முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புது தில்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் மாணவர்கள் போராட்டம் காரணமாகப் பதற்றம்

புது தில்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மற்றும்



ஆயிரக்கணக்கான மாணவர்கள் இணைந்து நடத்தி வரும் தீவிரப் போராட்டம் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,




ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.  பேரணியைத் தடுத்து நிறுத்த டில்லி காவல்துறை தடியடி  நடத்தியதோடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தியது. இந்த மோதலில்



50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் 118 பாதுகாப்புப் பணியாளர்களும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.  திங்கட்கிழமை இரவு போராட்டக் களத்தில் இருந்த தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் மேடைகளைக் காவல்துறை அகற்றியது. இருப்பினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் மீண்டும் அங்கு திரண்டு போராட்டத்தைத் தொடர்நதனர். போராட்டத்தின் போது



சிஜேபி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மயக்கமடைந்தார். பின்னர், காவல்துறையின் தடியடியால் காயமடைந்த பெண் போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்களிடம் அவர் சமூக ஊடகங்கள் வாயிலாக மன்னிப்புக் கோரினார். லடாக்கைச் சேர்ந்த  சோனம் வாங்சுக் இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கடந்த சனிக்கிழமை  மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலும், மருத்துவமனையிலிருந்தே  உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார், டி ல்லி மற்றும் சுற்றுவட்டார மாநிலங்களிலிருந்து தொடர்ந்து மாணவர்கள் ஜந்தர் மந்தர் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்



.பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய டில்லியின் சில பகுதிகளில் மொபைல் இணையச் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டதுடன், ராஜீவ் சௌக் உள்ளிட்ட சில முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த 1,400-க்கும் மேற்பட்ட கூடுதல் காவலர்கள் மற்றும் அதிரடிப்படையினர் (RAF) குவிக்கப்பட்டுள்ளனர்.வன்முறை மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கூறி போராட்டக்காரர்கள் மீது டில்லி காவல்துறை 4 முதல் தகவல் அறிக்கைகளைப் (FIR) பதிவு செய்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என மாணவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்திற்குள்ளும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து அவையை ஒத்திவைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டன. கரப்பான் பூச்சி எனும் சொல்லை அவமானமாக உச்சரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வார்த்தைகள், அந்த இளைஞர்களின் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, ஒரு புதிய  Cockroach Janata Party (CJP) என்ற பெயரில் தொடங்கிய இயக்கம், NEET உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள், CBSE குளறுபடிகள் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராடி வருகிறது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு, தேர்வு அமைப்பில் தீவிர சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 10 நாட்களைத் தாண்டியும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.



 ஆரம்பத்தில் சமூக ஊடகங்களில் வைரலான நகைச்சுவை இயக்கமாகத் தொடங்கியது. ஆனால், உண்மையான இளைஞர் ஆத்திரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஜந்தர் மந்தரில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பின்னர் நாடு தழுவிய போராட்டங்களாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சி மாணவர் அமைப்பு மூலம் விரிவடைந்தது. அதில் லடாக் மாணவர்கள் கல்வி மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவன இயக்குனர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து ஆதரவு தெரிவித்ததில் விவசாய சங்கங்கள், இடதுசாரி மாணவ அமைப்புகள் உள்ளிட்டோர் இணைந்தனர். “சன்சாத் சலோ”  முழக்கத்துடன் தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய ஊர்வலத்தில் காவல்துறை தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு வரை நிலைமை முற்றியது.



இந்தப் போராட்டத்தின் முன்னணியில் உள்ள அபிஜீத் திப்கே உள்ளிட்ட இளைஞர்கள், “அரசியல் கட்சிகள் கொடிகளுடன் வர வேண்டாம்” என முதலில் கூறினாலும், பின்னர் எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாடினர். இங்கு தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கேள்விக்குரியதாகிறது. ஆரம்பத்தில் காங்கிரஸ் தரப்பில் தயக்கமும், “இது AAP-ன் நாடகம்” என்ற விமர்சனமும் இருந்தது. ராகுல் காந்தியின் “சத்திரோன் கி கூஞ்ச்” போன்ற சொந்த முயற்சிகளுக்கு இந்த இயக்கம் தடையாகக் கருதப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால், காவல்துறை நடவடிக்கைக்குப் பின் பிரியங்கா காந்தி, டிம்பிள் யாதவ், ஹெஜ்ரிவால்,  உள்ளிட்டோர் குரல் எழுப்பினர. “இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் அரசு” என விமர்சித்து, அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் ராஜினாமாவைக் கோரினர்.



