முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குடியரசுத் தலைவர் ஏற்பு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி அதை குடியரசுத் தலைவர் மாளிகை ஏற்றுக்கொண்டது


இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த நீட் உள்ளிட்ட தேர்வு கசிவு ஊழல்களுக்கு பொறுப்பேற்று அவர் விலகியிருப்பது, பாஜக அரசின் கல்வித் துறை நிர்வாகத்தின் முழுமையான தோல்வியை வெளிச்சமிட்டுக் காட்டும் நிகழ்வு பாஜக அரசுக்கு ஒரு பின்னடைவு அதில் சந்தேகமில்லை.


பல நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்த மாணவர் போராட்டங்கள், கரப்பான் பூச்சி ஜனதா போன்ற சில இயக்கங்களின் உறுதி நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் பாஜக எதிர் நிலை ஆதரவு ஆகியவை இறுதியில் அரசை பின் வைத்துள்ளன. “தேசவிரோத சக்திகள்” என முத்திரை குத்தும் அரசின் முயற்சிகள் தோற்றுப்போனதோடு, மாணவர்களின் உண்மையான கோபத்தை அடக்க முடியவில்லை. தர்மேந்திரப் பிரதான் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தேர்வு அமைப்புகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான குளறுபடிகள், லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைப் பாதித்ததற்கு பொறுப்பேற்காமல் நீண்ட நாட்கள் இழுத்தடித்த அரசின் அணுகுமுறை, பிரதமர் நரேந்திர மோடியின் “வளர்ச்சி” மற்றும் “சீர்திருத்தம்” எனும் பிம்பத்தை  சிதைத்தது.


தர்மேந்திரப் பிரதான் ராஜினாமா, பாஜக அரசின் உள்ளார்ந்த பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு துறை அமைச்சர் மீது இவ்வளவு பெரிய அழுத்தம் விழும்போது, அது பிரதமரின் தலைமைத்துவத்தின் மீதே கேள்வியை எழுப்புகிறது. கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாக பெருமை பேசிய அரசு, அடிப்படை பாதுகாப்பு மற்றும் நேர்மையை உறுதி செய்யத் தவறியது. மாணவர்கள் பெயரில் தெருக்களில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, மக்களுக்கும் அரசிற்கும் இடையே உள்ள தூரத்தைக் காட்டுகிறது. இப்போது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது எளிதல்ல. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மற்றொரு உயர் பதவியாளர் விலக வேண்டிய நிலை உருவாகியிருப்பது, ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும்.

இச் சம்பவம் பிரதமருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும். மக்களின், குறிப்பாக இளைஞர்களின் குரல்களைப் புறக்கணித்து, அதிகாரத்தை தக்கவைக்க முயன்றால், அது பின்னடைவுகளைத் தான் கொண்டு வரும். தேர்வு சீர்திருத்தங்கள், மாணவர்களின் எதிர்காலம், கல்வியின் தரம் ஆகியவை அரசியல் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவை. தர்மேந்திரப் பிரதான் ராஜினாமா செய்திருந்தாலும், இந்த ஊழல் மற்றும் குளறுபடிகளுக்கு உண்மையான பொறுப்புக் கூறல் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. பாஜக அரசு இச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால், இன்னும் பல பின்னடைவுகள் அதன் காத்திருக்கும். மாணவர்களின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி; ஆட்சியின் தோல்வி, தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதே .   நீட் குறித்து பப்ளிக் ஜஸ்டிஸ் இதழின் ஒரு பார்வை :-

 நீட் தேர்வுக்கான வெளியிடப்பட்ட அரசாணை  21.12.2010 ;  MCI -31(1)/2010-MED/49068, அதாவது 

2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் உடன் திமுக  கூட்டணி  மத்திய சுகாதாரத் துறை  அமைச்சர் குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ், இணை அமைச்சர் காந்தி செல்வன் - திமுக ஆனால் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை நீட் அமலுக்கு வரவில்லையே. அமலுக்கு வராததற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையும், 2013 ஆம் ஆண்டில் நீட் அரசாணையை செல்லாது என்று அறிவித்ததும். வழக்கு எண் - TC – 98/2012 ன் படி  தீர்ப்பு வெளியான தேதி :18/07/2013 –ஆகும் 


தீர்ப்பில் நீட் அரசாணை செல்லாது ; நீட் அரசாணை ரத்து செய்யப்படுகிறது. என்பதே, 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில். தமிழகத்திலிருந்து 25000 மேற்பட்ட மாணவர்கள் முதல் நீட் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன . ஆனால் உச்ச நீதிமன்றம் நீட் அரசாணை செல்லாது என்று அறிவித்ததால் , அந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய பட்டு,  +2 அதாவுது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெற்றது. இந்த நிலையில் 

2013 ஆம் ஆண்டு நீட் அரசாணை ரத்து செய்த பின்பும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அந்த  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு (Review Petition) தாக்கல் செய்தது. REVIEW PETITION (C)NOS.2159-2268 OF 2013 தீர்ப்பு, REVIEW PETITION (C)NOS.2159-2268 OF 2013 தேதி : ஏப்ரல் 11, 2016. தீர்ப்பில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், " இதே போன்ற வழக்கு - அதாவது மருத்தவ கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரணையில் உள்ளதால், ஏற்கனவே நீட் தேர்வு சம்பந்தப் பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு திரும்பப் பெறப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் விளைவு. 

