ரூபாய் .2,000 ஐ தற்போது மாற்றிக் கொள்ளலாம் ஆர்பிஐ தகவல்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் .2,000 நோட்டுகளை தற்போது எவ்விதமான சிரமமுமின்றி மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் பணமாகவே அதாவது Legal Tender நீடிக்கின்றன. இருப்பினும், Commercial Bank எனும் வணிக வங்கிக் கிளைகளில் இவற்றை மாற்றும் வசதி அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி , 2023-டன் முடிவடைந்து விட்டதால், தற்போது நோட்டுகளை மாற்ற பின்வரும் இரண்டு வழிமுறைகள் உண்டு: முதலாவது . நேரில் சென்று நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று ரூபாய் .2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூபாய் .20,000 வரை நேரடியாக மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு.
மற்றும் தபால் மூலம் அனுப்புதல் இந்திய அஞ்சல் துறை சார்ந்தும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரடியாக வர முடியாதவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலிருந்தும் இந்திய அஞ்சல் துறை மூலம் தங்களின் ரூபாய் .2,000 நோட்டுகளை ஏதேனும் ஒரு ரிசர்வ் வங்கி அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நீங்கள் அனுப்பும் நோட்டுகளுக்கான சரியான மதிப்பு, நீங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதற்கு தேவைப்படும் ஆவணங்களாக பணத்தை மாற்ற அல்லது வங்கிக் கணக்கில் செலுத்த முறையான அடையாள ஆவணங்கள் (KYC) மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
அதற்கு எவ்விதமான கட்டணமும் கிடையாது: ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்த ரூபாய் .2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மே மாதம் 19 ஆம் தேதி , 2023 அன்று ரூபாய் .2,000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை சுமார் 98.47 சதவீதம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள்