ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்குத் தெரியாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, அரேபியா , உள்ளிட்ட பல அயல்நாடுகளில் சிகிச்சை என்ற பெயரில் அரசியல் இயக்கம் மற்றும்
தொழில் துறை சார்ந்த ஊழல்வாதிகள், கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் கண்காணிப்பாளர் இல்லை எனில் தப்பித்துக் கொண்டே இருப்பார்கள் எத்தனை லுக் அவுட் நோட்டீஸ் பின்னர் தானே கொடுக்க முடிகிறது.
அதை கணிக்கத் தவறியது யார் ? தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகளால் வெளியில் கசியும் தகவல்களும், களையும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளும் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஒரு அரசியல் சமூகப் பார்வை,
தமிழ்நாட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையான DVAC ன் தற்போது செயல்பாடுகள், என்பது நிர்வாகத் திறனற்ற ஒரு "குழந்தை அரசு" என்ற பிம்பத்தையே அவை உறுதிப்படுத்துகின்றது. ஊழல் ஒழிப்பில் காட்ட வேண்டிய தீவிரம் மறைந்து, மெத்தனப் போக்கும், அரசியல் சமரசங்களுமே முன்னிற்கின்றன எனக் கருதும் நிலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநில லோக் ஆயுக்தா, ஆகியன அரசின் நேர்மையைக் காக்கும் மத்திய லோக்பால் போல அரணாக இருக்க வேண்டுமே தவிர, ஊழல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் குடையாக,கேடயமாக மாறிவிடக்கூடாது. தற்போதைய சூழலில், இத்துறையின் நம்பகத்தன்மை ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பது தான் பலரும் பேசும் அரசியல் எதார்த்தம். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராகப் பணியாற்றும் அருண் ஐபிஎஸ் நியமனத்தின் மூலம் ஒரு பிழை என அரசியல் நோக்கர்கள் மற்றும் சில மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பணி ஆணையம் என்பது சட்டம்-ஒழுங்கு பணியைப் போன்றதல்ல; அது சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த துறை, ஆனால், தற்போதைய தலைமைக்கு இத்துறையின் நுணுக்கங்கள் குறித்து எவ்வித அனுபவமும் இல்லை என்பது தான் பலரின் முதன்மையான குற்றச்சாட்டு.
இயக்குனர் அருண் ஐபிஎஸ் தலைமை குறித்த பலரின் புலனாய்வு விமர்சனங்கள்:
நிபுணத்துவமின்மை: ஊழல் தடுப்புப் பணியில் எவ்விதப் பின்னணியும் இல்லாத தலைமை. இவருக்குத் தெரிந்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு மட்டுமே; ஊழல் வழக்குகளைக் கையாளும் திறன் இவரிடமில்லை என்ற வாதம் வைக்கும் பலர்.
கூறும் காரணம், மே 29, 2026 ல், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அவகாச அமர்வு, ரியல் எஸ்டேட் வியாபாரி சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்த உத்தரவை ரத்து செய்த போது அருண் ஐபிஎஸ் அந்த உத்தரவை "புறம்பான காரணங்களுக்காக" பிறப்பித்ததாகவும், இத்தகைய உத்தரவுகளை பிறப்பிப்பதில் "பழக்கப்பட்டவர்" என்றும் நீதிமன்றம் கண்டித்தது. 28 வருட அனுபவமுள்ள IPS அதிகாரி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பது, "சட்டம் மற்றும் உண்மைகள் குறித்த முழு அறிவுடனும் வேண்டுமென்றே செய்யப்பட்டது" எனக் கூறியிருந்தனர்.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத் துறையில் நிலவும் தகவல் கசிவுகள், ஊழல்வாதிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவைக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளதாக பல அமைப்புகள் குற்றம் சாட்டும் நிலையில்,
முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவின் இல்லத்தில் சோதனை நடத்த அதிகாரிகள் செல்வதற்கு முன்பே அவருக்குத் தகவல் பரிமாறப்பட்டதன் விளைவாக, சோதனைக்கு அதிகாரிகள் சென்ற போது அங்கிருந்த ஆதாரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதாகவும். அவரோ "என் வீட்டில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை" என அவர் சவால் விடுவதற்குத் துறையின் இந்தத் தகவல் கசிவே அடித்தளமாக அமைந்தது. ஜூன் மாதம் 25-ஆம் தேதி DVAC நடத்திய சோதனையில், ரூபாய் .40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் வேலு தரப்பில் "ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை" என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த முரண்பாடே தகவல் கசிவு குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.
பி. கே.சேகர் பாபு மற்றும் ஒரு பிரபல இதழ் போன்ற ஊடகத் தகவல்களின்படி, இவருக்கு எதிரான சோதனைகளும் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் அவை பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே நிலவும் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வேடிக்கைப் பொருளாக்குகின்றன.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள் முடங்கிக் கிடப்பதை உணர்ந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதியரசர் புகழேந்தி, அத்துறையைச் சீரமைக்கக் கடுமையான மற்றும் அவசியமான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது இங்கு குறிபிடத்தக்கது.
"ஒவ்வொரு அரசும் தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்றே கூறிவருகின்றன. ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. ஊழல் எங்கும் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதை ஒழிக்க அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தேவை" என்று நீதிபதி புகழேந்தி கூறினார். அதோடு
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளாக காலியாக வைக்கப்பட்டிருந்த 'விழிப்புப் பணி ஆணையர்' எனும் Vigilance Commissioner பணியிடத்தை, இந்த அரசும் தொடர்ந்து காலியாக வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. "தமிழ்நாட்டில் நிரந்தர விழிப்புப் பணி ஆணையர் இல்லை. ஒரு மூத்த அதிகாரி கூடுதல் பொறுப்பாக இந்த பதவியை வகித்து வருகிறார்" என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதில் விழிப்புப் பணி ஆணையர் எனும் Vigilance Commissioner லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு மேலதிகாரியாக ஒரு முழுநேர ஆணையரை நியமிக்க வேண்டும். இது கடந்த 5 ஆண்டுகளாகக் காலியாக உள்ளது.
லஞ்ச ஒழிப்பு ஆணையம் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாத தன்னிச்சையான அமைப்பாகச் செயல்பட வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்கள் (CDP): காலியாக உள்ள 6 ஐஏஎஸ் அந்தஸ்திலான 'ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்' (Commissioners for Disciplinary Proceedings) பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்தத் தீர்ப்பாயங்கள் (CDP) மூலம் அரசு சார்ந்த மக்கள் பணியாளர்கள், அதிகாரிகள்,அலுவலர் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரித்து விரைந்து இலாக்கா பூர்வமான தண்டனைகளை வழங்க வேண்டும். எனக் கூறிய
நீதிபதி, மேலும்: "தமிழ்நாடு சிவில் சர்வீஸ் (ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம்) விதிகள், 1955-ன்படி, ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன". 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி அரசு பிறப்பித்த உத்தரவின் படி, விசாரணைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தக் காலக்கெடு அரிதாகவே பின்பற்றப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியப் புள்ளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் பலஹீனங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். முறையான புலனாய்வுத் திறன் இல்லாத அதிகாரிகளைத் தலைமையில் அமர்த்துவதன் மூலம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தற்காலிகமாகத் தப்பித்து விடுகின்றனர் என்பதே அதன் சாரம்
முன்னால் அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, பி. கே.சேகர் பாபு உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் தப்பிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பிற காரணங்களை முன்னிறுத்தி விசாரணையைத் தாமதப்படுத்தும் போக்குகளுக்குத் துறையின் மெத்தனமே ஊக்கமளிக்கிறது.
1996-2001 ஆம் ஆண்டு காலக்கட்ட ஊழல் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு அரசு எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு 1996-ஆம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் மு.கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளே சான்று. அன்று லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாக இருந்தது,
சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் (SIT): காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீதான புகார்களை விசாரிக்க வி.சி. பெருமாள் ஐஜி தலைமையில் SIT 1-ம், மற்ற வழக்குகளை விசாரிக்க ஆர். நடராஜ் ஐஜி தலைமையில் SIT 2-ம் உருவாக்கப்பட்டன.
2.(FIR) முதல் தகவல் அறிக்கையிலேயே எவ்விதத் தொய்வும் இருக்கக்கூடாது என்பதற்காக, மூத்த சட்ட நிபுணர் என். நடராஜன் அதில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
3. கலர் டிவி ஊழல் வழக்கு, பிளசன் ஸ்டே ஹோட்டல் வழக்கு மற்றும் டான்சி வழக்கு போன்றவற்றில் இக்குழுக்களின் தீவிரப் புலனாய்வே 18 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு தண்டனையைப் பெற்றுத் தந்தது. மு.கருணாநிதி, 46 ஊழல் வழக்குகளை விசாரிக்க மூன்று சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தார்.
