ரூபாய் 8,000 லஞ்சம் வாங்கிய காவல் சிறப்பு எஸ்.ஐ. கைது!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) சத்தியமூர்த்தி, இளம் பெண் மாயமான வழக்கில் தொடர்புடைய குற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூபாய் 3,000 லஞ்சம் கேட்பது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய பொறி வைத்து சோதனையில், ரூபாய் 3,000 லஞ்சம் பெற்றபோது சத்தியமூர்த்தியை பணம் பெற்ற கையுடன் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.யிடம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்த ஒரு பார்வை :-சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய சிறப்புச் சார்பு ஆய்வாளர் SSI சத்தியமூர்த்தி (வயது 59), 3,000 லஞ்சம் வாங்கிய நிலையில் கைது. சீரம்பட்டி தெய்வேந்திரன் மகன் காதலித்த பெண்னைத் திருமணம் செய்த விவகாரத்தில், பெண் வீட்டார் செய்த பிரச்சினையைச் சமரசமாகப் பேசி தானே முடிப்பதாகக் கூறிய, தெய்வேந்திரனிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி ரூபாய் 10,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதில் பேரம் பேசி இறுதி லஞ்சம் 8 ஆயிரம் என முடிவாகி அவர் ஏற்கனவே முதற்கட்டமாக ரூபாய் 5,000 பணத்தை ஜி-பே (G-Pay) மூலம் அனுப்பியுள்ளார். மீதமுள்ள லஞ்சம் ரூபாய் 3,000 பணத்தைக் கேட்டு எஸ்.எஸ்.ஐ தொடர்ந்து கட்டாயமாக வற்புறுத்தியதால், தெய்வேந்திரன் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார், அவர்கள் அறிவுறுத்தலின்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் 3,000 பணத்தை திருப்புவனம் பைபாஸ் ரோடு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்து சத்தியமூர்த்தியிடம் புகார் செய்த நபர் அரசு சாட்சிகள் முன்னிலையில் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அதே போல திருப்புவனம் பகுதியில், நிலப்பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூபாய் 3,000 லஞ்சம் வாங்கிய மேலராங்கியம் வருவாய்த் துறை தலையாரி அதாவது கிராம உதவியாளர் கணேசன் (வயது 52) என்பவரையும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர் அதன் பின் விசாரணை முடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் சேர்த்தனர், அவர் பணி ஓய்வுக்கு ஒருமாத காலமே உள்ள நிலையில் சிக்கிய நிலை பணிக்காலத்தில் இவர் என்ன தவறுகள் செய்திருப்பார் என்பதே பலரது வினா? ஆக சத்தியம் தவறிய சத்தியமூர்த்தி. என்பதே சரி


கருத்துகள்