தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால் காலமானார்
கடந்த இருபது வருடங்களாக பலருக்குச் சிறந்த தொல்லியல் வழிகாட்டி. 'மரபுசார் ஆர்வலர் குழு' உருவாக்கிய போது, முதல் ஆளாக வந்து வழிகாட்டியவர்.
03.07.2026 ல் அஞ்சலி செலுத்த: https://goo.gl/maps/JdkhG35vAjHc7UPP6?g_st=aw பூகோள வரைபடப் பாதை இறுதிச் சடங்கு நிகழ்வு
தமிழ்நாடு தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளரும், தொல்லியல் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான முனைவர் சு. ராஜகோபால் மறைவையொட்டி, அவருடைய இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை 04.06.26 காலை 10.00 மணியளவில் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் அருகிலுள்ள நகரத்தார் விடுதியில் நடைபெறவுள்ளது.
அவரது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி, கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தியவர். 1950-ல் பிறந்தவர், 29 ஆய்வு நூல்களையும் 60-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்நாட்டு வரலாற்றிலும், கல்வெட்டு ஆய்விலும் இவரது பங்களிப்பு மிகச் சிறப்பானது, தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றிய இவர், கல்வெட்டுக் குறித்த ஆர்வத்தை இளைஞர்களிடம் உருவாக்கவும், அவற்றை வாசிக்கும் நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கவும் பெரிதும் உதவினார். தொல்லியல் கழகத்தின் 'ஆவணம்' இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். கல்வெட்டுகள் சார்ந்த பண்டைய தமிழர் நாகரிகம் மற்றும் சமூக வரலாற்றில் இவரது ஆய்வுகள் மிக முக்கியமானவை.கௌரவம்: இவரது வரலாற்றுப் பணிகளைப் பாராட்டி, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் கடந்த ஆண்டு 'திசையாயிரம்' எனும் பணிப் பாராட்டு நூலை வெளியிட்டு கௌரவித்தது.

கருத்துகள்