தற்போதைய அரசும் இத்தகைய வரலாற்றுப் பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகும்.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத் துறையில் நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலமே நிர்வாகத்தைச் சீரமைக்க முடியும். உதாரணமாக, சிபிஐ (CBI) மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏற்கனவே பணியாற்றி அனுபவம் பெற்ற, தற்போது தீயணைப்புத் துறை இயக்குனராக இருக்கும் வெங்கட்ராமன் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளுக்கு 'சுதந்திரமான நிலை வழங்கப்பட வேண்டும்.
என்ற கருத்து இருந்தாலும்
நீதிமன்றம் கூறியது போல, "ஊழலை ஒழிக்க அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை தேவை. அதை விழிப்பு ஆணையத்தையும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையையும் வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அடைய முடியும்".
ஊழல் கறையுள்ள அரசியல் மற்றும் அரசியல் வி(வா)யாதிகளைத் தவிர்த்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் துணிச்சல் இந்த அரசுக்குத் தேவை. "குழந்தை அரசு" என்ற விமர்சனத்தைக் கடந்து, வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையைத் தூய்மைப்படுத்துவதே அதன் முதன்மையான கடமையாகும். அப்போதுதான் மக்கள் வைத்த நம்பிக்கையை இந்த அரசால் காப்பாற்ற முடியும். தமிழ்நாடுஆளுநர் இராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை கடந்த வாரம் ஒரே நாளில் மூன்று கட்சிகளும் சந்தித்து, தவெக அரசுக்கு எதிராக புகார்களை முன்வைத்தன. பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்து, குதிரை பேரம், அமைச்சர்களின் முறைகேடு, அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியின்றி தனிநபர்கள் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இது தவெக அரசுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் மற்றும் , பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், நிர்வாகி நாராயணன் திருப்பதியுடன் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தார்.
அவர்கள்
அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இரண்டு தனிநபர்கள் பங்கேற்றது சட்டவிரோதம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறும் செயல் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், மதுரையில் நடந்த மாரத்தான் நிகழ்வில் ஒரு சிறுமியின் வீடியோ குறித்தும், அவர் சிறுமிகளிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்டது குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற 54 நாட்களில் 151 பாலியல் வன்கொடுமைகள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள், 80-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பாஜக மாநில் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவைத் தொடர்ந்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுக பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளில்
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எம்எல்ஏக்களுக்கு ரூபாய் .50 கோடி ரொக்கம் மற்றும் அமைச்சர் பதவிகள் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவரால் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை மக்கள் நம்பவில்லை,
அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதியின்றி தனிநபர்கள் பங்கேற்றது குறித்தும் காவல்துறை இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி எம்எல்ஏக்களை கட்சி மாற்ற தூண்டப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுகவைத் தொடர்ந்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்பி இன்பதுரை உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அவர்களின் குற்றச்சாட்டுகளில்
தங்கள் கட்சியில் இருந்து ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் விலகி தவெகவில் இணைந்துள்ளதாகவும், இது குதிரை பேரத்தின் மூலம் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு முன்னரே குதிரை பேரம் நடக்கும் என்று ஆளுநரிடம் எச்சரித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் தனிநபர்கள் பங்கேற்றது மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணம் மீறப்பட்டது குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை 1991-ஆம் ஆண்டு முன்னால் முதல்வர் மு. கருணாநிதி அரசு கலைக்கப்பட்ட நிலைக்கு ஒப்பானது என்றும், அரசியலமைப்பு சட்டம் 167-ன்படி ஆளுநர் தலையிட வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது. திமுக . ஆர்.எஸ். பாரதி, பி. வில்சன் எம்.பி, .எஸ்.ஆஸ்டின் மற்றும் ஐ.பரந்தாமன் 04.07.2026 ல் தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து, காவல்துறை இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சட்ட விரோதமாக கைது செய்தல், காவலில் வைக்கும் நிர்ப்பந்தம் மற்றும் கட்சியை விட்டு விலகத் தூண்டும் முயற்சிகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பி ஒரு குறிப்புரையை வழங்கினர்.
எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மாறுவதற்கான தூண்டுதல்கள் மற்றும் அதிகாரபூர்வ அரசாங்க நடவடிக்கைகளில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் பங்கேற்பது குறித்த கவலைகளை எழுப்பிய குற்றச்சாட்டுகளையும் குறிப்பாணை எடுத்துக்காட்டுகிறது. உடனடியாக அரசியலமைப்பு தலையீடு, சுதந்திரமான விசாரணை மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர் அதன் பின்னர் நடந்த சந்திப்பில் புதுதில்லிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில சிறப்புப் பிரதிநிதி கே. வெங்கட நாராயணா, ஆளுநரை சென்னை லோக் பவனில், 04.07.2026 ல் சந்தித்தார். அதற்கு இரண்டு நாட்கள் முன்
Zoho கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் முன்னாள், தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாடு ஆளுநரை 29.06.2026 ல் சந்தித்து புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய வழிகளை ஆராய்வதிலும், மாநிலம் மற்றும் மாநிலத்தின் நலனுக்காக தொழில் முனைவோர் உணர்வை வலுப்படுத்துவது குறித்தும் இந்த உரையாடல் கவனம் செலுத்தியது.
தேசம் தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கூட நிறையாத நிலையில், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட அதிகாரிகள் நியமனத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூபாய் .5 லட்சம் முதல் ரூபாய் .30 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக தவெக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம். ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசு அறிவிப்பின் படி விண்ணப்பக் கடைசி தேதிக்கு முன்பே இறுதிப் பட்டியல் உலாவியதாகவும், அது அரசியல் பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை உயர் நீதிமன்றக் கிளை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சட்டத் துறை பரிந்துரைத்த வழக்கறிஞர்கள் பட்டியல் அடிப்படையில் தமிழ்நாடு சட்ட அலுவலர்கள் நியமனங்கள் நடைபெறுவதாக வந்த மனுவுக்கு மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய அந்த ஆவணத்தில் பல்வேறு பணிகளுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது அரசியல் செல்வாக்கு சட்ட நியமனங்களை எப்படி ஆக்கிரமிக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
அரசு தரப்பில் “திறமைக்கு முன்னுரிமை” என்று அறிவிக்கப்பட்டாலும், நடைமுறை வேறு மாதிரியாக உள்ளது. முன்பு அதிகாரத்திலிருந்த கட்சிகளும் இதே மாதிரி அரசியல் பரிந்துரை, லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நியமனங்கள் செய்து வந்தன என்பது உண்மைதான். ஆனால், “மாற்றம்” என்ற பெரும் வாக்குறுதியுடன், “லஞ்சம் ஊழல் ஒழியும்” என்று கூறிய புதிய அரசு இதே பாதையில் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திறமையான, நேர்மையான வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, அரசியல் விசுவாசிகளும் பணம் கொடுத்தவர்களும் பணி பெறுவது நீதி அமைப்பின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துகிறது. குற்ற வழக்குகள், ஊழல் தடுப்பு வழக்குகள், அரசு சார்பு முக்கிய வழக்குகள் ஆகியவற்றை நடத்தும் இந்த அலுவலர்களின் நியமனத்தில் அரசியல் மற்றும் பண பலம் மேலோங்கினால், மக்களுக்கு நீதி கிடைக்காது.
உயர் நீதிமன்றங்கள் பலமுறை அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் அரசியல் செல்வாக்கு மேலோங்குவது வருத்தமளிக்கிறது. இப்போதைய குற்றச்சாட்டுகளில் தவெகவின் உயர் பதவியில் உள்ளவர்களின் பரிந்துரை குறிப்பிடப்படுவது மேலும் அதிர்ச்சியூட்டுகிறது. மாற்றத்திற்கான அரசு என்று சொல்லிக்கொண்டு, பழைய ஊழல் முறைகளைத் தொடர்வதா?
