முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய வரலாற்றில் வெற்றிகரமாக மண்ணிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட தனியார் ராக்கெட் விக்ரம்-1

இந்திய வரலாற்றில் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக மண்ணிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.



இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள விண்ணெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து மட்டும் 80 பேர் வரை தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் 

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இங்கு திட்ட இயக்குனர் விக்டர் ஜோசப் அவரது பணியை ராஜினாமா செய்துள்ளார் சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுக்க முன்வருவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவிலிருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேரத் துவங்கியுள்ளனர்.



இதனால் இஸ்ரோ செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியிலிருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிலிருந்து 100 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 120 விஞ்ஞானிகள், இயக்குநர்கள், உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் அவர்களது பணியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது,

 இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியில் இருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

இதுவரையில்  இஸ்ரோ மைய இயக்குநர்கள் விருப்ப ஓய்வுக்கு அனுமதி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களிடமிருந்து அந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இனி விஞ்ஞானிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிலிருந்து விலக அல்லது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான மனுக்களை இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் பணி விலகுவதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி படுத்தினார். ஆனால் இந்த நெருக்கடியிலிருந்து வெளி வர முடியும் என்றும் ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நெருக்கடியைச் சந்திக்கக்கூடிய ஒன்றுதான் எனவும் தெரிவித்தார் அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் இறுதி முடிவிற்காக நேரடியாக மத்திய விண்வெளித் துறைக்கு (DoS) அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்தியாவின் முக்கிய விண்வெளித் திட்டங்களான ககன்யான்  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணி முடியும் வரை, அதில் தொடர்புடைய விஞ்ஞானிகளின் ராஜினாமாவை பொதுவாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இது குறித்துக் கூறுகையில், பெரிய நிறுவனங்களில் பணியாளர்கள் வருவதும் போவதும் இயல்பான நிர்வாக நடைமுறைதான் என்றும், இதனால் இஸ்ரோவின் நீண்டகால திட்டங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்ற  பக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் எதிர்கால வளர்ச்சி குறித்து வினா எழுகிறது,

இப்போது ராக்கெட் விண்ணில்  ஏவிய  தனியார் நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸை நிறுவியவர்கள் பவன் குமார் சந்தனா மற்றும் நாக பாரத் டகா.

இருவருமே இஸ்ரோவில் பணிபுரிந்து 2018 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனத்தைத் துவங்கியவர்கள்.

இன்னொரு பக்கம் சமீபமாக இஸ்ரோவிலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் அடுத்தடுத்து வெளியேறுகிறார்கள் என்ற செய்தி. இதற்குப் பின்னணி, அவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் கடுமையான  கட்டுப்பாடுகள் என்கின்றனர். இஸ்ரோ மீண்டும் மீண்டு எழ வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...