 ஆனால், காங்கிரஸ் முழு உறுதியுடன் முன்வரவில்லை என்பதும் உண்மை. இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கொடிகளைப் பிடித்தபடி நேரடியாகக் களத்தில் இறங்கியபோது, காங்கிரஸ் “சொந்த முயற்சிகளை” முன்னிலைப்படுத்தியது. இது எதிர்க்கட்சி அரசியலின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. உண்மையான இளைஞர் பிரச்னையில் ஒன்றுபட முடியாத அரசியல் கட்சிகளின் தன்மையை CJP போராட்டம் அம்பலப்படுத்துகிறது.

இந்தப் போராட்டம் வெறும் தேர்வு முறைகேடு பிரச்னை அல்ல; இது வேலைவாய்ப்பின்மை, கல்வியின் வணிகமயமாக்கல், அரசின் பொறுப்புணர்வின்மை ஆகியவற்றுக்கு எதிரான இளைஞர் எழுச்சி. அரசு இதை “வெளிப்புற சக்திகள்” என்று தவறாகச் சித்தரிப்பதும், காவல்துறை அடக்குமுறையும் மட்டுமே பதில் என்றால், அது மேலும் பெரிய கொந்தளிப்புக்கு வழி வகுக்கும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த இயக்கத்தை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்தாமல், உண்மையான சீர்திருத்தத்துக்காக முயல வேண்டும்.


CJP-யின் “கரப்பான்” சின்னம் பல இளைஞர்களின்  உயிர்த்துடிப்பைப் பிரதிபலிக்கிறது. அதை நசுக்க, அது இன்னும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். நிலை அரசும் எதிர்க்கட்சிகளும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் அரசியல் சூதாட்டத்துக்கு அப்பாற்பட்டது. அவர்களின் குரலுக்கு செவி சாய்க்காவிட்டால், வரும் தேர்வுகளில் அந்தக் குரல் இன்னும் சத்தமாக கேட்குமோ எனத் தோன்றுகிறது, கரப்பான்பூச்சி கட்சி போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்டது. இல்லை கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைய ஆரம்பிச்சுடும். என்பது பாஜகவினர் மத்தியில் வரும் கருத்து 

ஆனா அது ஏற்படுத்தியுள்ள சேதாரங்கள்.

உண்மையிலேயே மனதிற்கு கவலையை வரவழைக்கிறது. அதுவும் மத்திய கிழக்கில் இவ்வளவு பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது நமது பொருளாதாரம் தொய்வடைய ஆரம்பிக்குமோ என்று கவலை கொள்ளும் போது இவ்வாறான கரப்பான் பூச்சிகளின் போராட்டம்.. நிர்வாக ரீதியாக ஒரு சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளும் நல்லது தான்.  

அரசும் மென்மையாக இந்தப் போராட்டங்களை கையாள்கிறதோ என தீவிர பாஜக ஆதரவாளர்களே சந்தேகம் கொள்ள ஆரம்பித்திருக்கும் தருணம் இது. அரசுக்கும் இந்த போராட்டங்களை அதிரடியாக அடித்து துவைத்து காலி செய்ய முடியாது. நாட்டின் கண்ணியமும் பெயரும்  உலக அளவில் மிக முக்கியம். 

இதில் தீவிர பாஜக ஆதரவாளர்களாலேயே கேட்கப்படுவது.. ஏன் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் அந்த பதவியில் நீட்டிக்க வைக்கப்படுகிறார் என்பது. பிரச்சனை என்று வந்த போது அசைக்க முடியாதவர் என்று கருதப்பட்ட கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவை ஓரங் கட்டிய பாஜகவால் கல்வித் துறையில் இவ்வளவு பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது ஏன் தர்மேந்திர பிரதானை நீக்க முடியவில்லை என்கிற கேள்வி சரியானதாகத்தான் தோன்றுகிறது. 

சரி  தர்மேந்திர பிரதான் பெட்ரோலிய துறை அமைச்சராக இருக்கும் போது அந்த துறையில்  செய்த நல்லது கெட்டது உற்று நோக்க வேண்டும் 

பாஜகவில் அவருக்குள்ள முக்கியத்துவம், அவரது அமைச்சராக பணியாற்றியதை விட, கட்சிக்காக அவரது அமைப்புசார் மற்றும் வியூக ரீதியான திறன்களாலேயே அறியப்படுகிறார்.  

