முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊராட்சிகளில் கள ஆய்வு குறித்து சுற்றறிக்கை

தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில் 


காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு  செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை.




தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 

முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன.

அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை,

முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக்  முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவுகள் அகற்ற விழிப்புணர்வு பேட்டரி வாகனங்கள் 'சுகாதாரப் பாடல்' ஒலிக்க வேண்டும்.

ஆன்லைன் கட்டணம் தாமதம் மற்றும் தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். தவறும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை.

சுகாதாரம் ஆய்வுகள் (வழக்கமான மற்றும் திடீர்), மருத்துவமனை கட்டமைப்பு மேம்பாடு.

 பள்ளிகள் கட்டிடம், மரச்சாமான்கள் பராமரிப்பு. மரம் நடுதல்.

தெருநாய் கட்டுப்பாடு ABC திட்டத்தின் வழக்கமான ஆய்வு, வெறிநாய்க்கடி தடுப்பூசி (ARV) சிறப்பு கவனம்.

பணி தரம் UGSS, நீர் வழங்கல், சாலை & கட்டிடப் பணிகள் குறித்து பொறியாளர்கள் தினமும் ஆய்வு செய்து, தடிமன், சிமெண்ட், பிற்றுமின் தரத்தை சோதிக்க வேண்டும்.

குறிப்பு: ஆய்வுக் குறிப்புகளை மாதாந்திர கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவில் "ஒழுங்கு நடவடிக்கை" மற்றும் "தரச் சோதனை" போன்ற வார்த்தைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், முந்தைய சுற்றறிக்கைகள் பல செயல்படுத்தப்படாமல் போனதே பெரும் கேள்விக்குறி.

காலை 7 மணிக்கு முன் கள ஆய்வு என்பது ஏற்கனவே உள்ள விதிகளின் மறுபதிப்பா? அல்லது புதிய கண்காணிப்பு முறையா?

பணியாளர் பற்றாக்குறை கையாளப்படாவிட்டால், இந்த உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே நிற்கும்.

நான்காவதாக பொதுமக்களின் எதிர்வினை (சமூக ஊடகங்களில்)

"வருகை, தூய்மை, தெருநாய், பள்ளிகள் குறித்து எல்லாவற்றுக்கும் சுற்றறிக்கை. ஆனால் நடைமுறையில் ஊழலும், அலட்சியமும் தொடர்கிறதே?" 

பலர் இந்த உத்தரவுகளை வரவேற்பதாகத் தெரிவித்தாலும், கடந்த 10 ஆண்டுகளாகப் பின்பற்றப்படாத பல விதிகள் இன்றும் பொருட்படுத்தப்படாமல் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜூன் மாத மதிப்பாய்வுக் கூட்டத்தில் ஆணையர்கள் நிறைவேற்றத்தை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்படுமா?

பொதுமக்களின் குறைகள் எளிதில் பதிவாகும் வழிமுறை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

இந்தச் சுற்றறிக்கை ஒரு சிறந்த நிர்வாகக் கையேடு போல் இருந்தாலும், கடந்த கால தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. "தினமும் ஆய்வு", "தரச் சோதனை" என்பதெல்லாம் 2000-ஆண்டுகளிலேயே இருந்த விதிகளே. புதிதாக ஒன்றுமில்லை. முக்கியப் பிரச்சனை பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தில் உள்ள அரசியல் தலையீடு. அது சரி செய்யப்படாவிட்டால், இந்த 16 அறிவுறுத்தல்களும் காகிதக் புலிகளாகவே இருக்கும்.தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் உத்தரவைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு : தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தினமும் காலை ஏழு மணிக்கு குப்பைகள் அள்ளுவதையும், கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா என்பதையும் மற்றும் பொதுமக்கள் கூடும் பஸ் நிலையங்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதையும் அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் உடனுக்குடன் அதைச் சரி செய்து தர வேண்டும். ஊழியர்கள் பணிக்கு வருகிறார்களா என்பதை தினமும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு புதன் கிழமை மாலையும் தெரு விளக்குகள் எரிகிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். எரியாவிட்டால் 24 மணி நேரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிக்கு கேட்டு விண்ணப்பித்தால் ஆய்வு செய்து எவ்வித காலதாமதம் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். தாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தினமும் ஆணையர்கள், பொறியாளர் அவர்களுடன் நேரில் ஆய்வு செய்து கட்டுமானப் பணி தரமாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நகராட்சி நிர்வாக குடிநீர் வழங்கல் துறையினர் செயலாளர் ககன் தீப்சிங் பேடி மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...