மத்திய கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.
நீட் உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வு முறைகேடு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களான Fast Track Courts அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளரான வினீத் ஜோஷி மாற்றப்பட்டார், அதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 16 செயலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீட் (NEET) போன்ற முக்கிய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு வழக்குகளை அதிவிரைவாக விசாரிக்க பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் மேலும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தருவதே இந்த விரைவு நீதிமன்றங்களின் முக்கிய நோக்கமாகும். வினீத் ஜோஷி பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளராக மாற்றப்பட்டார்.புதிதாக : நரேஷ் பால் கங்வார் (உயர் கல்வி) மற்றும் டி.கே. அனில் குமார் (பள்ளி கல்வி) பொறுப்பேற்பு. இதனிடையே வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிப்பதற்கான விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக நீதிபதி அனு குரோவர் பாலி்காவை டெல்லி உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் தொடர்பான குற்ற வழக்குகளை விரைவு நீதிமன்றம் விரைவாக விசாரித்து தண்டனை வழங்கும்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 ன் கீழ் வழக்குகளை விசாரிக்க புதிய விரைவு நீதிமன்றத்தை டில்லி உயர் நீதிமன்றம் அமைத்தது. மேலும் மத்திய
அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) பின்வரும் மூத்த நிலை நியமனங்கள் மற்றும் இன்-சிட்டு மேம்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:
செயலாளர் நிலை நியமனங்கள்
1.ஸ்ரீ கடிகிதலா ஸ்ரீனிவாஸ் (IAS, GJ:89) - செயலாளர், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (DoNER)
2.ஸ்ரீ வினீத் ஜோஷி (IAS, MN:92) - செயலாளர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
3.ஸ்ரீ நரேஷ் பால் கங்வார் (IAS, RJ:94) செயலாளர், உயர் கல்வித் துறை, கல்வி அமைச்சகம்
4.ஸ்ரீ பியூஷ் கோயல் (IAS, NL:94) - பொதுச் செயலாளர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
5.ஸ்ரீ டி.கே. அனில் குமார் (IAS, KN:95) - செயலாளர், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம்
6.ஸ்ரீ சுஷில் குமார் லோஹானி (IAS, OR:96) – சிறப்புப் பணி அதிகாரி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும்)
7.திருமதி. அர்ச்சனா வர்மா (IAS, AM:96) - பணி இயக்குனர், தேசிய நீர் இயக்கம் (செயலாளர் பதவி); உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும்
8.ஸ்ரீ கேசவ் சந்திரா (IAS, AGMUT:96) - செயலாளர், சுரங்க அமைச்சகம்
9.திருமதி. டி. தாரா (IAS, GJ:95) - செயலாளர், மூலதன மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்
10.ஸ்ரீ பி. ராஜேந்தர் (IAS, BH:96) - இயக்குனர், LBSNAA, DoPT (செயலாளர் பதவி)
11 ஸ்ரீ சந்திர பூஷன் குமார் (IAS, AGMUT:95) - செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
12.ஸ்ரீ சதேந்திர சிங் (IAS, JH:95) - செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
13.ஸ்ரீ சுசீந்திர மிஸ்ரா (IDAS:92) - செயலாளர், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்
செயலாளராகப் பதவி உயர்வு
14.ஸ்ரீ மிருதுஞ்சய் குமார் நாராயண் (IAS, UP:95) - இந்தியப் பதிவாளர் ஜெனரல் & மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர்
15.ஸ்ரீ சந்தோஷ் குமார் யாதவ் (IAS, UP:95) - தலைவர், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI)
16.ஸ்ரீ ராஜீவ் சிங் தாக்கூர் (IAS, RJ:95) - ஆலோசகர், NITI ஆயோக்
17.ஸ்ரீ திலீப் குமார் (IAS, PB:95) - இயக்குநர் ஜெனரல் (பயிற்சி), திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் இந்த நிலையில் டெல்லியில் மூன்று மாதங்களுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருகிறது
டெல்லி கமிஷனருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு
இந்த சட்டத்தின் கீழ் தேசத்துக்கு எதிராக செயல்படும் எவரையும், வழக்குகள் இன்றி ஓர் ஆண்டுகள் சிறை படுத்த முடியும்.






கருத்துகள்