கு சென்னை நோக்கி கனவுகளுடன் பயணிக்கத் தைரியம் கொடுத்த அந்தக் காலம் மகத்தான கலைஞர்கள் பலர் உறுவாகக் காரணம் பாரதிராஜா தானே.



தனது தமிழ்த் தேசிய தகிப்பை இறுதி மூச்சு வரை ஏந்தி நின்ற உனது ஆன்மா என்றும் எங்கள் நெஞ்சில் இளைப்பாறட்டும் தேனி மாவட்டம், வத்தலகுண்டு  கொடைக்கானல் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கெங்குவார்பட்டி பாரதிராஜாவின் பண்ணை தோட்டம், அவரது விருப்பத்தின்படி இறுதி ஓய்விடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் ஆன்மா அமைதி பெறட்டும் ஓம் சாந்தி,      "மண்ணுக்குள் வைரம்' புதைகிறது மண்வாசனையுடன் ஆனால் அது என்றும் திரையுலகில் வரலாறாக ஜோலிக்கும் "முதல் மரியாதை' உடன் காலங்கள் தோறும்,

கருத்துகள்