கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு பின்பாக பாஜவுடன் அதுவரை ஒட்டி உறவாடிய
தமிழ்நாடு கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ), ஜான் பாண்டியன் மமுக கட்சிகள் ஏற்கனவே காரணம் கூறாமல் வெளியேறியது ஆனால் 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையில் பல தலைவர்கள் இருந்த நிலையில் தற்போது சரியில்லாத அதன் பொறுப்பாளர்களை முழுவதும் மாற்ற வேண்டும் என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறன் ஜி தரும் குரல் பலமானது, அதிமுகவில் இருந்து பாஜக மாறி வந்த அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை நீக்கம் செய்தால் மட்டுமே கூட்டணி தொடரும் என கே.சி. திருமாறன் ஜி வெளியிட்ட அறிக்கை. டெல்லி தேசியத் தலைமையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசியலில் கூட்டணி கட்சி பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரனை தேசியத் தலைமை நீக்கம் செய்ய வேண்டும் என கே.சி. திருமாறன் ஜி வெளியிட்ட 'அந்த' அறிக்கை. வி தி லீடராக அண்ணாமலை வெளிவந்த பின் நடக்கும் அடுத்த காட்சி
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையையும், அதன் பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும் என தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி. திருமாறன் ஜி தற்போதைய பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார், தமிழ்நாடு பாரரதிய ஜனதா கட்சியின் தலைமை ஒரு தனி 'சிண்டிகேட்' போலச் செயல்படுவதாகவும், இவர்களால் பாஜகவுக்கு அழிவே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேசியத் தலைமை உடனடியாக தலையிட்டு இந்த நிர்வாகிகளை மாற்றாவிட்டால், கட்சி இன்னும் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என எச்சரித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பத்து வருடமாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீடித்து வருவதைச் சுட்டிக்காட்டிய கே. சி.திருமாறன் ஜி, பரரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், ஜனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும் மட்டுமே தாங்கள் இந்தக் கூட்டணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு எந்தவித சுயநலமோ, ஆதாயமோ இல்லாத நிலையிலும், கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டதாகக் கூறுமவர், தற்போதைய மாநிலத் தலைமைக்கு ஒரு கூட்டணியை எப்படி நடத்த வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூடத் தெரியவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும், பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டும் தற்போதைய தலைமை, தங்களைப் போன்ற உண்மையான சித்தாந்தவாதிகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாஜக மாநிலத் தலைமையின் தவறான அணுகுமுறையால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, நின்ற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர் என்ற கடுமையான குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். திமுக, அதிமுகவில் இருக்கும் அதிகாரக் கலாச்சாரத்தை பாஜகவிற்குள் இந்தத் தலைமை கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளவர், அடிமட்டத் தொண்டன் எப்போதுமே அடிமட்டத் தொண்டனாகவே இருக்க வேண்டும் என இவர்கள் நினைப்பதாகக் கூறியுள்ளார். “தேர்தல் என்று வந்துவிட்டால் தாங்களே நிற்க வேண்டும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது” என்ற சுயநலச் சித்தாந்தமே தற்போதைய மாநிலப் பொறுப்பாளர்களிடம் மேலோங்கியுள்ளது என விமர்சித்துள்ளார்.
1991 முதலே ஹிந்து ஜனாதன தர்மத்திற்காகப் போராடி வரும் தங்களைப் போன்றவர்களின் வரலாறு தற்போதைய தேசியத் தலைமைக்குத் தெரியாதென்று குறிப்பிட்டுள்ள கே.சி. திருமாறன் ஜி, தன்னை கூட்டணியை விட்டு வெளியேற்றத் தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தின் பிரதிநிதியாகவும், அனைத்துச் சமூக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் விளங்கும் தான், கட்சியின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகிய பாஜகவின் தேசியத் தலைவர்களுக்கு இந்தக் கோரிக்கையை வைப்பதாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்தத் தலைமையையும் மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளவர், தாங்கள் கட்சி கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை இனி தேசியத் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீப காலமாக அதிமுக கட்சியிலிருந்து பலரும் மாற்று கட்சிக்கு விலகிச் செல்லும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறுவது பாஜக மாநிலத் தலைமை தொடர்ந்து நீடிக்கும் நிலைமை தான் என்பது தற்போது தெரிய வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சர் உளவுத்துறை மூலம் இதை நன்கு அறிவார் அவர் தான் பாஜகவை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேணடும் அதற்கு பாஜக மாநிலத் தலைமை மாறவேண்டும் இதுவே பல தலைவர்கள் கருத்து. அதிமுக 2023 செப்டம்பர் மாதமே பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலருந்து முற்றிலும் வெளியேறியது பின் சேர்த்து தேர்தலைச் சந்தித்தது


கருத்துகள்