நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட கருத்து
பணம் பார்க்கும் செய்தித் தொலைககாட்சிகளுக்கு சம்மட்டி அடி, அவரது செய்திக்குறிப்பில்
"திரைக்கதை மன்னர்", நடிகர் இயக்குனர் K.பாக்யராஜ் மறைவு மற்றும் நல்லடக்கம் நிகழ்வு குறித்து நடிகை.ராதிகா சரத்குமார்
"50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாகப் பழகிய நாட்களை நினைவு கூறுகிறோம்.
அவரது இந்த தீடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
சமூக வலைதள தாக்கம், உடனுக்குடன் செய்திகளைத் தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிகப் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்கத் தோன்றுகிறது.
வருங்காலத்தில் இதே நிலை தொடர்வது தமிழர்களின் மானுட வாழ்வியல், பாரம்பரியக், கலாச்சாரத்திற்கு நல்லதல்ல. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சமூகத்தில் இனி நடைபெறாமல் தடுத்திடல் வேண்டும்.
காக்கும் அனுசரிக்கும் இடங்களில் வழிமுறைகளை வகுத்து அரசும், திரைலகமும் இணைந்து, துக்கம் கண்ணியமும், மரியாதையும் நடைமுறைப்படுத்த அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் K.பாக்யராஜ் மறைவிற்கு அரசு மரியாதை வழங்கிச் சிறப்பித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கும், நிகழ்விற்கு ஒத்துழைத்த அமைச்சர் பெருமக்களுக்கும், உரிய பாதுகாப்பு காவல்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்". என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளா.ர் அதன் தாக்கம் குறித்து இங்கு காணலாம்.பிரபலமானவர்களின் இறப்பு அதாவது அரசியல், சினிமா, சமூக பிரபல கலைஞர்களின் இறுதி நிகழ்வு அஞ்சலி, சடங்குகள் மீது அத்துமீறுவோர் அதிகரித்து வருகின்றனர் கடந்த காலங்களில் செய்தி இதழ்கள் இது போன்ற தகவல் வந்தால் அல்லது தகவல் கேளவிப்பட்டு அவர் சார்ந்த கடந்த கால நினைவுகள் மற்றும் புகைப்படம் மட்டுமே பிரசுரித்து நினைவை போற்றும் விதமாக அஞ்சலி நிகழ்வாக அது இருந்து வந்தது, ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்திரிகை தர்மம் அறியாத பலரும் செய்தி தொலைக்காட்சி ஊடகத்தில் பணிக்கு வந்த நிலையில் அதன் உரிபையாளர்கள், சம்பந்தப்படட பிரபல நபருக்கு நேரலையில் ஒவி-ஒளிபரப்பு செய்வது தான் தற்போது அருவருப்பாக மாறியுள்ளது, காரணம் 30 தொலைக்காட்சி கேமராக்கள், மற்றும் செய்தி புகைப்படக் கலைஞர்கள், தாங்கள் வித்தியாசமான செய்தி வெளியிடும் நோக்கத்தில் அனுமதி இல்லாமல் அத்துமீறி காலமான நபர்கள் வீட்டு சமையல் கடடு வரை, வாக்கரிசி போடுவது முதல் அவர்கள் வீடடின் தனிப்பட்ட தகவல் வரை பகிரங்கப் படுத்துவதை தடுக்க வேண்டியது அவசியம் என்பதைத் தான் நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தற்போது பிரதிபலிக்கிறது,
இதுவரை சாவு நடந்த வீட்டுக்கு 2010 ஆம் ஆண்டு வரை கேமரா வந்தது கிடையாது.
நமது பார்வையில்
கையில் ஒரு கேமரா, கூட ஓரிரண்டு நிருபர்கள் பெயரில் எடுபிடிகள் இருந்தால் தனித்த எதை வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என்று நினைக்க வேண்டியது. கேமரா இல்லாவிட்டால், இருக்கவே இருக்கு அலைபேசி. அதைக் காட்டியபடி, மைக்கை நீட்டி துக்க வீட்டுக்கு யார் வந்து எங்கு சென்றாலும் வளைத்து வளைத்து வீடியோ எடுக்க வேண்டியது. அவற்றை தங்கள் தொலைக்காட்சி மற்றும் பதிவுகள் இல்லாத சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் பரபரப்பாகத் தலைப்பு வைத்து வெளியிட வேண்டியது. நிறைய வியூஸ், லைக் கிடைத்தால் அதில் பணம் பார்க்க வேண்டியது. இப்படி நிறைய பேர் சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் அலைகிறார்கள்.
