முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர்

சாதனை அளவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, இந்தியா மீதான உலகளாவிய நம்பிக்கைக்குச் சான்றாக உள்ளது - பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்



கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம், பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து தற்சார்புக்கும், தற்சார்பிலிருந்து தன்னம்பிக்கைக்கும், தன்னம்பிக்கையிலிருந்து வளர்ச்சி பெற்ற இந்தியாவைக் கட்டமைப்பதற்குமான ஒரு முன்னேற்றப் பயணமாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று, (ஜூலை 04, 2026) புதுதில்லியில் ஊடக அமைப்பு ஒன்று  ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது முதல் பதவிக்காலத்தில் பற்றாக்குறைகளைக் களைந்து, வாய்ப்புகளை விரிவுபடுத்தி, பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்தது என்றார். இரண்டாவது பதவிக்காலத்தில், அது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, சாதனைகளாக மாற்றி, நாட்டை தற்சார்புப் பாதையில் உறுதியாக நிலைநிறுத்தியது என்று அவர் தெரிவித்தார். மூன்றாவது பதவிக்காலத்தில், "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்" என்ற கொள்கையின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து வருவதாக அவர. கூறினார். நான்காவது பதவிக்காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் எழுச்சியை உலகம் காணும் என்று அவர் கூறினார்.

கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த அமைச்சர், 2014-ல் 'மேக்-இன்-இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டபோது, சில தரப்பினர் அதை ஒரு தோல்வி என்று முத்திரை குத்தியதை சுட்டிக்காட்டினார். ஆனால் அந்தத் திட்டம் வெற்றிக்கான புதிய அளவுகோல்களை அமைத்ததுடன், இன்றும் அது தொடர்ந்து வருகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். முன்பு உலகம் நமது குரலுக்குச் சிறிதும் செவிசாய்க்காத நிலையில், இப்போது உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை உலக நாடுகள் கவனமாகக் கேட்கின்றன என்று அவர் கூறினார்.

2025-26-ம் நிதியாண்டில் ஆண்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது என்றும், இது 2014-15-ம் நிதியாண்டின் அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 2013-14-ம் நிதியாண்டில் ₹686 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, இப்போது ₹38,000 கோடியைத் தாண்டி சாதனை அளவை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். இது கிட்டத்தட்ட 57 மடங்கு அதிகம் எனவும் 'மேக்-இன்-இந்தியா' போன்ற திட்டங்கள் மீதான உலகளாவிய நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் மொபைல் உற்பத்தி, வாகன ஏற்றுமதி, உள்நாட்டு ரயில் இன்ஜின் உற்பத்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவாக்கத்தைக் குறிப்பிட்ட அவர், உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துரைத்தார்.

ஊடகங்களின் உண்மையான சக்தி என்பது தகவல்களைப் பரப்புவதில் மட்டுமல்லாமல், சமூகத்தை சரியான திசையில் வழிநடத்துவதிலும், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதிலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் உள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். தவறான தகவல்கள் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறிய அவர், பத்திரிகைத் துறையில் முதலில் செய்தி வெளியிடுவது முக்கியமாக இருந்தாலும், சரியான செய்திகளைப் வெளியிடுவது அதைவிட மிக முக்கியமானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங் குறிப்பிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...