புதிய மொழி கற்பது வீணாகாது சிபிஎஸ்இ யின் மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சிபிஎஸ்இ (CBSE) 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தேசிய கல்விக் கொள்கை (NEP 2020)-ன் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்றாம் மொழி கட்டாயம்: 9-ஆம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவரும் மூன்று மொழிகளைப் படித்தாக வேண்டும். இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். உள் மதிப்பீடு மட்டுமே: 10-ஆம் வகுப்பில் மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு கிடையாது.
அதற்குப் பதிலாக, பள்ளி அளவில் நடத்தப்படும் உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில் (Internal Assessment) கண்டிப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும். மூன்றாம் மொழி உள் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் (Secondary School Examination Pass Certificate) வழங்கப்படும்.
இந்த விதிமுறைகள் வரும் 2026-27 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும், 2027-28 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும் இந்த விதிமுறை முழுமையாகப் பொருந்தும். சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் முழுமையான வழிகாட்டுதல்களைப் பார்க்க CBSE Press Release மற்றும் CBSE Academic Circular இணைப்புகளைப் பார்வையிடலாம்.






கருத்துகள்