மக்கள் எதிர்பார்த்தது இந்த அழிச்சாட்டு லஞ்சம் ஊழல் அல்ல. நேர்மையான, திறமையான, அரசியல் சார்பற்ற நியமனங்கள் மூலம் நீதி நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், “மாற்றம்” என்ற வார்த்தை வெறும் தேர்தல் பிரச்சார வாய் வார்த்தையாக மட்டுமே மிஞ்சும். உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளை உரிய முறையில் விசாரித்து, ஊழலை வேரறுக்க வேண்டும். தமிழ்நாட்டு நீதித்துறை இப்படிப்பட்ட அரசியல் ஊடுருவலுக்கு அடிபணியக் கூடாது. இது தான் மாற்றத்திற்கான அரசா? என மக்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள்.தமிழ்நாடு 'கூட்டணி கட்சிகள் சேர்க்கை என்பது வீண் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் பெருய ' கூட்டணி பலத்துடனிருந்த திமுக தோல்வியும் ,கூட்டணியே இல்லாத தவெக மக்கள் ஆதரவில் 35 சதவீதம் வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றதுமேயாகும்." கூட்டணி இல்லாமல் இனி இந்தியாவில் எந்தக் கட்சியும் வெல்ல முடியாது " எனக் கூறும் காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் ; அதாவது கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் இந்தியாவில் எங்குமே வெல்ல முடியாது என்பதே அதனுடைய பொருள் ; திமுக வுக்கு அதை பொருத்த வேண்டிய அவசியமில்லை.
கூட்டணி என்பதே கால் சதம் முதல் 4 சதவீதத்திற்குள் வாக்கு வங்கி உள்ள கட்சிகளின் வாழ்வாதரத்திற்கான இறுதிப் புகலிடம். இடைத்தேர்தல் முடிவில் இன்னும் இடங்களில் வெல்லும் தவெகவுக்கு அதன் பின் கூட்டணி தேவைப்படாது, தற்போது சிறிய கூட்டணிக் கட்சிகளின் தங்களது கொள்கைத் திணிப்பை தவெக மூலம் நிறைவேற்ற சில கட்சிகள் தவியாய் தவிக்க, அதை சமாளித்து இடைத்தேர்தல் வெற்றி நோக்கி பயணப்படுகிறது, தவெக..அதிமுக கூடாரம் 50 சதவீதம் தவெகவால் பெரிய அளவில் காலியான நிலையில், பாஜகவும், 70 சதவீதம் வீ த லீடர்ஸ் மூலம் காலியான நிலை இருக்க
திமுக இரண்டாம் கட்டத் தலைவர்களின் வாரிசுகளான திருச்சிராப்பள்ளி சிவாவின் மகள் காயத்திரி, மற்றும் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோர் தவெகவில் சேர்ந்துள்ளனர். மு. கஃ
அழகிரியின் மகள் தவெகவில் சேர நேரம் கேட்டுக் காத்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்தோ அணியணியாக பலரும் வந்து கொண்டுள்ளனர்.
திமுக தலைவர்களின் தவெகவில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இந்த வாரிசு அரசியல் என்ற வசவிலிருந்து திமுவை விடுவிக்க பயன்பட்டுள்ளது தவெக.
வாரிசுகள் தந்தை இருக்கும் கட்சியிலேயே அதிகாரத்திற்கு வந்தால் அதை மன்னராட்சி எனும் தவெக, வாரிசுகள் என்பதற்காகவே வந்தவுடன் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறதா என்பதே தற்போதய பார்வை,
உள்ளாட்சி அமைப்புகளின் திமுக கவுன்சிலர்கள் பலர் தவெகவில் சேர்ந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே ஐந்து திமுக கவுன்சிலர்கள் தவெகவில் சேர்ந்து விட்டதாகவும் மேலும் 10 பேர் சேரத் தயாராக உள்ளதாகவும் தகவல்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் ராஜுனாமா செய்துதுள்ளனர். இது வரை ஐந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் சேர்ந்துள்ளனர். ஆனால், ஒன்றிய செயலாளர்களும்,பகுதி செயலாளர்களும் பெரிய அளவில் வராமல் அதிமுகவில் உள்ளனர்.
அதிமுகவில் உள்ள 90 சதவிகிதம் பேர் தவெகவிற்கு வர உள்ளதாகவும், அதிமுகவும், தவெகவும் வேறு, வேறு அல்ல என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியதை தேர்தலுக்கு முன்பே அவர் தெளிவுபடுத்தி இருந்தால் 35 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்குமா என்பதும், தேர்தலுக்கு முன்பே விசிக இணைந்திருந்தால் தவெகவுக்கு, பிற்படுத்தப்பட்டவர்கள் வாக்கு கிடைத்திருக்காது,
அதாவது, இன்னொரு குட்டி திமுகவாகவும், மறுவடிவம் பெற்றுள்ள மற்றுமொரு அதிமுகவாகவும் தவெக தன் தோற்றத்தை தகவமைத்துக் கொண்டுள்ளதன் மூலம் அது தன் சுயத்தை இழந்து வருகிறது. புதிதாக கட்சிக்குள் நுழைந்த ஊழல் திமிங்கலம் பலர் அதில் தவெகவின் உண்மைத் தொண்டர்கள் தனிமைப்பட்டுப் போகிறார்கள்!
