முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லோக்பால் போல மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமையாத வரை ஊழல் ஒழிப்பு கானல் நீரே,

இந்தியா முழுவதும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எழுச்சி தான் மக்கள் மத்தியில் வரவேண்டும்


நாணயத்தின் மறுபக்கம் நாளும் வளரும் ஊழல் தானே, ஏழையின் வியர்வைத் துளிகளை எச்சில் துளியாய் விழுங்கும் ஒரு லஞ்சப் பெருங்கூட்டம்,  நான்கு கால்களில் அமைந்த ஜனநாயக நாற்காலிக்கு இரண்டு கால்கள் பழுது எனில் அதன் அடியில் செல்லும் ஊழல் கைகள்,  நாட்டின் உரிமையை விற்கும் நேர்மை இல்லாத அந்தகக் கண்கள்!சாமானியனின் உரிமை மறுக்கப்பட்டு, சட்டத்திலுள்ள சிறிய எலிப்பொறி ஓட்டைகளில் தப்பிக்கும் பெரிய ஊழல் பெருச்சாளிகள், மூலம் லஞ்சம் நுழைந்து தானே உண்மை !   இனி நாளை மலரும் விடியலாய்,ஒன்றாகுவோம் வாரீர்! 





தற்போது தமிழ்நாடு அரசாணை  நேர்மையின் ஒளியை ஏந்தி, ஊழலை வேரறுப்போம் பாரீர் என வந்தாலும் !    ஊழல் என்பது பலவகை   "தானும் செய்யாது தருபவரையும் தடுத்தல் அதுவே  தகுதியில் செய்யும் ஊழல், காணும் அனைத்திலும் காழ்ப்புடன் எழுதல் கற்பனையில் செய்யும் ஊழல், மானம், மரியாதை, மதிப்பைக் கெடுத்தல்  மனிதம் அழிக்கும் ஊழல், வீணாய் தர்க்கித்து விவாதம் புரிதல்   விவேகத்தில் செய்யும் ஊழல், கூட்டம் சேர்த்து குறிவைத்து ஒருவரைக் குதறுதல் ஒரு வகை ஊழல், கேட்டதையெல்லாம் போட்டுப் பேசுதல்  கூட்டத்தில் செய்யும் ஊழல், இப்படி பல வகை ஊழல் லஞ்சம் லாவண்யங்களின் மத்தியில் 

அத்தி பூத்த கதையாக தமிழக அனைத்துத் துறைச் செயலகங்கள் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள், அனைத்து ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான அலுவலர்கள், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவிப்புப் பலகையை ஒவ்வொரு அலுவலகத்திலும், ( ஏற்கனவே உள்ளது) பொது இடங்களில் காணக்கூடிய இடங்களிலும், பின்வரும் வாசகங்கள் அடங்கிய இணையதளத்திலும் வைக்குமாறு தற்போது கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:-"லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்", ஊழல் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு அனுப்பப்படலாம். எண்.293, எம்கேஎன் சாலை, ஆலந்தூர், சென்னை - 600 016.  தொலைபேசி: +91-44-2232 1090, 2232 1085, 2231 0989,  2234 2142  மொபைல்: 94981 80936 (Whatsapp) தொலைநகல்: 91-44-2232 1005,  மின்னஞ்சல்: dvac@nic.in 

ஊழலை ஒழிக்க முன்னோக்கி நகர்வது மிகவும் நல்ல நடவடிக்கை என்ற போதிலும் இவை ஊழலை ஒழிக்க உதவுமா என்பதே இங்கு எழுவினா? மக்களில் ஆயிரத்தில் ஒருவர் வேண்டுமானாலும் இதை உணரலாம் ஆனால் மக்கள் விழிப்புணர்வு இப்போது எதுவும் இல்லை, அது குறித்து கவலை அவர்கள் மத்தியில் இல்லை,மேலும் புகார் மீது தாங்களே நடவடிக்கை எடுத்த வரலாறு என்பது ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இதுவரை இல்லை அதில் பொறிவைத்து பிடித்தால் மட்டுமே நடவடிக்கை பாயும், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை சாமானியன் அறிய வாய்ப்புகள் இல்லை, காரணம் அந்த துறைக்கு மக்கள் மத்தியில் நெருக்கம் இல்லை, ஆகவே இது அரசாணையாக வந்தாலும் வெற்று விளம்பரம் போலவே ஆகும், ஊழலை ஒழிக்க ஒரே வழி நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள லோக் ஆயுக்தா வழக்கில் அரசு முயற்சி எடுத்து தீர்ப்புகள் வந்து அவை புதிய சட்டமாக தமிழ்நாட்டில் மாறாத வரை இது மக்கள் மத்தியில் கவனம் பெறாது. தற்போது உண்மை நிலை யாதெனில்


:-மதுரை கிளை சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துரையூர் வட்டம் பகலவாடி குருநாதன்  உச்சநீதிமன்றம் வரை சென்று பல போராட்டங்கள் நடத்தித் தொடுத்த பொதுநல வழக்கு, 2018-ஆம் ஆண்டு அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்த போது இயற்றப்பட்ட தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் ஊழல் வாதிகளைக் காப்பாற்றும் நோக்கில் உள்ளதால் அதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். மத்திய லோக்பால் சட்டத்திற்கு முரணாக இந்த மாநிலச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இவர் ஒரு பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்தார். 



