மதுரை மாவட்டம், மேலூர் அருகே சீமைராஜா என்ற நபரின் மரணத்தில் சந்தேகம் எனக் கூறி,
அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் காவல்துறையின் தரப்பு தகவல் படி, ஜூலை மாதம் 6 ஆம் தேதி அதிகாலை மேலூர்-காரைக்குடி பைபாஸ் சாலையிலுள்ள கூத்தப்பன்பட்டி அருகே சீமைராஜா மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் சீமைராஜா உயிரிழந்தார் எனவும் அவரது உறவினர்களின் தரப்பு தகவல் திருட்டு வழக்கு தொடர்பாக ஜூலை மாதம் 4-ஆம் தேதி மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீமைராஜாவைத் தேடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இந்த நிலையில் சீமைராஜாவின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததாலும், காயமடைந்த அவரது நண்பர் சூர்யாவைச் சந்திக்க போலீஸார் முதலில் அனுமதிக்காததாலும், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சூர்யாவைச் சந்திக்க அனுமதித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இளைஞரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி, அவரது உடலை மூத்த தடயவியல் நிபுணர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு செய்யவும், அதனை முழுமையாக வீடியோ காட்சிப் பதிவு செய்யவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீமைராஜாவின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், மேலூர் காவல் நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளைப் பாதுகாக்கவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக் வரும்.

கருத்துகள்