மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்பு
ரவ்னீத் சிங் பிட்டு இந்தியாவில் மத்திய அமைச்சர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்தார். ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்திய ஜனாதிபதி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தலில் இவரை முன்வைத்து களமிறங்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்ததை பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். ரவ்னீத் சிங் பிட்டு (ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள்