முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லி பயணம் முடிந்து ஸ்ரீ மூகாம்பிகை ஆலயம் செல்லும் முதல்வர்

தமிழ்நாடு முதல்வர் சி ஜோசப் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.


டெல்லி பயணத்தை நாளல 12 ஆம் தேதி முடிக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அங்கிருந்தபடி நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாகத் தகவல. இங்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சென்று வழிபட்ட நிலையில் தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் செல்கிறார்.

 3 நாள் பயணமாக டெல்லி சென்றவர். டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவையும் குடியரசு துணைத்தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினார்.


அதன்பிறகு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இன்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை ஜூன் 12 ஆம் தேதி

டெல்லியிலிருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர் சென்று அங்கிருந்து காரில் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்குச் செல்கிறார்.  ஸ்ரீ மூகாம்பிகை கோவில் மிகவும் பிரபலமாக தமிழ்நாடு , கேரளம், கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

இன்னும் சொல்லப்போனால் இந்த கோவிலில் முப்பெரும் தேவியர் உள்ளனர். கொல்லூர் மூகாம்பிகை அம்மனாக மகாலட்சுமி (செல்வம்/செல்வாக்கு), மகாசரஸ்வதி (அறிவு/அரசியல் சாணக்கியத்தனம்), மாகாளி (வீரம்/எதிரிகளை வெல்லும் சக்தி) ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாகத் திகழ்கிறார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.




அதிகாரம், செல்வாக்கு மற்றும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை கோவிலில் உள்ள முப்பெரும் தேவிகள் கொடுப்பதாக நம்பிக்கை இதனால் இந்த கோவிலில் வேண்டி கொண்டால் மொத்த அதிகாரமும், அதனை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை பல அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

மேலும் கோவிலில் சண்டி ஹோமம் (சத்ரு சம்ஹாரம்) நடத்தும் போது அரசியலில் எதிர்ப்புகளும், துரோகங்களும், மறைமுக எதிரிகளும் வீழ்த்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இந்த கோவிலின் தீவிர பக்தர். அவர் தங்கவாள் காணிக்கையாக வழங்கி உள்ளார்.


அதேபோல், தான் ஜெயலலிதாவும். தமிழ்நாட்டில் 2002 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற பிறகு 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சண்டி ஹோமம் நடத்தினார்.

அதேபோல் ஜெயலலிதா தனது அரசியல் வாழ்வில் சோதனையான காலகட்டங்களைச் சந்தித்தபோது, இங்கு வந்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை செய்துள்ளார். இதனால் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் சி. ஜோசப் விஜய்யும் சண்டி ஹோமம் நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவலில்லைநிதி ஆயோக் 11 வது கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசியதாவது 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் 11 வது கூட்டத்தில் முதலமைச்சர் உரை

மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்பட எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.





நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர வேண்டும், எந்தவித நிபந்தைனையும் இன்றி ரூபாய் .3284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாக திகழ்கின்றன.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்.

நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. என குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

கருத்துகள்