முன் ஜாமீன் மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்து உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்காக வந்த முன்னால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்து
விசாரணைக்கு கூட்டிச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர். திருச்செந்தூர் தொகுதியிலிருந்து அதிமுக திமுக என மாறி தொடர்ந்து 7 வது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராவார் " கைதான பின் "வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..! ” என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் பேசியதால் புகார் அதற்கு முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சில நிமிடங்களில் ஆத்தூருக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச் சென்றனர்.
த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ள முதல் அரசியல் கைது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக நடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். "முதலமைச்சரை தரங்கெட்டு பேசியவரை கைது செய்வதே சரியான நடவடிக்கை" எனப் பேசப்படுகிறது.
ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியுள்ளார்.
அவர் பேசியதாக கூறப்படும் கருத்துகள்:
"முதலமைச்சர் சினிமா நடிகைகளோடு ஜாலியாக இருந்தார். அவரைக் கொண்டு வந்து சட்டசபையில் உட்கார வைத்த உடன் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்" மேலும், "சட்டப்பேரவையில் முதலமைச்சர் 'சிக்கிக் கொண்டார்' என்பது போன்று இருப்பதாகவும், 'நடிகை வீட்டில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன், இப்போது இங்கே சிக்கிக் கொண்டேனே' என்று அவர் நினைப்பது போன்றும்" கூறியதாக அந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதையடுத்து, ஒட்டூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 352 (வெறுப்பூட்டும் நோக்கில் அவமதிப்பு) மற்றும் பிரிவு 353(2) (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அறிக்கைகள்) ஆகிய பிரிவின் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைது குறித்து கனிமொழி "அடக்குமுறை" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பட்ட பிறர் அறியாத விபரம் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். இதற்கு நீதிமன்றம் கூட "முதலமைச்சர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?" என்று கேள்வியை எழுப்பியுள்ளது.
அரசியல் விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால், அது தனிப்பட்ட அவதூறாக மாறும்போது, அது சமூகத்தில் பகைமையையும், அரசியல் களத்தில் நம்பிக்கையின்மையையும் உருவாக்கும். ஒரு பொதுப் பிரதிநிதி, தனது விமர்சனங்களை கண்ணியமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்; அவதூறாக அல்ல.
மேலும், கைது நடவடிக்கை "அராஜகமானது" என்று கனிமொழி கூறியுள்ளார். ஆனால், நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீனை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், தான் காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டது இது முற்றிலும் சட்டபூர்வமானது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவருக்கு சட்டத்திலிருந்து விலக்கு இல்லை. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். மேலும், இந்த வழக்கில் திமுக மற்றும் தவெக இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடையும். இந்த தீர்ப்பு, அரசியல் விமர்சனங்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் எல்லைகள் குறித்த புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது என பலரும் பேசும் நிலை. ஆனால் அவர் பொதுக்கூடடத்தில் நாவடக்கத்தடனே பேச வேண்டும் என்பதே பலரது கருத்து.







கருத்துகள்