அவர் பதவி விலக கடுமையான அரசியல் நெருக்கடிகளை  எதிர்கொண்ட போதிலும், பின்வரும் முக்கிய காரணங்களுக்காக பாஜக தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

கட்சிக்குள் ஒரு சிறந்த தேர்தல் மேலாளராகவும், உட்கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் பிரதானின் செயல்பாடுகள் மற்றும் வியூகத் திட்டங்களைச் செயல்படுத்துதல், சிக்கலான உட்கட்சிச் சூழலைக் கையாளுதல் மற்றும் கூட்டணிகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் அவருக்குள்ள திறனே அவரது பலவீனத்தை விட  முக்கிய பலமாகத் திகழ்கிறது.

பாஜகவின் தற்போதைய முக்கியமான வாக்கு வங்கியாக திகழும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) முகமாகத் திகழ்ந்த மற்றும் ஒடிசாவை சேர்ந்த தலைவரான பிரதான், கிழக்கு பிராந்தியத்தில் பாஜகவிற்கு மிக முக்கியமான வாக்கு வங்கியை உருவாக்கியதில் பங்கு வகித்தவர் தர்மேந்திர பிரதான்.

கிழக்கு இந்தியாவில் வாக்காளர்களையும் கட்சித் தொண்டர்களையும் ஒருங்கிணைப்பதில் பங்காற்றியுள்ளார். நிர்வாகப் பணிகளை விடக் கட்சியை வலுப்படுத்துவதற்கே அவரது அரசியல் பயணத்தில்  அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கல்வி அமைச்சராக அவர் வகித்த பதவிக் காலங்கள் அவ்வப்போது எதிர் கட்சிகளின் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருந்தாலும், அவர் அமைச்சராக இருக்கும் போது உள்ள பொறுப்புகளை விட, அவரது அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான திறன்களால் பாஜக அவரை விட முடியாது. 

பாஜக யாரையும் இதுவரை கைவிட்டதில்லை... பாஜக அவரை கட்சிப் பணிக்கு அனுப்புவது மிகச் சரியான விஷயமாக இருக்கும் என்பது எனது எண்ணம். பாஜக தேசிய மேலிடம் தர்மேந்திர பிரதானைப் பொறுத்தவரை என்ன மாதிரியான முடிவெடுக்கிறதென்று பார்ப்போம். அபிஜீத் திப்கே ஒரு இந்திய அரசியல் தொடர்பியல் உத்தியாளர் மற்றும் செயற்பாட்டாளராவார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற நையாண்டி இயக்கத்தின் நிறுவனராக அறியப்படுகிறார்.

இவர் அமெரிகாவைச் சேர்ந்தவர் .. அமெரிக்க நாட்டில் போராட்டங்கள் எதிர்ப்புகளை அமெரிக்கா காவல்துறை எப்படி கையாளகிறது எனபது பலரும் அறிந்த நிகழ்வு  ஜனநாயக முறைப்படி போராடுவதற்கு உரிமை உண்டு என்றாலும் அதற்கும் எல்லை உள்ளது.

இந்த கரப்பான் பூச்சிகளின் உண்மையான நோக்கம் பாஜக ஆட்சியில் இருக்கக் கூடாதென்பது..

துணை ராணுவத்தினரின் இந்த நடவடிக்கை ஒரு வருத்தத்தை தந்தாலும் அவர்களுக்கு புரிகிற மொழியில் பேசினால் தான் புரியும் என்பதால் இது சரியான நடவடிக்கை தான். என்பது பாஜகவினர் தரப்பு வாதம், இந்த நிலையில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மாணவர்கள் அமைப்பு பாலன் இல்லத்தில் இந்த போராட்டத்தை ஆதரித்து போராடுகிற நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலகம் முன்பு தெருப் பாடகர் அறிவு என்ற நபர்


மத்திய நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் குரல் கொடுக்க வலியுறுத்தி கோஷமிட்டார். அதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து கூட்டிச் சென்ற நிலையில் மீண்டும் தலைமை செயலகத்துக்கு அழைத்து வந்து முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்து  பேசினார். அவர் உள்ளே செல்லும் போது உங்களுக்கு முதல்வரை நன்றாக தெரியும், அப்படியிருக்கும் போது போராடியது ஏன் என்ற கேள்விக்கு, ”மாணவர்களை அடிக்கக் கூடாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது” எனக் கூறி விட்டு உள்ளே சென்றார்.

தெருப் பாடகர் அறிவு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைப் பாடலை எழுதி இசையமைத்து பாடியவராவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...