முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு வழக்கறிஞர் நியமன அரசாணைகள் நாளைக்குள் வெளிவந்து விடும் அமைச்சர் தகவல்

தமிழ்நாடு விசாரணை நீதிமன்றங்களுக்கான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான அரசாணைகள்  மாவட்ட வாரியாக வெளிவரத் துவங்கியுள்ளன.


சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இது குறித்து வெளியிட்ட விபரம் நியமன நடைமுறையில் தகுதியற்றவர்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருக்க, தற்போது வெளியிடப்படும் அனைத்து அரசாணை நியமனங்களும் ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்படுகின்றன.  இவர்களின் நீதிமன்றச் செயல்பாடுகள், திறமை மற்றும் பணிகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே  நிரந்தரமாக்கப்படுவர்.

தமிழ்நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் உள்ளிட்டவைகளில்  மொத்தம்  800 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் இந்த முறையில் நிரப்பப்படுகின்றன 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் நிர்வாக ரீதியான தனிநபர் பின்னணித் தகவல்கள்  முறையாகச் சரிபார்க்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நேற்று மாலை முதல் அரசாணைகள் வெளியிடப்படுகின்றன. மீதமுள்ள மாவட்டங்களுக்கான அனைத்து நியமன நடைமுறைகளும் மற்றும் அரசாணை வெளியீடுகளும் நாளை மாலைக்குள் முழுமையாக நிறைவடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களை மறுத்தவர்  கடந்துபோன 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை 100 சதவீதம் நேர்மையாகவும், தகுதி அடிப்படையிலும் மட்டுமே நியமனங்கள் நடைபெறுகின்றன என விளக்கமளித்தார்.
யாராவது தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக அவர்களை மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது "மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறாக தகவல்கள் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தகுதியானவர்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்படுகின்றனர்.


பணம் பெற்றுக்கொண்டு தவறான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மை இல்லாதது. நேற்று மாலைதான் இதற்கான அரசாணையே வெளியிடத் துவங்கியது. அதற்குள் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் நடைபெறும் ‘காவல்துறை வெரிஃபிகேஷன்’ உள்ளிட்ட சரிபார்ப்பு நடைமுறைகளைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு வதந்திகளைப் பரப்பியுள்ளனர்     அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துள்ளது. யாராவது பணம் வாங்கிக்கொண்டோ அல்லது அமைச்சரின் பெயரையோ, கட்சியினர் பெயரையோ தவறாகப் பயன்படுத்தினாலோ உடனடியாகப் புகார் அளிக்கலாம். புகார் அளித்தால் அவர்கள் மீது எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்  தற்போது வழங்கப்படும் இந்த நியமனங்கள் அனைத்தும் ஆறுமாத காலத்திற்கு தற்காலிகமானது மட்டுமே. அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். தற்காலிகமாக நியமிக்கப்படுவதால், யாராவது தகுதியற்ற நபர்கள் இருப்பது தெரியவந்தால், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக அவர்களை மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி எந்தவொரு தவறும் நடக்காமல், நேர்மையான முறையில் இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன.

தவெக வழக்கறிஞரே லஞ்சம் தொடர்பான குற்றாச்சாட்டை முன் வைத்தது குறித்த  கேள்விக்கு, ” உள்ளே இருக்கும் போட்டி காரணமாகச் சிலர் இதுபோன்ற புகார்களைக் கூறுவதாக் தெரிவித்தார் ஊழலற்ற நேர்மை ஆட்சி' பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது தமிழக வெற்றிக் கழகம் ஆனால் ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகப் பலவிதப் புகார்கள். அதில் 

ஆவின் தலைவர் பதவி ரூபாய் .50 லட்சம். அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூபாய் .30 லட்சம் என வசூல் சர்ச்சையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் 'குஷி' மோகன் மீது பலவித குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி.

அவரது கட்சி நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் ஒலிப்பதிவு சமூக இணைய வலைதளங்களில் பரவியது தற்போது அது நெருப்பாக தகித்துக் கொண்டுள்ளது  அந்த ஒலிப்பதிவில், 'நான் எவ்வளவு கஷ்டப்படற குடும்பம் தெரியுமா? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் நான்.

தளபதி வெற்றிபெற்றதும், அவர் எனக்காகவே வெற்றிபெற்றதாக நினைத்தேன். ஏனென்றால் நாம் அரசு தரப்பு வழக்கறிஞராவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் (குஷி மோகன்) என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அ.தி.மு.க, தி.மு.க-வில் அந்தக் கட்சிக்காரர்களைத் தவிர வேறடயாருக்கும்

கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம் கட்சியில் தான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள்' என வருகிறது அந்த ஒலிப்பதிவு .`வழக்கறிஞர் ஞானசௌந்தரி தரப்பில் கூறும் போது, "தளபதி கட்சி ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 11 வழக்கறிஞர்கள் தேவை எனக் கேட்டார்கள். ஆனால் அப்போது விழுப்புரத்தில் ஞானசுந்தரி உட்பட நான்கு பேர்தான் ரசிகர்கள் என்ற முறையில் பெயர் கொடுத்தார்கள்.

அதில் மூன்று பேர்தான் சீனியர். எங்களுடன் ஏழு ஜூனியர் வழக்கறிஞர்களை சேர்த்து, ஆன்லைனில் அப்லோட் செய்தோம். அப்போது அனைத்து செலவுகளையும் அவர்கள் தான் செய்தார்கள்.இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது,அதற்கும் அவர்கள்தான் ஆஜரானார்கள். அப்படி உள்ள போது அவர்களை விட்டுவிட்டு, அரசு வழக்கறிஞராக மிகவும் பிற்படுத்தப்ப்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேரைப் போட்டிருக்கிறார் 'குஷி' மோகன். ஒரு நியமனத்துக்கு ரூபாய் .5 லட்சம் முதல் ரூபாய் .30 லட்சம் வரை வாங்கிக் கொண்டு தான் நியமித்திருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார். அதற்கு, ``வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் எந்தப் பொறுப்பையும் அவருக்கு வழங்கவில்லை. இப்போது தளபதி ஆட்சி அமைந்ததும், இப்படி ஒரு வாய்ப்பிருக்கிறது எனக்கு கொடுங்கள் என்று கேட்டார்.

மற்ற கட்சிகளில், அந்தந்த கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுப்பார்கள் என்றார். உங்கள் கோரிக்கையை தலைமைக்கு தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டேன். இப்போது அந்த ஒலிப்பதிவில் கூட அவர், அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு பணம் வாங்குவதாக பேசிக் கொள்கிறார்கள் என்றுதான் கூறுகிறார். பெண் என்பதால் அவர் மீது நாங்கள் எந்த வழக்கையும் போடவில்லை” என்கிறார் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்.எல்லாம் சரி இதற்கு ஒரு தகுதித் தேர்வு வைத்து எடுத்தால் இது போன்ற தவறுகள் தடுக்க வாய்ப்பாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...