எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளர். இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 15 நவம்பர் 2023 அன்று சசி தரூரிடமிருந்து அகில இந்திய வல்லுநர்கள் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார். ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட தரவுப் பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியை நவீனப்படுத்த உருவாக்கப்பட்ட சக்தி என்ற திட்டத்தின் பின்னணியில் அவர் மூளையாக இருக்கிறார். நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்டோரின் உதவியுடன் கட்சியின் 2019 தேர்தல் அறிக்கைக்கான NYAY திட்டத்தை அவர் ப.சிதம்பரத்துடன் இணைந்து உருவாக்கினார். சக்ரவர்த்தி ஒரு சிந்தனைக் குழுவில் அரசியல் பொருளாதார அறிஞர், முதலீட்டு வங்கியாளர் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் அரசியலில் நுழைவதற்கு முன்பு சக்கரவர்த்தி 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் வேட்பாளராக இருப்பார் என்று பரவலாக அறிவிக்கப்பட்டது.
பிரவீன் சக்ரவர்த்தி, இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதைக் கண்காணிக்க 2 பிப்ரவரி 2025 அன்று இந்திய தேசிய காங்கிரஸால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட செயல் தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் (ஈகிள்) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கருத்துகள்