முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆட்சிக் கவிழ்ப்பு பேரம் முன்னால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த காவல்துறை

ஆட்சிக் கவிழ்ப்பு ஊழல் பேரம் தேடுதல் தீவிரம் முன்னால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை சுற்றிவளைத்த காவல்துறை



பேரம், கூட்டு சதி நடவடிக்கை மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அரசைக் கவிழ்க்க ரூபாய் 700 கோடி வரை பேரம் நடந்த நிகழ்வில் இதுவரை வி.செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒன்பது நபர்கள் கைதாகியுள்ளனர்,  ஆளும் தவெக கூட்டணி அரசைக் கவிழ்க்க ரூபாய் 700 கோடி பேரம் பேசப்பட்டதாக காவல் உளவுத்துறை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபையில் ஆளுநர் உத்தரவின் பேரில் நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா உள்ளிட்ட சில  எம்.எல்.ஏ-க்களுக்கு தலா ரூபாய் 35 கோடி வீதம் லஞ்சம் பேரம் பேசப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு விவகாரத்தில், தனியார் யூடியூபரும் ஐபிடிஎஸ் நடத்தும் திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தற்போது 9 நபர்களாக அது உயர்ந்துள்ளது இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் தான் சடடமனற உறுப்பினர்களை விலைக்கு வாங்க உத்தரவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஊத்தங்கரை (தனி) தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி பேரம் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 

 உளவுத்துறை அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ளன. அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வி.செந்தில் பாலாஜி  தப்பிவிடாத அளவு சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


ஊத்தங்கரை தனித் தொகுதி தவெக எம்.எல்.ஏ பேர வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம்.  

முன்னாள் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். சுமார் 2000 டாஸ்மாக் கடைகளை பினாமிகளுக்கு வழங்கி, அரசுக்குச் செல்ல வேண்டிய பல கோடி ரூபாய் வருமானத்தை கரூர் கம்பெனிக்கு தாரைவார்த்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த வழக்கை சரியாக விசாரித்தால், செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என மூத்த பத்திரிகையாளர்  தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மற்றும் மதுபான நிறுவனங்களில் ரூபாய் .1000 கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



அரசியல் களத்தை அதிரவைக்கும் விதமாக,தற்போது ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் .35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்ட இந்த பேரத்திற்கு வி.செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், 5 பேரை அழைத்து வந்தால் ஆளுக்கு ரூபாய் 25 கோடி பணம் திமுகவில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பதவியும் வழங்கப்படும் என பேரம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவே கணிக்கின்றனர். ஊத்தங்கரை தனித் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை அணுகி கட்சி மாற பேரம் பேசியதாக யூ-டியூபர் IDPS திருநாவுகரசு ஏற்கனவே கைது 

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான மேலும் இருவர் கைதாகினர்

கரூரில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் திமுக பிரமுகர்கள் கார்த்திக் மற்றும் ரமேஷை சென்னை காவல்துறையால் 

கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்கள் இருவரின் வீடுகளிலும் காவல்துறை சோதனை  மூலம் பணம் பறிமுதல், விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்

 ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ மட்டுமின்றி மேலும் சில தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக  அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவும் தற்போது அமைச்சருமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏக்கள் யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது? யார் யார் இந்த பேரத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணையில் களம் இறங்கிய காவல்துறை 

வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், பொன்னகரம் தொகுதி எம்.எல்.ஏ கஜேந்திரன், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ திருப்பதி ஆகியோரிடமும் பேரம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரம் பேசியதாக மொத்தம் ஒன்பது நபர்கள் இதுவரை கைது 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனித் தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல்துறை ஆணையரிடம் கொடுத்த புகாரில், யூடியூபர் திருநாவுக்கரசு என்னிடம் போன் பேசினார். ஒரு பெரிய கட்சி கேட்டுக்கொண்டதின் பேரில் நான் உங்களிடம் பேசுகின்றேன். நீங்க கட்சி மாறினால் ரூபாய் .35 கோடி தருவதாகவும், சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாகச் சொன்னால் போதும் என்று கூறி பேரம் பேசியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னையை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, தியாகராஜன் மற்றும் திமுக ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த கரூர்- ஈரோடு சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னையில் இருந்து கரூர் சென்று இருவரையும் திருவல்லிக்கேணி காவல்துறை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், திமுகவின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.


வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன்,

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ திலீப்,

பொன்னகரம் தொகுதி எம்.எல்.ஏ கஜேந்திரன், திருப்பத்தூர் எம்.எல்.ஏ திருப்பதி

அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலி

எம்.எல்.ஏ இளையராஜா மட்டுமின்றி மேலும் 6 எம்.எல்.ஏக்களிடம் இதே போன்று பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக தற்போது அமைச்சரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முன்னால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை சென்னை மற்றும் கரூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனித் தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவிடம் ரூபாய் .35 கோடி பேரம் பேசப்பட்டதாக புகார் அடிப்படையில் பதிவான எஃப்.ஐ.ஆர் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் சிலரது பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்த்துள்ளது. இந்த ஊழல் பேரம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்திக், மற்றும் நாடார்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் ஸ்ரீநிவாசன் உட்பட இதுவரை 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை மற்றும் கரூரில் உள்ள வி.செந்தில் பாலாஜியின் இல்லங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் தனிப்படை காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், எந்த நேரத்திலும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்பதால் சென்னை MRC நகரில் உள்ள அவரது இல்லப் பகுதி மற்றும் கரூர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...