முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி கொலையில் காவல் மற்றம் சிறைப் பணியாளர்கள் மூவர் கைது

நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியான வியாபாரி மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணமடைந்த சம்பவம்


தமிழ்நாட்டின் சிறை நிர்வாகத்தின் மீதும், சட்டம் ஒழுங்கு அமைப்பின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜூலை மாதம் 9 ஆம் தேதி அன்று தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் உயிரிழந்த நிலையில் . உடல் நலக் குறைவென் முதலில் கூறப்பட்டாலும், நீதித்துறையின் மருத்துவப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 19 காயங்கள் கண்டறியப்பட்டதாகத் தகவல் தெரிலிக்கின்றன. 


முன்பே ஊனமுற்ற வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. CCTV காட்சிகளில் சிறை அலுவலர்களும் கைதிகளும் அவரைத் தாக்கியது பதிவாகியுள்ள தகவல்கள் வெளியாகின, தொடர்ந்து மூன்று சிறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுகிறது.


இது வெறும் தனிப்பட்ட சம்பவமல்ல. இது தொடர்ச்சியான காவல் துறை மற்றும் சிறை அலுவலர்களின் அலட்சியம், மூர்க்கத்தனம் ஆகியவற்றின் வெளிப்பாடு. ஒரு உடல் ஊனமுற்ற நபர், சிறிய வியாபாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு முன்பே சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இந்த மரணம் தமிழ்நாட்டில் காவல் நிலைய மற்றும் சிறை மரணங்கள் தொடர்பான பழைய நிலையை மீண்டும் தந்தது சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய அநீதிகள், ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்பவையாகும்.

சிறை என்பது தண்டனை அனுபவிக்கவும், அவர்கள் திருந்தவதற்கான இடம்; சித்திரவதை மையம் அல்ல. விசாரணைக் கைதிகள் குற்றவாளிகளும் அல்லர்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ உதவி, மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நடந்தது முற்றிலும் எதிர்மாறானது. CCTV இருந்தும், அலுவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் மூன்று பேரை மட்டும் கைது செய்வது போதாது. இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகளின் பொறுப்பும், சிறைத்துறை அமைப்பு ரீதியான தோல்வியும் சரியாக விசாரிக்கப்பட வேண்டும். முழுமையான, சுயாதீன விசாரணை நடத்தி, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதும் 

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உடல் ஊனமுற்ற ஒருவருக்கு கூட இத்தகைய கொடுமை நிகழ்ந்திருப்பது, சமூக நீதியின் பெயரால் நாம் கட்டமைத்திருக்கும் அமைப்புகளின் தோல்வியை உணர்த்துகிறது . அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைச் சீர்திருத்தம், அதிகாரிகளுக்கு பயிற்சி, CCTV கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இத்தகைய மரணங்கள் தொடரும்; மக்களின் நம்பிக்கை சிதைந்து போகும்படியாகும்

சபரிவர்மனின் மரணம் சிறைத்துறையில் மாற்றத்துக்கான திருப்புமுனையாக அமைய வேண்டும். காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் மக்களின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தலாக மாறக் கூடாது. இந்த அவலத்துக்கு கடும் கண்டனம். உண்மை வெளியாகட்டும்; நீதி நிலைநாட்டப்படட்டும்.தடைசெய்த பான்பராக் விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கொலை. எதிர்த் தாக்குதலோ, தடுத்து தற்காத்துக் கொள்ளும் வாய்ப்போ அமையாத, உடற்கூறு கொண்ட மனிதனுக்கு சகமனிதன் தான் உதவி. இங்கே அது தலைகீழாகி அப்படி ஒரு மனிதரை அடித்தே கொலை செய்த காவல் பணியாளர்கள். 





கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் ( வயது 34). மாற்றுத்திறனாளி. 

 அவரது பெட்டிக் கடையிலிருந்து பத்து பாக்கெட் பான்பராக் -குட்காவை தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தினர் பறிமுதல் மற்றும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு போனதில்

"சொந்தப் பயன்பாட்டுக்காக நான் வைத்திருந்த பத்து பான்பராக் பாக்கெட்டுகளை தான் காவல்துறையினர் கைப்பற்றினர், மற்றபடி நான், பான்பராக் விற்பனை செய்யவில்லை" எனக் கதறிய சபரிவர்மனின் குரல் யாருக்கும் கேட்காமல் போகவே, பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு, கைது, ரிமாண்ட் என்று, சிறையில் சேர்த்திருக்கிறது. இந்த நிலையில் முன்தினம், மனு போட்டு கணவனை கைக்குழந்தையோடு போய் நாகர்கோவில் கிளைச்சிறையில் பார்த்துத் திரும்பிய மனைவிக்கு அடுத்த நாள் கணவன், இல்லை 

என்பதை ஏற்க முடியவில்லை. 

 சபரிவர்மன் உடலில், 19 இடங்களில் கொடுங்காயம் இருந்ததை, உடற்கூராய்வு முடித்து வெளியான தரவுகள் உறுதிப்படுத்துகிறது.

கைகள், கால்கள் போக எஞ்சியிருந்த நெஞ்சகப் பகுதியும் குண்டாந்தடிகளால் கொடூரமாக கையாளப்பட்டிருப்பதை அந்த அறிக்கை அடையாளப்படுத்துகிறது. 

ஜெயராஜ் -பென்னிக்ஸ் போன்ற அப்பாவி அப்பா-மகனை அடித்தே கொன்ற தூத்துக்குடி சாத்தான் குளம் காவலருக்கான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி ஆறுமாத காலம் 

 கூட ஆகவில்லை. அதற்குள்காவல்துளைக்கு என்ன அவசரமோ, அடுத்த தீர்ப்பை விரைந்து வாசிக்கும் சூழலை, உருவாக்கியுள்ளனர்.

நாகர்கோவில் கிளைச்சிறையின் தலைமை வார்டன் ஜெகன் மற்றும் காவலர்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய மூவர், இந்த 'லாக்கப் மரணம் ' விவகாரத்தில் கைது -சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபரிவர்மன் மரணத்துக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும் !

தமிழ்நாட்டை எந்த முதலமைச்சர் ஆண்டாலும் அவர்களின் ஆட்சி காலத்தில் கொடூரமான லாக் அப் மரணங்கள், குறைந்த பட்சம் நடந்துவிடுகிறது.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆட்சியின் அறுபத்தி ஐந்து நாள் ஆட்சியில் முதல் கொலை பலிக் கணக்கை நாகர்கோயில் காவல் துறை - சிறைக் காவலர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

 முளைக்கிற போதே முனை முள்ளை முறித்துப்போட்டு விட்டால் இனி ஒரு சிக்கலும் முளைக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...