திமுக ஆட்சியில் தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவரான ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை தற்போது தான் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த திட்டக்குழுவின் பொறுப்புகள் காலியாகின.
திமுக ஆட்சியில் திட்டக்குழுவின் தலைவராக அப்போதய முதல்வர் மு. க.ஸ்டாலின் செயல்பட்டார்.
அவருக்கு கீழ் திட்டக்குழுவின் துணை தலைவராக பொருளாதாரம் அறிந்தவர் என பலரும் கூறும் ஜெ. ஜெயரஞ்சன், ஆர் சீனிவாசன், எம் விஜயபாஸ்கர் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலரான சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பநாதன், சிவராமன் உள்ளிட்டவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருந்தனர் .அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான நிலையில் இந்த திட்டக்குழுவின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த ஜெ ஜெயரஞ்சன் செயல் துணை தலைவராக்கப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் என அனைவரும் மொத்தமாகவே ராஜினாமா செய்தனர்.
இது அரசு சார்ந்த நியமனப் பொறுப்பாகும். இதனால் தற்போது தவெக அரசின் ஆட்சி முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடப்பதால் திட்டக்குழுவில் இதுவரை அங்கம் வகித்தவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தவெக சார்பில் திட்டக்குழுவின் துணை தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்ய வழி இதன்மூலம் விரைவில் முதல்வர் மாநில திட்டக்குழுவில் இடம் பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் பிரபல பொருளாதார வல்லுநரான முனைவர் மா. ஆனந்தகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 1971 மே 25 அன்று இந்த மாநிலத் திட்டக்குழு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக எப்போதும் மாநில முதலமைச்சரே செயல்படுவார். இக்குழுவின் முக்கியப் பிரிவுகள் மற்றும் அமைப்பு:திட்டக்குழுவின் கட்டமைப்பு தலைவர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.துணைத் தலைவர்: பொதுமக்களில் சிறந்த பொருளாதார/நிர்வாக வல்லுநர்கள் நியமிக்கப்படுவர்.
உறுப்பினர்கள்: முழுநேர மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள், துறைச் செயலாளர்கள் (நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை). சார்பாக இருக்கும். கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் பொருளாதார சீர்கேடுகளுக்கு முழு காரணத்தை விசாரணை நடத்தினால் பல தவறுகள் வெளிவரும்.. இதில் பொது நீதி யாதெனில் :- ஒரு அயோக்கியனை சுதந்திரமாக விட்டுவிட்டால், அவனது அடுத்த வேலை சுத்தமான யோக்கியனை கேலி செய்வதே! இதை நாம் கூறவில்லை -கவிஞர் கண்ணதாசன் வார்த்தைகள்




கருத்துகள்