சமூக ஆர்வலராக சில அரசியல் குழுவின் மூலம் அறியப்படும் சோனம் வாங்சுக் 26 நாட்களுக்குப் பிறகு அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த பாஜகவின் தலைவர்கள் முன்னிலையில் அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்," என வாங்சுக் குறிப்பிட்டுள்ளார்.
பல நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
"மிக விரைவில் ஒரு தனி வீடியோவில் இந்த நிபந்தனைகள் குறித்து நான் விரிவாக விளக்குவேன். நீங்கள் எங்கும் எந்தவொரு வன்முறையும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என வாங்சுக் அதில் எழுதியுள்ளார்.சமூக விரோதிகளைக் கண்டறிந்து அவர்கள் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கை துவங்குகிறது எனத் தகவல் வந்ததும் டெல்லி காவல் துறையிடம் கரப்பான்பூச்சி கட்சி போராட்டம் கரைந்து வருகிறது
சிலரால் சமூக ஆர்வலர் எனக் கூறப்பட்ட சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான எக்ஸில் ஒரு வீடியோவை வெளியிட்ட தீப்கே, ''சோனம் சார் 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எங்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. சார், உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி. உங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளீர்கள். உங்கள் உயிர் இந்த நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்கது'' என்று கூறினார்.
''தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டத்தை தொடரும்'' எனவும் அறிவித்துள்ளார்.
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.இதற்கிடையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அரசு தரப்பிலிருந்து விடுக்கப்படும் கோரிக்கைகளும் உத்தரவாதங்களும் இளைஞர்களிடையே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.















கருத்துகள்