தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. மாநில தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் இடமாற்ற உத்தரவுகளை வெளியிட்டார்.மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் :
ஜெ.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவராக இருந்தவர், தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். வி.அருண் ராய்: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்தவர்,
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீரஜ் குமார்: உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்ரியா சாஹு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இடமாற்றப்பட்டுள்ளார்.
காகர்லா உஷா: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளராகப் பொறுப்பக்குச் செல்கிறார்.பிரதீப் யாதவ்: தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.
அதுல் ஆனந்த்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையிலிருந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பி.உமாநாத்: நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து தொழில் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.








கருத்துகள்