சமூகநலத்துறை அரசுத் திட்ட பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய வட்டார விரிவாக்க அலுவலர் கைது!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பகுதியில், அரசு திட்ட பயனாளியிடம் ரூபாய் .1,000 லஞ்சம் பெற்றதாக வட்டார விரிவாக்க அலுவலர் (Extension) ஜெயராணியை சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) கைது செய்தனர்.அரசுத் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய நலன்களை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பயனாளியிடம் சட்டவிரோதமாக ரூபாய் .1,000 லஞ்சம் கேட்டதாக புகார், இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த
புகாரின் அடிப்படையில் அவர்கள் பொறிவைக்கும் திட்டத்தின்படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சிகள் முன்னிலையில் புகார்தாரர் கொடுத்த போது, வட்டார விரிவாக்க அலுவலர் ஜெயராணி அந்த லஞ்சப் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயராணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் வேறு அலுவலர்கள் அல்லது இடைத்தரகர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர், பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், இந்த நிலையில்
அரசு சேவைகளை வழங்குவதற்காக எந்த அரசு அலுவலரும் சட்டவிரோதமாக பணம் கோரக் கூடாது என்றும், லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





கருத்துகள்