சிவகங்கை நகர் காவல்துறையினர் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (வயது 35), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அபுசகுபர் சாதிக் (வயது 26), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (வயது 28), முகமதுரபீக் (எ) பாபு (வயது 30) ஆகிய நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது
அவர்களிடம் நடத்திய சோதனையில் 3.100 கிலோ அளவுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. அதனுடன் 3 செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். காவல்துறை தகவல் படி இந்தப் போதைப்பொருளை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதைப் பங்கிட்டுக் கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், காவல்துறைக்கு தகவல் வரவே பிடத்துள்ளனர் அந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்’மலேசியாவுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் அதில் சிவகங்கை ரசூல் தீன் (வயது 35,) சென்னை சகுபர் சாதிக் (வயது 26,) திருச்சிராப்பள்ளி முகமது ஹபீஸ் (வயது 28,) திருச்சிராப்பள்ளி முகமது ரபீக் (வயது 30,) ஆகியோர் சர்வதேச சந்தையில் ரூபாய் .15 கோடி மதிப்புடைய 3.1 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளுக்கு இடையே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இக் குற்றக் கும்பல் காவல்துறையில் பிடிபட்டது. இந்த போதைப்பொருள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு, பெங்களூரு வழியாக மலேசியாவுக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணை மூலம் தெரிந்தது, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையிலான தனிப்படைக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.சிவகங்கையில் பிடிபட்ட ரூபாய் .15 கோடி மதிப்பு போதைப்பொருள் வழக்கில் சர்வதேசத் தொடர்பு அம்பலம்! சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் அருகில் 3.020 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளைப் பிரித்துக் கொண்டிருந்த நால்வரை பிடித்து கைது செய்த காவல்துறை
இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவிக்கையில், 'இந்தப் போதைப்பொருள் தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக அல்ல, பெங்களூரு வழியாக மலேசியாவுக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் கடந்த 9 ஆண்டுகளாகத் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அனுபவம் வாய்ந்த கடத்தல் 'குருவிகள்' இதன் பின்னணியில் உள்ள முழுக் கடத்தல் வலையமைப்பையும் விரைவில் பிடிப்போம்" எனத் தெரிவித்துள்ளார் !


கருத்துகள்