முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

5 தொகுதி நீதிமன்றம் விதித்த தடை காரணமாக மீதமுள்ள இரண்டு தொகுதி தேர்தல் பரிட்சை நடக்கும் நிலை

தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

திருச்சிராப்பள்ளி (கிழக்கு), பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது




ஒரு தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும், வரிகள் செலுத்துவோரின் பணத்தை வீணாக்காமல் இருக்கவும் இந்தத் தடை அவசியமென நீதிமன்றம் கருத்து. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிப்பதிலிருந்து, சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது. திருச்சிராப்பள்ளி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில், வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக 





தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவில் உள்ள வாதங்களை ஆரம்பக் கட்டத்தில் ஏற்றுக்கொண்டு, இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது. தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அந்தத் தொகுதிகளை தெளிவான காலியிடம் எனக் கருத முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.






இடைத்தேர்தல் நடத்தினால், ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் பிரதிநிதிகளாக உரிமை கோரும் நிலை ஏற்படும். இது ஒரு இயலாத சூழ்நிலையை உருவாக்கும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. முன்கூட்டியே இடைத்தேர்தல் நடத்துவது, வரி செலுத்துவோரின் பணத்தை பெரிதும் வீணாக்கும் மட்டுமல்ல, கடுமையான அரசியல் சாசன நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கவலை தெரிவித்தது.





திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. வெங்கடாசலபதி  பொதுநல மனுவைத் ஒன்றை தாக்கல் செய்தார் அதில் தேர்தல் மனுக்கள் நிலுவையிலிருக்கும் போதே இடைத்தேர்தல் நடத்தினால், ஒரு தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.





இந்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று முக்கிய தீர்ப்புகள் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. டி. சஞ்சீவையா  எதிர் தேர்தல் தீர்ப்பாயம் (1967) வழக்கில், தேர்தல் மனு நிலுவையிலிருக்கும் போது, அந்த இடத்தை இடைத்தேர்தலுக்கு அறிவித்து விட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தேர்தல் ஆணையம் எதிர் தெலங்கானா ராஷ்டிர சமிதி (2011) வழக்கில், தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, இடைத்தேர்தல் நடத்த கடமைப்பட்டிருக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பிரமோத் லட்சுமண் குடாதே எதிர் தேர்தல் ஆணையம் (2018) வழக்கில், தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருந்தால், அந்த இடத்தை தெளிவான காலியிடம் என்று கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.


இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி, பொதுநல மனுவைத் தொடுப்பதற்கு மனுதாரருக்கு தகுதி இல்லை. அவர் இந்தத் தொகுதிகளில் வாக்காளர் கூட இல்லை என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில், சில மனுக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவற்றில் நோட்டீஸ் கூட பிறப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது.

ஆனால், நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்கவில்லை. இது பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயம். மனுதாரருக்கு இந்த மனுவை தொடுக்க உரிமை உண்டு என நீதிமன்றம் கூறியது.

தடை விதிக்கப்பட்டுள்ள தொகுதிகளான: திருச்சிராப்பள்ளி கிழக்கு (தவெக முதல்வர் சி. ஜோசப் விஜய் ராஜினாமா), பெருந்துறை (அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் ராஜினாமா), அம்பாசமுத்திரம் (அதிமுக எம்எல்ஏ எஸ். எஸ்க்கி சுப்பையா ராஜினாமா), விராலிமலை (அதிமுக எம்எல்ஏ டாக்டர் சி. விஜயபாஸ்கர் ராஜினாமா), கரூர் (அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா).

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை தேர்தல் ஆணையம் இந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாது. அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் பிற தரப்பினர் ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்குள் தங்களின் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடத்தினால் ஏற்படும் சிக்கல்களை உணர்ந்து, உயர்நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அபாயத்தை தவிர்த்துள்ளது. இந்த உத்தரவு, தேர்தல் முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க உதவும். இந்த ,WP/27064/2026 (PIL), மற்றும் WMP 29637/2026 தடை உத்தரவு மற்றும் WMP 29634/2026 தடை உத்தரவு மற்றும் WMP 29636/2026       தடை உத்தரவு கே.வெங்கடாசலபதி /எதிர் / இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் 11 பேர். சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்கள்  M/S. வி.ஆர்.சண்முகநாதன், பி.பிரவீன், என்.ஷர்மியா சென்னை ஆகியோர் ஆஜராகினர், மனுதாரர்  திருநெல்வேலி வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதி மன்றத்தில்  அவசரப் பொதுநல வழக்கில். ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான தேர்தல் முறைகேடு மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பதற்காக அந்தத் தொகுதிகளுக்கு அவசரமாக இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தலைமையில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.          ராஜினாமா செய்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்: அதிமுகவிலிருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.காரணம்: அதிமுக தலைமையின் மீது ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் அதிருப்தி காரணமாகவே தாங்கள் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இசக்கி சுப்பையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தவெக-வில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தகுதி நீக்க நடைமுறைகளை எதிர்கொள்ளும் சூழலில், ஜூலை 9, 2026 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்கக் கூடாது என்று எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த அதேசமயம், எஞ்சிய மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதில் தற்போதைக்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. ஏனெனில், இந்த இரு தொகுதிகளுக்கு எதிராக எந்தவொரு தேர்தல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இதில் இரண்டு தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப் படலாம் அதில் தவெக வெற்றி பெறும் பட்சத்தில் எண்ணிக்கை இரண்டு மட்டுமே அதிகரிக்கும்,  ஆனால் தற்போது தடை விதித்த 7 தொகுதியில் தேர்தல் நடந்து அதில் தவேக வெற்றி பெற்றால் கூட்டணி இல்லாமல் தனிப்பெரும்பான்மை பெறும். ஆகவே இரண்டு தொகுதிகளில் தான் இனி இடைத்தேர்தல் முதலில் நடக்கும் அதாவது வடக்கு மற்றும் மேற்கு இரண்டிலும் நீதிமன்றம் தடை விதித்த ஐந்து தொகுதிகளில் தீர்ப்பு வந்த பின்னரே தேர்தல் நடக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...