அது விசாரணை இன்னும் முடிவான தீர்ப்பை நேக்கி வரவில்லை ஆகவே காத்திருக்கும் நிலை உள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு, 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள வேறு ஒரு வழக்கு தஞ்சாவூர் வி.ஜீவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தப் பொதுநல வழக்கைத் (PIL) தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வு, இது குறித்து 6 வார காலத்திற்குள் விரிவான பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அந்த மனுவில்  அரசு ஊழியர்கள், ஆடசியாளர்கள் மற்றும் மக்களால் தேர்வான பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக 2018-ஆம் ஆண்டில் 'தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்' கொண்டுவரப்பட்டாலும், அது இன்னும் முழுமையான வீரியத்துடன் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை.தகவல் வெளிப்படைத்தன்மை இன்மை: லோக் ஆயுக்தா இணையதள விவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 617 புகார்கள் முடிக்கப்பட்டு, 137 புகார்கள் நிலுவையில் உள்ளதாகக் காட்டுகிறது. ஆனால், அவற்றில் எத்தனை வழக்குகளில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல லோக் ஆயுக்தா அமைபுக்கு என தனி காவல் படை இல்லை, நிலுவை வழக்குகள் என்ன நிலையில் உள்ளன என்பது போன்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லை. லோக் ஆயுக்தா செயலாளராக, சட்டப்படி துணைச் செயலாளர் அந்தஸ்து கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற விதியை மீறி தற்போதைய அரசாணை உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஊழலுக்கு எதிரான இந்த அமைப்பைத் தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்தக் கோரி இந்த சட்டப் போராட்டம் தொடரப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஊழல் ஒழிப்பு என்பதை மக்கள் உணரவைத்தாலும் அவர்கள் நேரடியாக புகார் தரும் போது சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது அது மாறாத வரை ஊழல் ஒழிப்பு ன்பது காணல் நீரே.               



"இல்லாத விடயத்தை இருக்குது என்றால்  இவரது உரையில் ஊழல், சொல்லாத விடயத்தை சொன்னதாய்ச் சொன்னால் சொன்னவர் சொல்லில் ஊழல், பொல்லாத பொய்யும் புரட்டும் சொன்னால் உள்ளது நம்பிக்கை ஊழல், எல்லோரும் பணத்தை எடுத்தல் மட்டுமே சொல்லுவார் ஊழல்,  வீணாய் தர்க்கித்து விவாதம் புரிதல் விவேகத்தில் செய்யும் ஊழல்,         


கூட்டம் சேர்த்து குறிவைத்து ஒருவரைக்  குதறுதல் ஒரு வகை ஊழல்,  கேட்டதையெல்லாம் போட்டுப் பேசுதல் கூட்டத்தில் செய்யும் ஊழல்,அடுத்தவர் பொருளைத் திருட வேண்டும் அல்லது ஏமாற்றி ஊழல் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எண்ணமே ஒருவரை அழித்துவிடும். அது குறள் 282 ல் :"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்." ஒரு நாட்டின் அதிகாரம் கொண்டவர்கள் குடிமக்களை வருத்தி, முறைகேடாகப் பொருள் (லஞ்சம்/ஊழல் பணம்) வாங்குவது, கையில் ஆயுதம் ஏந்திய திருடன் 'கொடு' என்று மிரட்டுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதுபோல குறள் 552:"வேலோடு நின்றான் இடுவென்றது போலும்கோலோடு நின்றான் இரவு".அறநெறிக்கு மாறாக, பிறரை ஏமாற்றிச் சேர்க்கும் ஊழல் பணம் ஒருபோதும் நிலைக்காது. மேலும் குறள் 113:"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே ஒழிய விடல்". முறையற்ற வழிகளில் சேர்க்கப்படும் பணத்தால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை இக்குறள் உணர்த்துகிறது. மேலும் குறள் 39:"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல." என்கிறார்.  லோக்பால் போல மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமையாத வரை ஊழல் ஒழிப்பு கானல் நீரே,மாநில அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் முறையான சட்ட அமலாக்கம் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஆரோக்கியமான தொடக்கமாகும். ஆனால் இதுவே முடிவல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...