தன்னை வளர்த்து உருவாக்கி ஆளாக்கிய கட்சியைத் துறந்து வெற்றியின் விலாசத்தை தேடி புதிய கட்சியில் அடைக்கலமாகிறவர்கள், இன்னொரு வெற்றிக் கட்சியை காண நேர்ந்தால் பள்ளத்தை நோக்கி ஓடிவரும் வெள்ளம் போல இங்கிருந்தும் இடப் பெயர்ச்சி செய்வார்கள் என்பதே எழுதப்படாத விதி.
அதற்கு இன்றைய சாட்சியாகத் திகழ்வது, மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி .
15 வருடம் தொடர்ந்து மேற்கு வங்காள ஆட்சியில் கோலோச்சிய மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று விலகுவோரால் கரைந்து கொண்டுள்ளது.
அன்று புத்தம் புதிய கட்சியான திரிணாமுல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது, அதில் 33 வருடம் அதிகாரத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ஒரு பெரும் கூட்டமும், காங்கிரசில் இருந்து ஒரு கூட்டமும் திரிணாமுல் கட்சிக்குள் நுழைந்து வாய்ப்புகளையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த உண்மைத் தொண்டர்கள் அப்போது உதாசினப்படுத்தப்பட்டனர்.
தற்போதைய தோல்விக்கு பிறகு அப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்த கூட்டம், ’அற்ற குளத்து அருநீர் பறவை போல’ பறந்து, பாஜகவின் கட்டளைப்படி, தனி ஆவர்த்தனம் செய்கிறது. கட்சியின் 80 எம்.எல்.ஏக்களில் 60 எம்.எல்.ஏக்கள் மம்தா பானர்ஜியை எதிர்த்து ரிதப்ரதா பானர்ஜியின் தலைமையில் கட்சித் தலைமையகத்தையே கைபற்றியுள்ளனர். இந்த ரிதப்ரதா பானர்ஜி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவராகவே திகழ்ந்தவர்.
இதில் தவெகவிற்கு பாடம் கற்க நிறைய உள்ளது.
இவர்கள், ’’திரிணாமுல் கட்சிக்குள் மம்தா பானர்ஜி அரசியல் ஜனநாயகத்தை கொன்றுவிட்டார். வாரிசு அரசியலைத் திணித்து எங்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்தார்’’ என்கிறார்கள் ஒத்த குரலில், ஆனால், அதிகாரத்தில் இருக்கும் போது, இவர்கள் தங்கள் சுயமரியாதையை தியாகம் செய்து கொண்டு, வாரிசுத் தலைவருக்கு வணக்கம் வைத்து வலம் வந்தவர்கள் சமயம் பார்த்து திருப்பி அடிக்க காத்திருந்துள்ளார்கள் என்று தான் நாம் புரிந்து கொள்ளலாம்.
மம்தா பானர்ஜி இரும்பு பெண்மணி. கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடிக்க முடியாத திடகாத்திரமான கட்சி என்ற தோற்றம் 2 மாதம் முன்பு வரை இருந்தது. உள்ளுக்குள் கட்சி நிர்வாகிகள் மத்தியிலே சொல்ல முடியாமல் அடக்கி வைக்கப்பட்ட கோபம் வாய்ப்பு கிடைத்த போது வாசலை தேடிச் சென்றது.
மேற்படி சம்பவங்களில் திமுகவிற்கு பாடம் உள்ளது.
திமுக தன் கொள்கைகளை சமரசம் செய்து கொண்டு பாஜகவுடன் கொண்ட மறைமுக நட்பு
தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தன்னை தக்க வைத்துக் கொள்ள பாஜக கட்டளைப்படி அதிமுகவை அரியணை ஏற்ற முயன்றதில் தானாகவே அம்பலப்பட்டது.
பொருந்தா உறவுக்கு பொருந்தி செல்ல முயன்றதால் அதிமுகவிற்குள் கலகம் உருவாகி அது கலகலத்துக் கிடக்கிறது…! எனினும், அந்த கட்சியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு மாறியவர்கள் அதிகார விரும்பிகளே அன்றி, அருகதைக்குரியவர்களா இல்லை என்பதே பதில் . ஆனால், அவர்கள் அம்பலப்படுத்தியது என்னவோ, உண்மை தான்!
