தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஷ் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும் செயல்படுகிறார்
இவர் அதிமுகவிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தேர்தலுக்கு முன்பாக இணைந்தவர் தற்போது அமைச்சர். முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இன்று அமைச்சர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த விழா நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் பர்வேஸை "என் அன்பு மாப்பிள்ளை" என்று அழைத்தது விவாதப் பொருளாகியது. முன்னால் அதிமுகவின் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இப்போதைய தவெக அரசின் அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் முன்னாள் அதிமுக புதுக்கோட்டை நகரச் செயலாளர் ஜாபர் அலியின் மகனாவார்
ஜாபர் அலி முன்னால் அதிமுகவின் வீட்டு வசதித்துறை அமைச்சரும் தற்போது திமுக கடந்த ஆட்சியில் சட்டம் நீதி அமைச்சருமான எஸ் ரகுபதியின் தளபதியாக இருப்பவர் பின்னாளில் திமுகவில் சேர்ந்து மு. க.அழகிரி அணியில். இருந்தவர்
''முன்னால் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கு , மற்றும் தினகரன் செய்தி நாளிதழ் மதுரை அலுவலகத்தில் சிலரை உயிரோடு எரித்துவிட்ட மகன் மு. க. அழகிரியைக் காக்க முன்னால் முதல்வர் காலஞ்சென்ற மு.கருணாநிதி கண்ணீர் விட்ட நிலையில் புலம்பவே
மு. க.அழகிரி கைது செய்யப்பட்ட போது திருச்சிராப்பள்ளி மத்திய சிறையிலிருந்த காலத்தில் உதவியவர்களில் முக்கியமானவர் ஜாபர் அலி அதனால் தான் அவர் கடந்த காலத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் நம்பிக்கை நபராவார்
முன்னால் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா 'இன்செக்யூரிட்டி' கட்சிப் பொறுப்பாளர்களை கண்காணித்து அவ்வப்போது சுழற்றி அடிப்பது வழக்கம். அதை பயன்படுத்தி ஜாபர் அலிக்கு பல பர்லாங்கு தூரத்தில் கீழே இருந்த டாகடர் சி.விஜயபாஸ்கர் கட்சிப் பொருப்பிலும் ஆட்சி அதிகாரம் கொண்டு மேலே முன் வந்தார்.
முன்னால் முதல்வருக்கு நெருக்கமாக வேண்டிய சிலரைப் பயன்படுத்தி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பலவீனத்தை பயன்படுத்தி அதிமுகவின் உச்சத்திற்கே சென்றார் டாக்டர் சி.விஜய பாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் மற்ற அமைச்சர்களின் பி ஏ க்கள் கூட டாக்டர் சி. விஜயபாஸ்கருக்கு விசுவாசம் காட்டியது மிகப்பெரிய கதை
இவர்களிடம் அரசியல் செய்ய முடியாமல் ஜாபர்அலி திமுகவுக்குச் சென்றார்.
பின்னாளில் புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கித் தேர்தலில் ஜாபர் அலியை மனு செய்ய விடாமல் தடுத்து, தனது தந்தை வெல்ல புராக்சிக்கள் மூலம் PCR வழக்குப் போடவும் வைத்து ஜாபர்அலியை சிறையிலடைக்க வைத்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் என்று பல புலனாய்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேச்சு இன்னும் உள்ளது என்று நினைவு.
ஆனால் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு பின்னர். எடப்பாடி கே. பழனிசாமியிடம் விரோதம் கொண்டு அதிமுகவிலிருந்து விலகி எந்த ஜாபர் அலிக்கு கீழே தன் அரசியல் வாழ்வைத் துவங்கினாரோ. திரும்ப உலகம் உருண்டை சுற்றி வர அதே ஜாபர் அலியின் மகனான அமைச்சருக்கு கீழே மீண்டும் அடுத்த இன்னீங்ஸைத் துவங்குகிறார் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.
அதனாலதான் அவரை மேடையில் அருமை மாப்பிள்ளை என அழைத்த நிலை,
வேறு யாரையும் விட டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு வாழ்க்கை மிக நேர்த்தியான வட்டம்
அதுவரை கட்சிக் காரர்களை சரி செய்து தனது ஆதரவாளராக மாற்றுவதில் செம கில்லாடி தான் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அரசியல் சிலரை ஊழல் மூலம் பணம் சம்பாதித்த பணம் வைத்துக் கொண்டு ஆதரவைப் பெற தயாராகி அரசியல் துவங்கியுள்ளார், அடுத்த தேர்தல் வரை வேடிக்கை பார்ப்போம், காரணம் அந்தப் பகுதியில் வசிக்கும் தான் தந்தை வழி ஜாதி மற்றும் தய் வழி ஜாதி என இரு தரப்பையும் விராலிமலை பகுதியில் சரி செய்து வைத்துத் தன் அரசியல் நகர்வை இழுப்பூர் அருகில் ராப்பூசல் கிராமத்தில் நடத்தும் இவர் வட்டத்தில் அடுத்த அரசியல் நபர்களின் பலஹினமே இவரது பலம். "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை!பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை....." ஊழல் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தும் முதல்வர் இவர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கு சுதந்திரமாக நடக்க வழி ஏற்படுத்தும் நிலை வரவேண்டும்.தவெக தலைவர் விஜய் நடிகராக இருந்த காலத்தில் ரசிகர் மன்றங்களில் ஆட்கள் சேர்த்து நடத்திய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தான் இப்போதும் தவெகவில் இணையம் அரசியல் ரசிகர்கள் அனைவரையும் இணைக்கிறார் சபாஷ் சரியான முடிவு இன்னும் நான்கு மாதங்கள் காத்திருந்து வரிசையாக யார் வந்து கும்பிட்டாலும் 'மூலவர் முதல்வர் வருவது இல்லை உறசவர் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே எப்போதும் போல கடந்த 20 ஆண்டு நிகழ்வு இது தரிசனத்துக்கு மாறாது வாய்ப்பில்லை.
"ஒற்றைக்காலில் நின்று மாதவம் புரிந்தாலும், மாமாங்கம் காத்திருந்தாலும் கட்சியில் மூத்த அண்ணன்களாக உள்ள அமைசசர் ஆதவ் அர்ஜுனா அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் முன்புதான் இணைந்தாக வேண்டும்" என்பதே கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் கட்டளை.
"அரசாங்க சொத்துகளை, யாரும் தொடவும் விடமாட்டேன், இதற்கு முன்னால் அப்படி தொட்டவர்களையும் விடமாட்டேன்" என்ற சபதத்தை மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நிறைவேற்றும் காலத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.





கருத்துகள்