பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி ஆலயத்தின் டிரஸ்ட் சொத்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட குற்றம் நடந்த நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை விசாரணை மேற்கொண்ட போது வழக்கின் முக்கியத்துவம் மற்றும் கோயில் சொத்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என பழனி கோயிலின் நிலக் கண்காணிப்பாளர் முருகானந்தம் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மேலும் . நேற்று சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்,உத்தரவிட்டது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்காக தேவையற்ற குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், தனிநபர் அவதூறுகளுக்கு சிவில் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியுமே தவிர, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது முறையாகாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா என்ற திமுக நபர் மீது பொது அமைதியை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில
நிலப்பதிவு குறித்த முதலாவது பார்வை:- D.சேதுபதி, மற்றும் K.வெள்ளதுரை எனும் இரண்டு பேர் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ஸ்ரீ தண்டாயுதபானி ஆலய மடத்து டிரஸ்ட்க்குச் சொந்தம்மான நில விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய உத்திரவிட தாக்கலான வழக்குத் தீர்ப்பு தவறாக உண்மை மறைத்து வாங்கிய உத்தரவு, முறைகேடு வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.இந்த நிலத்தை பாலச்சந்தர் என்ற சார்பதிவாளர் 3ஆம் தேதியே பதிவு செய்துவிட்டார்.ஆனால், அரசு திட்டமிட்டு தன்னை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரை தப்பிக்க வைத்துள்ளதாக ஜஸ்டின் மணிகண்டன் தரப்பு வாதம்.3-ஆம் தேதி பதிவுக்கான வேலைகள் மட்டுமே செய்யப்பட்டன. ஜஸ்டின் மணிகண்டன் தான் முறைப்படி பதிவு பணிகளை முடித்துள்ளார் என அரசுத் தரப்பு வாதம் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதா?இரு சார்-பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா? என நீதிபதி கேள்வி இவர் தான் அந்த ரூ.100 கோடி மதிப்புள்ள இடத்தை ரூபாய் .2 கோடிக்கு வாங்கிய இரண்டு பேரில் ஒருவராம் பத்திரத்தில் கண்ட ஒருவர், நிலம் வாங்கியதாக பதிவில்
ஆகவே பல சந்தேகங்கள் எழவே சிபிசிஐடி விசாரணை மத்தியில் ஜாமீன் வந்துள்ளது. ஆனால் விசாரணை சூடு பிடித்தது. தற்போது திண்டுக்கல் லிங்கா அவென்யூ பகுதியில் உள்ள ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பழனி ஆலயத்தில் 100 கோடி நில மோசடியில் திமுக நகர வார்டு கிளைச் செயலாளர் சாட்சிக் கையெழுத்து போட்டதால் அவரது வீட்டில் சிபிசிஐடி காவல்துறை சோதனைபழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியவர்கள், சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள் தலைமறைவு
சிபிசிஐடி காவல்துறை தீவிரமான தேடுதல், திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்திலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூபாய் .100 கோடி சந்தை மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்,நிலத்தை விற்பனை செய்தவர்,வாங்கியவர்கள் என 4 பேர் மீது பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர் .இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்,மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பத்திரப்பதிவையும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைகிளை ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு
மாற்றப்பட்டது.இதையடுத்து,சிபிசிஐடி DSPஅஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி, தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர்.நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி தேவஸ்தான நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம்,
வழக்குப்பிரிவு கண்காணிப்பாளர்கள் சிவனேசன்,கணபதி, வட்டாட்சியர் (ஓய்வு) மாரியப்பன்,கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சின்னசாமி ஆகிய 5 பேரிடம் கண்காணிப்பாளர் சாஜிதா விசாரணை நடத்தினார்.இதேபோல, பத்திரப்பதிவு
அலுவலகத்தில் மற்றொரு குழுவினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.கிடுக்கிப்பிடி விசாரணையால் தேவஸ்தானம் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள்,பணியாளர்களில் ஊழல் செய்த பலர் கலக்கத்தில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்ப உள்ளனர்.
(பழனி கோவில் டிரஸ்ட் நிலம் விற்பனை காலத்தில் தவெக ஆட்சியில் இல்லை.)இந்த நிலையில் நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள்,முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேரந்த முருகதாஸ்,நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளம் K.வெள்ளைதுரை மற்றும் பழநி அமரப்பூண்டி டி.கே.என்.புதூர் D.சேதுபதி ஆகியோர் தலைமறைவாகி ,செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.மேலும் பத்திரப்பதிவு நாளில் சாட்சிக் கையெழுத்திட்டோரும் தலைமறைவாகி உள்ளனர்.இவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.முறைகேடாக கோயில் நிலத்தை விற்றவர்,வாங்கியவர்கள் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வலியுறுத்திய பின் வெளிவந்தது, பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்தபோது,பணியில் இருந்த சார்பதிவாளர் பழனிச்சாமி வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிவு செய்ய இயலாது எனக்கூறி நிராகரித்தார்.அவர் பணியிட மாறுதலில் சென்றார்.பின்னர் சார்பதிவாளர் பாலசந்தர் பொறுப்பேற்ற நிலையில் ஜூலை மாதம் 3-ஆம் தேதி சர்ச்சைக்குள்ளான நிலத்தை பதிவு செய்வதற்கான சில முன்னேற்பாடுகள் நடந்துள்ளன.ஜூலை மாதம் 6-ஆம் தேதி பணி பாலசந்தர் விடுமுறையில் சென்றதால், சிறப்பு பணிக்கு வந்த ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை பதிவு செய்துள்ளார்.இந்த விஷயத்தில் மேற்கண்ட 3 பேரிடமும் சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல அரசியல் புள்ளிகள்,அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வீடியோ ஆதாரங்களை வைத்து சிபிசிஐடி போலீஸார் 3 குழுவாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்















கருத்துகள்