ஆனால், நடந்தவற்றை அப்பட்டமாக மறைத்து, ஒரு வெற்றிகரமான நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளது திமுக தலைமை. இதனால், அந்தக் கட்சிக்குள் தலைமை மீதான மரியாதை தரைமட்டமாகி உள்ளது. இதை மூத்தவர்கள் வெளிப்படுத்தாமல் ஆதாயம் கருதி அடக்கி வாசித்தாலும், அவர்களின் வாரிசுகளான இளையோர் கட்சி மாறுவதன் மூலம் காண்பித்துக் கொண்டுள்ளனர்.
ஒதுக்கப்பட வேண்டியவர்களையும், வாசலிலேயே தடுக்க வேண்டிய புதியவர்களையும் கட்சிக்குள் இணைப்பதன் மூலம் காற்று அதிகமாக நுழைந்து, பெருத்து வெடிக்க காத்திருக்கும் பலூனாகிவிடுமா தவெக. என பழைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பயம் உள்ளது.வி சி கட்சியால் முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்படப் போகிறது. இரண்டு சீட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள OBC மக்களின் வாக்குகளை இழக்க போகிறார்.
குறிப்பாக வட தமிழ்நாட்டில் திமுக தனது செல்வாக்கு மிக்க தொகுதிகளையும் இழந்து படுதோல்வியடைந்ததற்கு முழு காரணமும் விசிக மட்டுமே!!
விசிக வை உடன் வைத்துக்கொண்டு மற்ற பிற்பட்ட சமூகங்களை பகைத்துக்கொண்டதால் தான் பலகோடிகளை செலவழித்தும் திமுக படுதோல்வியை சந்தித்தது.
நிச்சயம் அடுத்த தேர்தலில் தவெக வும் இதே நிலைக்கு செல்லும். அதற்கு விசிக வே காரணமாக இருக்கும். என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.முன்னால் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் பெற்றோரிடம் முதல்
சம்மனை வழங்கி கையெழுத்து பெற்றது, அடுத்த சம்மன் வீட்டுக் கதவில் ஒட்டப்படலாம், அதோடு அவுட்லுக் நோட்டீஸ் வழங்கிய நிலையில் சென்னை
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் V.செந்தில்பாலாஜி மற்றும் சகோதரர் R.V.அசோக்குமார் ஆஜராக சம்மன்
முன்னால் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும். என உத்தரவு இந்த நிலையில்
எம்ஜிஆர் மலைக்கள்ளன் படத்தில் ஏட்டு டி .எஸ்.துரைராஜும் இன்ஸ்பெக்டராக எம் ஜி சக்ரபாணியும் தோன்றும் அந்தக் காட்சி தான் ஞாபகத்துக்கு வருது..
"என்னது பூங்கோதையை புலி முழுங்கிடுச்சா?"
"நான் நேர்ல பாக்கல சார்"
''பாக்காமலேயேதான் இவ்ளோ கலாட்டா பண்றீயா?''
''இல்லை சார் எனக்கு பைவ்நாட்ஃபோர் சொன்னான் சார்''
''என்னது பைவ்நாட்ஃபோர் சொன்னானா? அவன் பாத்தானா?''
''இல்லை சார் அவனுக்கு அவன் பொண்டாட்டி சொன்னாளாம்.''
''அவன் பொஞ்சாதிக்கு யார் சொன்னாங்களா?''
''இல்லை சார் காட்ல விறகொடிக்க போன ஒரு பொம்பளை சொன்னாளாம்..''
''அப்போ அவ பாத்தாளா?''
''விறகொடிக்க போனப்ப காட்ல ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்ததைத்தான் அவ கேட்டாளாம்...''
இப்படியே போகும் அந்தக் காட்சி .படம் வெளியாகி 72 வருஷமாச்சு . இன்னைக்கும் பொருத்தம் ஆகாறது...பொன்முடியின் மறுபரிசீலனை மனு தள்ளுபடி.
விசாரணை நீதிமன்றம் எட்டு மாதங்களில் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு.
அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படாததால், 1 ஜூலை முதல் அனைத்து ஜாமீன் வழக்குகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அரசு ஏற்படுத்திய குழப்பத்தால், 1 ஜூலை முதல், ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கின்றனர்.







































கருத்துகள்