முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இந்தியத் திரையுலகின்  புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தனது 88 ஆவது வயதில்   மைசூருவில் காலமானார்.


திரையுலகினராலும் ரசிகர்களாலும் அன்போடு "ஜானகி அம்மா" என்றும், "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" (இசைக்குயில்) என்றும் அவர் போற்றப்படுகிறார். 

 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்தார்.

 மூன்று வயது முதலே பாடல்களைப் பாடத் தொடங்கினார். 

1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு'  தமிழ்த் திரைப்படத்தில் "பெண் என் ஆசை பாழானது" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

 தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, கொங்கணி, துளு, சிங்களம், ஆங்கிலம் உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார். 

ஒரு சிறு குழந்தை, 16 வயதுப் பெண், நடுத்தர வயதுப் பெண் மற்றும் வயதான பாட்டி என எந்தவொரு வயதினருக்கும் ஏற்கும் வகையில் தனது குரலை மாற்றிப் பாடும் அசாத்தியத் திறமை பெற்றவர்.  எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் போன்ற தலைசிறந்த பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். 

2016 ஆம் ஆண்டு வெளியான 'திருநாள்' என்ற படத்தில் பாடிய பிறகு, இனி திரைப்படங்களில் பாடப் போவதில்லை எனத் தனது 60 ஆண்டு கால இசைப் பயணத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார்.

 'பதினாறு வயதினிலே' (செந்தூரப்பூவே), 'தேவர் மகன்' (இஞ்சி இடுப்பழகி) உள்ளிட்ட பாடல்களுக்காக 4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார். 

மாநில விருதுகள்: பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும், 12 முறை ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். 

2013 ஆம் ஆண்டு தனக்கு மிகவும் தாமதமாக இந்த விருது அறிவிக்கப்பட்டதாகக் கூறி, இந்திய அரசின் பத்ம பூஷண் விருதை அவர் மறுத்தார். 


55.மொட்டு விட்ட முல்லை (இன்று நீ நாளை நான்)

56.நேத்து ராத்திரி (சகலகலா வல்லவன்)

57.அடடட மாமரக்கிளியே (சிட்டுக் குருவி)

58.கூண்டுக்குள்ள என்ன (சின்ன கவுண்டர்)

59.என்னை மானமுள்ள (சின்ன பசங்க நாங்க)

60.ராதைக்கேற்ற கண்ணணோ (சுமைதாங்கி)

61.சலக்கு சலக்கு சேலை (செம்பருத்தி)

62.வளையல் சத்தம் யம்மா (சேலம் விஷ்ணு)

63.ராத்திரியில் பூத்திருக்கும் (தங்க மகன்)

64.சுந்தரி கண்ணால் (தளபதி)

65.சந்தைக்கு வந்த கிளி (தர்மதுரை)

66.நீதானா நீதானா (தாலாட்டு பாட வா)

67.சும்மா நிக்காதிங்க (தூங்காதே தம்பி தூங்காதே)




68.இஞ்சி இடுப்பழகா (தேவர்மகன்)

69.தேவ மல்லிகை பூவே (நடிகன்)

70.கொட்ட பாக்கும் (நாட்டாமை )

71.பெண் மானே சங்கீதம் (நான் சிகப்பு மனிதன்)

72.பிள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)

73.என் ஜீவன் பாடுது (நீ தானா அந்தக்குயில்)

74.மணி ஓசை கேட்டு (பயணங்கள் முடிவதில்லை)

75.அசைந்தாடும் காற்றுக்கும் (பார்வை ஒன்றே போதுமே)

76.கருத்த மச்சான் (புது நெல்லு புது நாத்து)

77.மெட்டி மெட்டி (புள்ளக்குட்டிக்காரன்)

78.நெஞ்சிக்குள்ளே இன்னாருன்னு (பொன்னுமணி)

79.ஆசை அதிகம் வச்சு (மறுபடியும்)

80.கன்னி மனம் கெட்டு (மணமளே வா)

81.முதல்வனே (முதல்வன்)

82.செக்க செக்க செவந்த (வல்லரசு)

83.பொன்மேனி உருகுதே (மூன்றாம் பிறை)

84.ஊருசனம் தூங்கிருச்சு (மெல்ல திறந்தது கதவு)

85.வா வா பூவே வா (ரிஷி)

86.வெள்ளை புறாவொன்று (புதுக்கவிதை)

87.கோழி கூவும் நேரத்துல (வண்ண வண்ண பூக்கள்)

88.சின்ன ராசாவே (வால்டர் வெற்றிவேல்)

89.வா வா அன்பே பூஜை (ஈரமான ரோஜாவே)

90.பாம்பே டையிங் (சிஷ்யா)

91.இவளொரு இளங்குருவி (பிரம்மா)

92.தாலாட்டுதே (கடல் மீன்கள்)

93.காற்றில் எந்தன் கீதம் (ஜானி)

94.ஒட்டகத்தை கட்டிக்கோ (ஜென்டில்மேன்)

95.காதல் கடிதம் தீட்டவே (ஜோடி)

96.கண்ணன் மனம் (வசந்த ராகம்)

97.மஞ்சள் பூசும் (சக்கரை தேவன்)

98.மூக்குத்தி பூ மேலே (மெளன கீதங்கள்)

99.மந்திரம் சொன்னேன் (வேதம் புதிது)

100.மல்லியப்பூ பூத்திருக்கு (தாய் மேல் ஆணைபுகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு.  (1938 -2026)  பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக அஞ்சலி செலுத்துகிறது. 

17 மொழிகளில் பாடிய இசைக்குயில், சினிமாவில் பாடுவதை நிறுத்திய (2016- 2026) அதாவது பத்தாவது ஆண்டில், மைசூரில் உயிர்ப் பறவை பிரிந்தது . 

இதுவரை 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஆயிரம் பிறை கண்ட ஜானகியம்மாள்  அனைவரையும் வியக்க வைத்தவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...