அதிலும் சினிமா பிரபலங்கள் இறந்துவிட்டால் இவர்க ளுக்கு கொண்டாட்டம் தான். இறந்த வீடு என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. இவர்களைப் பொறுத்தவரை அது இவர்கள் 'காசு பார்க்கும்' வீடு. போவோர் வருவோரை எல்லாம் வீடியோ எடுத்துத் தள்ளி, பேட்டி என்ற பெயரில் மைக்கை நீட்டி நேரம் காலம் தெரியாமல் கோமாளித்தனமாக கருத்துக் கேட்கிறார் கள்.
இவர்களின் இந்த செயல் அஞ்சலி செலுத்த வருபவர்களை, அவர்கள் உறவை இழந்து தவிப்பவர்களை அவர்களின் உறவினர்களை மிகுந்த "அதிருப்தி அடையச் செய்கிறது.
அவர்கள் அனுமதி இல்லாமல் இயக்குனர் பாரதிராஜா இறுதிச் சடங்கில் அத்துமீறியவர்கள இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா கடுமையாகவே திட்டினார்.
அதேமாதிரி இயக்குனர் கே.பாக்யராஜ் நிகழ்ச்சியில் அஞ்சலி மீடியாவின் தொல்லை தாங்காமல் குமுறிய நடிகை ராதிகா சரத்குமார்
இயக்குனர் கேஃபாக்யராஜ் இறுதிச் சடங்கில் 2 நாட்களாக இப்ப டிப்பட்டவர்களின் தொல்லைகள் அதிகமாகவே இருந்தது. நடிகைகள் ராதிகா, சுகாசினி உள்ளிட்ட பலர் அவர்களை திட்டித் தீர்த்தனர். கமலஹாசன் வந்தபோது காரை விட்டு சிரமப்பட்டு இறங்கும் சூழல் ஏற்பட கோபத்துடன் கேமராக்களை தட்டிவிட்டார்.
ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. கூல் சுரேஷ் என்ற கோமாளி நடிகன் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் முருங்கைக் காயுடன் சென்று அஞ்சலி செலுத்தி சர்ச்சையாகி. இப்படிப்பட்ட விளம்பரப் பிரியர்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
நடிகை ராதிகா சரத்குமார் சொன்னது மாதிரி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மரணம் சர்க்கஸ் கூடாரமாக மாறி வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். இனி வருங்காலங் களில் இப்படிப்பட்ட வீடியோ கோஷ்டிகளுக்கும் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும் தடை விதிக்க
அரசும் மற்றும் தியையுலக சங்கங்களும் அரசியல் கட்சிகளின் தலைமையும் உரிய உத்தரவு மூலம் உணர்த்த வேண்டும். மரணத்தை உரிய மரியாதையுடன் அனுக வேண்டும்.
சினிமா சார்பாக உள்ள சங்கங்களும் தமிழ்நாடு அரசும் இதற்கு முடிவு காணும் வகையில் சங்கக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கட்டாயம் பின் பற்ற வேண்டும். அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களான மஹாராஷ்ட்ரா மும்பை, ஆந்திரப் பிரதேசம் , கேரளம் போன்ற இடங்களில் இந்தக் கூத்துகள் இல்லை. சினிமா பிரபலங்கள் இறந்தால் அந்த வீட்டுக்குள் எந்த மீடியாவுக்கும் அனுமதி இல்லை. விஐபிகள், வருகிறவர்கள், போகிறவர்களிடம் பேட்டி எடுப்பது இல்லை. அவர்களை துரத்துவதும் இல்லை.
மறைந்தவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருக்கு மீடியாவினர் மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட உணர்வை மதிக்கிறார்கள். சமீபத்தில் பாடகி ஆஷா போஸ்லே மறைந்த போதும் அப்படிதான் நடந்தது. அந்த நாகரிகம் தமிழ்நாட்டிலும் வர வேண்டும்.
இங்கு பத்திரிகை தொலைக்காட்சி அறியாத கார்பொரேட் ஹெச் ஆர் கள் தங்களது செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு உரிய சமூக பயிற்சி அளிக்க வேண்டும்
ஒருவரின் சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கு தொடங்கும் இடத்தில் முடிகிறது" என்பது ஆங்கிலத்தில் கூறப்படும் விளக்கம். அதாவது எவ்வளவு கையை வீசினாலும் அது அடுத்தவரின் மூக்கில்படும்போது எதிராளியின் சுதந் திரம் பறிபோகிறது. அப்படித்தான் பலரும் அடுத்தவர் மூக்குக்கு முன் மைக் நட்டுவதை இனியாவது மீடியாக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உரிய தீர்வு விரைவில் காணவேண்டும். சமீபத்தில் காலமான பிரபல நடிகர் அஜீத்குமார் தாயார் மரணத்தில் அவர்கள் சுய முயற்சி காரணமாக இவர்களை வீட்டுக்கு உள் படமெடுக்க அனுமதிக்காத நிலையில் தெருவில் கூட நின்று இந்த நிகழ்வில் நேரலை செய்தனர் சிலர்.





கருத்துகள்