முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் கோவில் நிலங்கள் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஏற்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு:

கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு செய்ய அனுமதி வழங்கயதற்கு எதிராக அவசர வழக்கு தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை

கோவில்களின் 3,084 ஏக் கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி அளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவசர வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது 



திருத்தொண்டர் சபை அறக் கட்டளையின் அறங்காவலர் ராதா கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள தகவல் :-

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப் பிரமணிய சுவாமி கோவில்,

குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவை.

இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர் பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது.

அதன் விளைவாக மேற் கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை ஆணை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அது தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்குச் சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை ஆக்கிமித்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 9- ஆம் தேதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே |

மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்  இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முன்பாக நேற்றே ஆஜரான ராதாகிருஷ்ணன் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர்  முன் முறையிட்டார்.

அதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். WP(MD) 19954/2026 A.RADHAKRISHNAN    VS   THE SECRETARY TO GOVERNMENT AND 25 OTHERS. M/S.A.RADHAKRISHNAN (PARTY-IN-PERSON) WMP(MD) 14721/2026    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் மாதம் .,11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 



 இந்த நிலையில் பழனி கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு: சார் பதிவாளர் பணியிடை நீக்கம்  பழனி தண்டபாணி

சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்த மான நிலம் தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பதிவுத்துறை சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி மலையடிவாரத்தில் ஸ்ரீ தண்ட பாணி சுவாமி கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூபாய் .100கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.



இந்த நிலத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிர்வாகம் விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதன் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக் கட்டளை நிலத்தை பழனி கோயில் நிர்வாகம் கையகப் படுத்தியது. மேலும், இதற்கு தக்காராக இணை ஆணையர் மாரிமுத்து நியமனம்செய்யப் பட்டார்.

இதையடுத்து, அவர் ஆக் கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றினார். 

இந்த நிலையில், கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய 1.40 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கு விற் பனை செய்தனர். ரூபாய் .2 கோடி நிலம் என குறைவாக மதிப்பீடு செய்து, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இருவரது பெயர்களிலும் நிலம் பதிவு செய்யப்பட்டது. பழனி சார் பதிவாளர் விடு முறையிலிருந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இந்த நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், பழனி கோயில் தரப்பில் பழனி 

சார் பதிவாளர்,பத்திரப்பதிவுத்துறை ஆணையர், துணை ஆணையர், திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. பழனி அடிவாரம் காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

முறைகேடான இந்த நில பத்திரப் பதிவு தொடர்பாக பல்வேறு கட்சியினரும், ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல் கட்டமாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சார் பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களே அது கோவில் சொத்து என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்




W.P.(MD) No.64 of 2018-ல் 23.10.2019 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சம்பந்தப்பட்ட நிலங்கள் கோவில் நிலங்கள் என்றும், அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, இடைக்காலத் தடை மனுக்கள் (Injunction Applications) மூன்று மாதங்களுக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட சிவில் வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இதனைச் செய்யும்போது, W.P.(MD) No.64 of 2018 மற்றும் Cont.P.(MD) No.371 of 2024 ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மேலும், C.R.P.(MD) No.3750 of 2025 வழக்கில், மனுதாரரே தாம் கோவில் நிலத்தில் குத்தகைதாரர் (Tenant) என்பதை அதிகாரிகளிடம் எழுத்து மூலம் ஒப்புக்கொண்டிருப்பதால், அவருக்கு சாதகமான எந்த உத்தரவையும் வழங்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.



C.R.P.(MD) No.317 of 2026 வழக்கில், மனுதாரர்களே வழக்குச் சொத்து கோவில் சொத்து என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.  இவ்வாறு   உள்ள நிலையில்         மேலும் மற்றும் ஒரு ஆலயமான பழனி அருளமிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அருகாமையில், பழனி நகராட்சியின் 3-ஆவது வார்டு, 25-ஆவது பிளாக்கில், சர்வே எண்கள் 998 மற்றும் 999-இல் உள்ள 1.40 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை, கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி அன்று பழனி அருகே உள்ள வயலூரிலுள்ள குமாரபாளையத்தை சேர்ந்த K.வெள்ளத்துரை மற்றும் பழனி அமரபூண்டி கிராமத்துள்ள டி.கே.என் புதூரைச் சேர்ந்த D.சேதுபதி ஆகிய மூவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதும்;.இதற்கு உடந்தையாகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலம் ஆட்சேபனைக்குரியது என அறநிலையத்துறை ஆணை இருப்பது தெரிந்தும், யாருடைய தூண்டுதலின் பேரில் அல்லது ஆதரவின் பேரில் இந்த நில மோசடி நடந்துள்ளது என்பது தமிழ்நாடு ஹிந்து மக்களுக்குத் தெரிந்தாக வேண்டிய விபரமாகும, இந்தக் குற்றச்சாட்டு வெளியானவுடன்,அடிமட்ட அளவில் சார்பதிவாளர் உள்ளிட்ட ஒருசிலர் பெயரைக் குறிப்பிட்டு வெறுமனே ஒரு முதல் தகவல் அறிக்கை(FIR)பதிவு செய்யப்பட்டுள்ளதன்மூலம் உண்மை வெளிவராது. சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மூன்றாண்டுகள் ஓட்டன்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். 1.4 ஏக்கர் நிலத்தை கிரையம் பெற்ற இருவரிடம் ரூபாய் .2 கோடி பணத்திற்க்கு வாய்ப்பேயில்லை! என்பதே தற்போது புலனாய்வுத் தகவல் தரும் உண்மை நிலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...