மீண்டும் நீட் அரசாணைக்கு உயிர் கொடுக்கப்படுகிறது. அதாவது 2013 ஆம் ஆண்டில் காங்கிரஸ் திமுகவின் கூட்டணி கட்சி சார்பில் போடப்பட்ட சீராய்வு மனுவின் விளைவாக நீட் திரும்பவும் அமலுக்கு வருகிறது.



2016-17 ஆம் கல்வி ஆண்டில்  தனியார் மருத்தவக் கல்லூரிகளுக்கும் , 2017-18 ஆம் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் மருத்துக்வ கல்லூரிகளுக்கும் அமல்படுத்த பட்டது. அதாவது 2013  ஆம் ஆண்டில் காங்கிரஸ்  உச்ச நீதிமன்றத்தில் போட்ட சீராய்வு மனுவின் காரணமாக 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நீட் அரசாணை 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் அமல் படுத்தப்பட்டது.

அப்படி ஒரு ஆண்டு மாநில அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு அளித்ததையும் கடுமையாக எதிர்த்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்.

Modern Medical College C.A. No. 4060  of 2009 : Judgment Dt. May -2 – 2016.

CMC Final Judgment – Dt. T.C. 98 of 2012 : April, 29- 2020.



 இப்பொழுது மத்திய அரசு நினைத்தால் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பழைய முறை (+2 மதிப்பெண் ) அடிப்படையில் மருத்துவ அட்மிஷன் செய்ய முடியுமா.

சட்டத்தின் மூலம் மாற்றம் செய்தாலும், உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்பு கொள்ள வேண்டும். உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு முரணாக சட்டம் இயற்றினால் , சட்டம் ரத்து செயப்படுவதற்கே வாய்ப்பு அதிகம். இதுவே உண்மை நிலை, கரப்பான் பூச்சி போராட்டம், நடந்தது நீட் தேர்வுக்கு மட்டுமே சட்ட வழியில் சிந்தித்து போராட்டம் செய்யாமல் அரசை எதிர்க்கும் ஏற்கனவே 50 ஆண்டுகள் தவறு செய்த காங்கிரஸ் போன்ற கட்சிகள் குறை கூறுவது ஏற்பு இல்லை  மேலும் அமைச்சர் பதவி விலகல் விவகாரம் வேறு, நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் வேறு அது சட்ட விசாரணை நடவடிக்கையில் உள்ளது.அரசியல் நிலைப்பாடு மாறுபட்டதால்  காங்கிரசுக்கு ஆதரவான திமுகவின் 

வலுத்த குரல் தற்போது தலைநகரில் கேட்கவில்லை. திமுக அமைதிக்குப் போயுள்ளது.

தமிழ்நாடு விசிக தலைவர் "மதசார்பின்மை ஜனாதன எதிர்ப்பு என்பதில் எப்போதும் திமுக உறுதியாக இருப்பதால் திமுகவுடனான எங்கள் நட்பு நீடிக்கிறது, தவெக அமைச்சரவையில் இடம்பெற்று விட்டதால் மட்டுமே திமுகவுடன் நட்பு இல்லை என்றாகி விடாது" என்று சொல்லி வந்தாலும் தலைநகரில் BJP யால் நொறுக்கப்படும் CJP அமைப்பிற்காக அவரால் தனிக்குரல் எழுப்ப முடியவில்லை. BJP யை எதிர்த்து குரல் எழுப்புவதெல்லாம் பெரிய விஷயம். காங்கிரஸ் ராகுலுக்கு ஆறுதல் சொல்லியோ, ஆதரவாய் நின்றோ கூட, குரல் கொடுத்திருக்கலாம்.

இந்திய அளவில் பாஜகவின் மதவாத எதிர்ப்பு மற்றும் ஜனாதன எதிர்ப்பு முகமான ராகுல்காந்திக்கு ஆதரவுக்குரல் கொடுக்க தென்னாட்டில் தற்போது ஆள் இல்லை. திமுகவில் இருந்து தவெக கூட்டணிக்குள் இடம் பெயர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட சில சிறிய கட்சிகளின் குரல்களும் வெளியில் பெரிய அளவில் கேட்கவில்லை. 

CJP க்கு ஆதரவாக கேட்கும் குரல் BJP க்கு எதிரான குரல் மட்டுமல்ல, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து முன்னேறிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்துக்கான ஆதரவுக்குரல். 

GEN சி நிலைப்பாடு என்று அதற்குப் பெயர் வைத்துக் கொண்டாலும் சரி என்பதே பலரின் வாதம் .

 கொள்கை எதிரி அரசியல் எதிரி குறித்து தெளிவான கொள்கையோடு  இருக்கிற புதிதாக வந்து தமிழ்நாடு ஆட்சியில் உள்ள தவெகவும் வாய் திறக்கவில்லை.

காங்கிரசின் ராகுல்காந்தியை இந்த நேரத்தில் தாங்கிப்பிடிப்பதும் ஆதரிப்பதும் மதவாத எதிர்ப்பு மற்றும் ஜனாதன எதிர்ப்பில் நாங்கள் உறுதியாய் நிற்கிறோம் என்பதற்காக  மட்டும் அல்ல, நாங்கள் இங்குதான் நிற்கிறோம் என்று உலகத்துக்கு சொல்வதற்காகவும்தான். பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் கைகோத்து நிற்கும் அனைத்து கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை திமுக மிக உறுதியாய் செய்யும். ஜென்டில்மென் பாலிடிக்ஸ்,  நிலைப்பாடுகளை ஒருபோதும் திமுக கை விடாது.என்பதால் தொண்டர்கள் தான் எதிர்காலத்தில் திமுகவைக் கைவிடுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...