முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்

ஏழைகளுக்கு அதிகாரமளித்த



ல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டு நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 3.23 கோடியில் இருந்து, 2026 மே மாதத்தில் 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ல் 39 சதவீத பகுதிகள் மட்டுமே சுகாதார வசதிகள் பெற்றிருந்த நிலையில், 12.11 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்து கிராமங்களும் 100 சதவீதம் சுகாதார கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்களின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டதுடன் காற்று மாசும் குறைக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் 43.93 கோடி சுகாதார அட்டைகளை வழங்கிப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதிகளை வழங்கியுள்ளது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 81 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்களை உறுதி செய்துள்ளது.




பெண் குழந்தைகளின் ஆரம்பப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 2013-14-ல் 4.6 சதவீதத்திலிருந்து 2024-25-ல் 0.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. டிஜிட்டல் சீர்திருத்தங்கள் ஆதார் அடிப்படையிலான ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சாத்தியமாக்கியுள்ளன. நீர், சுகாதாரம்,பிற வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை மூலம் முன்னேறும் மாவட்டங்கள், பழங்குடியினப் பகுதிகளில் நலத்திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

வறுமை ஒழிப்பு மற்றும் பிற துறைகளில் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகள்

கடந்த தசாப்தத்தில், வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு, நலத்திட்ட விநியோகத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. பொதுக் கொள்கையானது உள்ளடக்கம், அணுகல்தன்மை, கடைக்கோடி நபர் வரையில் பலன்கள் சென்றடைதல் ஆகிய கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.


குறிப்பாக, சராசரி பணவீக்கம் 2004-2014 காலகட்டத்தில் 8.1 சதவீதத்திலிருந்து, 2014-2025 காலகட்டத்தில் 5.1 சதவீதமாகக் குறைந்தது. இது விலை ஸ்திரத்தன்மைக்கும், குடும்பங்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதற்கும் பங்களித்தது. அதே நேரத்தில், இந்தியாவில் வறுமை 2013-14-ல் 29.17 சதவீதத்திலிருந்து 2022-23-ல் 11.28 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த முன்னேற்றம் நிதி உள்ளடக்கம், குறைந்த விலையில் சுகாதார சேவைகள், உணவுப் பாதுகாப்பு, வீட்டுவசதி, வாழ்வாதார ஆதரவு, டிஜிட்டல் சீர்திருத்தங்கள் ஆகிய முக்கிய நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் சாத்தியமானது. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, பொதுச் சேவை விநியோகம் ஆகியவை இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இத்தகைய முன்முயற்சிகள் கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.

கண்ணியத்தின் அடித்தளம்: அடிப்படைத் தேவைகளுக்கான உலகளாவிய அணுகல்

அரசின் நலத்திட்டங்கள் நகர்ப்புற, கிராமப்புற இந்தியா முழுவதும் குழாய் நீர் இணைப்பு, சுகாதார வசதிகள், சமையல் எரிவாயு இணைப்புகள், கிராமப்புற மின்மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளன. இந்த முயற்சிகள் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திலும், அடிப்படைச் சேவைகள் பெரிய அளவில் அனைவரையும் சென்றடைந்ததையும் பிரதிபலிக்கின்றன. கடந்த தசாப்தத்தில், தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பான குடிநீர், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் ஆகியவை இந்தியாவின் நலன், பொதுச் சுகாதார உத்தியின் மையத் தூண்களாக உருவெடுத்துள்ளன. அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளதோடு சுகாதார பாதிப்புகளைக் குறைத்துள்ளன. இது கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில் மக்களின் கண்ணியத்தை வலுப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...